Blog

பரிதிமாற்கலைஞர்

78
Old Syllabus

பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர்
பரிதிமாற் கலைஞர்

 

 

வாழ்க்கைக்குறிப்பு
  • இயற் பெயர்: சூரிய நாராயண சாஸ்திரி.
  • ஊர்:  மதுரை அடுத்துள்ள விளாச்சேரி
  • பெற்றோர்: கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மையார்.
  • தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்.
  • இவர், தனது தந்தையிடம் வடமொழி கற்றார்
  • இவர் தமிழ் கற்றது = மகாவித்துவான் சபாபதியிடம்
  • சென்னை கிறித்துவக் கல்லோர்ரியில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
  • எப்.ஏ (A – First Examination in Arts ) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று “பாஸ்கர சேதுபதி மன்னரிடம்” உதவித்தொகை பெற்றார்
  • சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்
  • 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழ் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
  • மறைமலை அடிகளின் ஆசிரியர்
  • சோனட் என்ற 14 அடி ஆங்கிலப் பாட்டைப் போன்று பல பாடல்கள் எழுதி “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூலை வெளியிட்டார்
  • “அங்கம்” என்ற நாடக வகைக்கு மானவிசயம் என்ற நாடக நூலை படைத்தார்
  • கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் தனது நாடகங்களில் தாமே நடித்தார்
  • சி.வை.தாமோதரப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க “மதிவாணன்” என்ற புதினம் படைத்தார்
  • இவர் 33 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்
  • நவம்பர் 2, 1903-இல் பரிதிமாற் கலைஞர் மறைந்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்
இயற்றமிழ் மாணவர்:
  • தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை “இயற்றமிழ் மாணவர்” எனப் பெயரிட்டு அழைத்தார்.
பரிதிமாற்கலைஞர் சிறப்பு
  • சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரை தனிப்ப்பசுரத் தொகை என்னும் நூலை வெளியிடும் போது பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார்
  • இவரின் தனிப்பாசுரத் தொகை என்னும் நூலினை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
  • இவரின் தமிழ்ப்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு சி.வை.தாமோதரம்பிள்ளை இவருக்கு “திராவிட சாஸ்திரி” என்ற பட்டம் வழங்கினார்.
  • உயர்தனிச் செம்மொழி (Classical Language), தகுந்தவை தங்கி நிற்றல் (survival of the fittest) என்ற கலைச் சொற்களைப் படைத்தவர்
  • முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என அறிவித்தவர்
  • தமிழை “உயர்தனிச் செம்மொழி” என்று முதன் முதலில் தன பேச்சின் மூலம் கூறியவர் இவரே. பின்னாளில் 2004 ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது
  • இவரது பதின்மூன்று நூல்களும் 2006 டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன
  • 2007 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது
மதுரைச் தமிழ்ச்சங்கம்:
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.
பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
கம்பராமாயண உவமை:
பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் படித்த பொது நடந்த நிகழ்வு.
கல்லூரி முதல்வரும் ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் இயற்றிய “ஆர்தரின் இறுதி” வ்ன்னும் நூலில் இருந்து ஒரு பாடலி சொல்லி அதில் படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்டது.
தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா என அவர் கேட்க, பரிதிமாற் கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள “விடுநனி கடிது” என்னும் பாடலை பாடி பொருள் கூறினார்.
பரிதிமாற்கலைஞர் சிறப்பு பெயர்கள்
  • தமிழ் நாடக பேராசிரியர்
  • திராவிட சாஸ்திரி (சி.வை.தாமோதரம்பிள்ளை)
  • தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்
பரிதிமாற் கலைஞர் நூல்கள்
  • பாவலர் விருந்து
  • தனிப்பாசுரத் தொகை
  • தமிழ் மொழி வரலாறு
  • சித்திரக்கவி
  • மதிவாணன் (புதினம்)
  • உயர்தனிச் செம்மொழி (கட்டுரை)
  • முத்ராராட்சசம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்
  • தமிழ் புலவர் சரித்திரம்
  • தமிழ் வியாசங்கள்
பதிப்பித்த நூல்கள்
  • தமிழ் வியாசகங்கள் (கட்டுரை தொகுப்பு)
  • சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
  • மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
  • புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
  • உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
பரிதிமாற் கலைஞர் நாடகங்கள்
  • ரூபாவதி அல்லது காணாமல் போன மகள் (நாடக நூல்)
  • கலாவதி (நாடக நூல்)
  • மானவிசயம் (நாடக நூல், களவழி நாற்பது தழுவல்)
  • நாடகவியல் (நாடக இலக்கண நூல்)
  • சூர்பநகை (புராண நாடகம்)
இதழ்கள்
  • ஞானபோதினி (மு.சி. பூர்ணலிங்கம் என்பவருடன் இணைந்து நடத்தியது)
  • விவேக சிந்தாமணி

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories