Blog

பழமொழிகள்‌ பொருளறிதல்‌

Class 39 வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன்

பழமொழிகள்‌ பொருளறிதல்‌

  • புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?
  • அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது.
  • வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை
  • எறும்பு ஊரக் கல்லும் தேயுங்கிற
  • உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்.
  • அடை மழை விட்டாலும் செடி மழை விடாது
  • நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டமுங்கிற
  • குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம்.
  • சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?
  • நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?
  • ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்?
  • காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
  • இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம்.
  • நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்
  • அவப்பொழுது போக்குவதிலும் (வீணாகப் பொழுதுபோக்குதல்) தவப்பொழுது நல்லதும்பாங்க.
  • பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?
  • அதிர அடிச்சா உதிர விளையும்.
  • குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி
  • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்
  • அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல
  • தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம
  • அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது
  • அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்
  • முயற்சி திருவினையாக்கும்
  • அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
  • சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்
  • அறிவே ஆற்றல்
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
  • வருமுன் காப்போம்
  • சுத்தம் சோறு போடும்
  • பருவத்தே பயிர் செய்
  • பசித்து புசி
  • இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
  • சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
  • கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
  • கற்றோர்க்குச் சென்ற  இடமெல்லாம் சிறப்பு
  • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.
  • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.
  •  மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்
  • கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.
  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை
  • விருந்தும் மருந்தும் மூன்று வேளை
  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories