Blog

பல பொருள்‌ தரும்‌ ஒரு சொல்லைக்‌ கூறுக

Class 24 சொல்லகராதி

பல பொருள்‌ தரும்‌ ஒரு சொல்லைக்‌ கூறுக

மா என்னும் சொல் – மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள்,மேன்மை, வயல், வண்டு

அகன்சுடர்    – சூரியன், விரிந்து சுடர், அகன்ற சுடர்

ஆர்கலி          – கடல், மழை, ஆரவாரம், பேரொலி, வெள்ளம்

கட்புள்             – பறவை, ஒரு புலவன்

கொடுவாய் – புலி, வளைந்த வாய், பழிச்சொல்

திருவில்         – வானவில், இந்திரவில்

“மரமது (1) மரத்தில் (2) ஏறி                                              –            (1) – அரசன் (ஆலமரம்);  (2) – மா – குதிரை (மாமரம்)
மரமதைத்(3) தோளில் வைத்து                                      –            (3) – வேல்  (கருவேலம்)
மரமது (4) மரத்தைக் (5) கண்டு                                      –            (4) – அரசன் (5) – புலி (வேங்கை) 
மரத்தி (6) னால் மரத்தைக் (7) குத்தி                            –            (6) – வேல்; (7) புலி (வேங்கை)
மரமது (8) வழியே சென்று                                                –            (8) – காட்டு வழி  
வளமனைக் கேகும் போது
மரமது (9) கண்ட மாதர்                                                     –            (9) – அரசன்
மரமுடன் (10) மரம் (11) எடுத்தார்”                                 –           (10) – (ஆலமரம்); (11) – அத்தி (அத்தி மரம்) ஆல் + அத்தி = ஆரத்தி

பாடலில், மரம் என்னும் சொல், இடத்திற்கேற்பப் பொருள் தருவதாய் 11 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

தால் – தாலாட்டு, தாலு, நாக்கு

உழுவை – புலி, ஒருவகை மீன், தும்பிலி

அகவுதல் – அழைத்தல், ஆடல், கூத்தாடல்

ஏந்தெழில் – மிக்க அழகு, மிக்க வனப்பு

அணிமை – சமீபம், அருகு, நுட்பம், நுண்மை

அவிர்தல்  – ஒளி செய்தல், பீரல், விரிதல், பாடம் செய்தல்

அழல்  –  உட்டணம், எருக்கு, தீ, நெருப்பு, கள்ளி, கேட்டை நாள், கொடுவேலி

உவா –  இளமை, இளையோன், கடல், நிறைவு, பூரணை, யானை

கங்குல் –  இரவு, இருள், பரணி நாள்

கனலி –  சூரியன், கள்ளி, கொடுவேலி, கரியன், நெருப்பு

வருத்தனை – பிழைப்பு, தொழில், பெருகுதல், மானிய உரிமை, சம்பளம்

துரிஞ்சில் – வெளவால் வகை, சீக்கரி மரம்

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories