Blog

பாஞ்சாலி சபதம்

55
Old Syllabus

பாஞ்சாலி சபதம்

நூல்
பாஞ்சாலி சபதம்
ஆசிரியர்
பாரதியார்
பாடல்களின் எண்ணிக்கை
2 பாகங்கள், 5 சருக்கங்கள், 412 பாடல்கள்
பா வகை
சிந்து
நூற்குறிப்பு
  • “முப்பெரும் பாடல்கள்” எனப்படும் மூன்றில் ஒன்று
  • சிந்து என்னும் பாவகையில் எளிய தமிழ்நடையினை கொண்டது.
  • இந்திய விடுதலைப் போராட்டத்தை பாரத பேராகவும், பாஞ்சாலியை பாரதத்த தேவியாகவும் உருவகப்படுத்தி படைக்கப்பட்ட நூல்
  • பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களை கொண்டது. ஐந்து சருக்கங்கள், 412 பாடல்கள் உள்ளன.
  • முதல் பாகத்தில் சூழ்ச்சிக் சருக்கம், சூதாட்டச் சருக்கம் என இரு சருக்கங்கள் உள்ளன.
  • இரண்டாம் பாகத்தில் அடிமைச் சருக்கம், துகில் உரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என மூன்று சருக்கங்கள் உள்ளன.
  • பாஞ்சாலி சபதம் 1919-லேயே பாரதி எழுதி முடித்துவிட்டார் என்பது 05.09.1919-ல் பாரதியார் வயி.ச.சண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
  • பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகம் 1912-ல் பாரதி வாழந்த காலத்திலேயே வெளிவந்தது.
  • 1924-ல் முழு நூலையும் பாரதி பிரசுராலயம் வெளியிடப்பட்டது.
மேற்கோள்
பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கும்நாடு
பெண்கள் எல்லாம் அரம்பையர்போல் ஒளிரும்நாடு
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
வேள்விஎனும் இவையெல்லாம் விளங்கும் நாடு
சோரமுதல் புன்மை ஏதும் தோன்றா நாடு
தொல்உலகின் முடிமணிபோல் தோன்றம் நாடு
பாரதர்தம் நாடு”
– விதுரன் கூற்று
“தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும் எனும் இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்”
-அர்சூனன் கூற்று
  • பாரதியார் ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதினார்.
  • நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியகவி, மகாகவி என்று போற்றப்படுகிறார்
“பாட்டுக் ஒரு புலவன் பாரதியடா – அவன்
பாட்டை பண்ணோடு ஒருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்தப் போனேனடா – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பையடா”
– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  • பாதியார் பாஞ்சாலி சபதத்தை, தமிழ் மொழிக்கு அழியாத உயிரும், ஒளியும் இயலுமாறு இனிப்பிறந்த காவியங்கள் செய்யப் போகின்ற வரகவிகளுக்கும், அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகின்ற பிரபுக்களுக்கும் இந்நூல் பாத காணிக்கையாக செலுத்துகின்றேன்” என்று சமர்ப்பணம் செய்துள்ளார்.
  • எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்கு உயிர் தருவோன் ஆகின்றான் – பாரதி எழுதிய முகவுரைப்பகுதி.
  • வட மொழியில் வியாசர் எழுதிய மகாபாரதக் கதையில் பரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் சூளுரையை மையமாகக் கொண்ட பாரதியார் படைத்ததுதான் பாஞ்சாலி சபதமாகும்.
  • பாஞ்சாலி சபதம் முழுவதும் சிந்த என்ற பாவகையைச் சார்ந்தது.
  • சிந்து : இசைபாட்டிற்குரிய சரணங்களின் கண்ணிகளை மட்டும் கொண்டது. இது பாடப்படும் இடம் நோக்கி காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, வழிநடைச் சிந்து என்று அழைக்கப்படும்.
  • பாஞ்சாலி சபதம் முழுவதும் நொண்டிச்சிந்து என்ற பாவகையைச் சார்ந்தது.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories