பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்
October 3, 2023 2025-01-11 13:57பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்
அறநூல்
ஆசாரக்கோவை
- ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
- இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
- ஆசாரக்கோவை என்பதற்கு “நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு” என்பது பொருள்.
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.
ஆசாரம் – ஒழுக்கம்.
கோவை – அடுக்கிக் கூறுதல்.
- பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்
- பிறர் செய்யும் தீமைகளைப் பாெறுத்துக் காெள்ளுதல்
- இனிய சொற்களைப் பேசுதல்
- எவ்வுயிருக்கும் துன்பம் செய்யாதிருத்தல்
- கல்வி அறிவு பெறுதல்
- பிறருக்கு உதவுதல்
- அறிவுடையவராய் இருத்தல்
- நற்பண்புகள் உடையவரோடு நட்புக் காெள்ளுதல்
ஆகிய எட்டும் நல்லொழுக்கத்ளத விதைக்கும் விதைகள் ஆகும்.
ஒழுக்க நெறிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
புறநூல்
களவழி நாற்பது
ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப் பெறுவது களவழி.
இந்நூல் முழுவதும் யானைப் போர் பற்றியும் அழகிய வீரக் கற்பனைகளைத் தருகிறது.
அகநூல்கள்
*கார் நாற்பது
அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறிய நூல்.
கார்காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ளன.
முல்லைத் திணைக்குரிய அகப்பொருள் இதில் சித்தரிக்கப்படுகின்றது.
முல்லை நிலத்தின் முதல் கரு உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.
*ஐந்திணை ஐம்பது
ஆசிரியர் பொறையனார்.
அகத்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நூல் சிறந்த செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.
“ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்”
என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.
*ஐந்திணை எழுபது
ஆசிரியர் மூவாதியார்.
ஒவ்வாரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து திணைக்குமாக 70 பாடல்கள் அமைந்துள்ளன.
இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.
*திணைமாலை நூற்றைம்பது
ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார்.
ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன.
அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்.
கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள் நூல்களில் இதுவே பெரிய நூல் ஆகும்.
கைந்நிலை (ஐந்திணை அறுபது)
ஆசிரியர் புல்லங்காடனார்.
இதில் 12 முதல் 60 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.
*திணைமொழி ஐம்பது
ஆசிரியர் கண்ணந் சேந்தனார்.
அகத்தினை ஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களை அமைந்த நூலாததலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது.
இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுறா முன்றிலோ இல்* – முன்றுறை அரையனார்
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது நானூறு பாடல்களைக் கொண்டது.
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.
இந்நூலின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.
பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்