பழமொழிகள்
October 6, 2023 2025-01-11 13:57பழமொழிகள்
பழமொழிகள்
-
புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?
-
அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது.
-
வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை
-
எறும்பு ஊரக் கல்லும் தேயுங்கிற
-
உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்.
-
அடை மழை விட்டாலும் செடி மழை விடாது
-
நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டமுங்கிற
-
குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம்.
-
சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?
-
நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?
-
ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
-
ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்?
-
காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
-
இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம்.
-
நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்
-
அவப்பொழுது போக்குவதிலும் (வீணாகப் பொழுதுபோக்குதல்) தவப்பொழுது நல்லதும்பாங்க.
-
பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?
-
அதிர அடிச்சா உதிர விளையும்.
-
குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி
-
அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்
-
அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல
-
தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம
-
அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது
-
அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்
-
முயற்சி திருவினையாக்கும்
-
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
-
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்
-
அறிவே ஆற்றல்
-
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
-
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
-
வருமுன் காப்போம்
-
சுத்தம் சோறு போடும்
-
பருவத்தே பயிர் செய்
-
பசித்து புசி
- இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
- சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
- கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval
மொழி பெயர்க்க : எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது
பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek
மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்
பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்
3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
மொழி பெயர்க்க : அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்
பழமொழி : நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை
4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson
மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.
பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும்
1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.
விடை : நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.
2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
விடை : தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.
3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
விடை : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்
4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது
விடை : கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.
- நாட்டுப்புறத் தமிழ் அறிவோம்
பின்வரும் பழமொழிகளைப் படியுங்கள். (இவற்றைச் சொலவடைகள் என மக்கள் சொல்வார்கள்.)
1. கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க ( ஆனம் – குழம்பு)
2. அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா ? (நாழி – தானியங்களை அளக்கும் படி; அகவிலை – தானியவிலை)
3. திறந்த வீட்டுக்குத் திறவுகோல் எதுக்கு ? ( திறவுகோல் – சாவி)
“நெல்லுக்கு நண்டோட; கரும்புக்கு ஏரோட; வாழைக்கு வண்டியோட; தென்னைக்குத் தேரோட”
“பருவத்தே பயிர் செய், ஆடிப்பட்டம் தேடி விதை”
“கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்”
பழமொழி பொருள்
தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச் சேலை. – உறவுமுறை
ஆடிப்பட்டம் தேடி விதை. – உழவு
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. உறவுமுறை – அறிவுரை
தை பிறந்தால் வழி பிறக்கும். – நம்பிக்கை
பசியாமல் இருக்க வரந்தருவேன், கொஞ்சம் பழையது இருந்தால் போடு. – நகைச்சுவை