பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்
August 29, 2023 2025-05-13 12:07பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்
புணர்ச்சி
வாழைமரம், வாழைப்பழம்.
முதல் சொல்லில் வாழை + மரம் – வாழைமரம் என இருசொற்கள் இணைந்து எத்தகைய மாற்றமும் இல்லாமல் அப்படியே சேர்ந்துள்ளன. இரண்டாவது சொல்லில் வாழை + பழம் – வாழைப்பழம் என இருசொற்கள் இணையும்போது வல்லின மெய் (ப்) சேர்ந்து வந்துள்ளது. இவ்வாறு இருசொற்கள் இணைவதற்குப் புணர்ச்சி என்பது பெயர். முதல் தொடரில் இயல்புப்புணர்ச்சியும் இரண்டாவது தொடரில் விகாரப்புணர்ச்சியும் இடம்பெற்றுள்ளன.
பொன் + வளையல் – பொன்வளையல்; மலர் + மாலை – மலர்மாலை; பனை + மரம் – பனைமரம்.
இணையும் இருசொற்களில் முதல்சொல் நிலைமொழி எனப்படும். நிலைமொழியின் இறுதி, புள்ளிஎழுத்தாக (மெய்யாக) இருந்தால் மெய்யீறு என சொல்லுதல் வேண்டும். உயிர்மெய்யாக இருந்தால், உயிரீறு என சொல்லுதல் வேண்டும்
பொன் + வளையல் – நிலைமொழியில் ன் மெய்யீறு.
பனை – மரம் – நிலைமொழி இறுதி எழுத்தாகிய னை (ன் + ஐ) உயிரீறு.
1. ஒர் எழுத்துச் சொல்லில் மட்டும் உயிர் ஈறு வெளிப்படையாகத் தெரியும். (தீ – பிடித்தது = தீப் பிடித்தது)
2. ஓர் எழுத்துச் சொல்லாக உயிர்மெய் எழுத்து வரும்போது (ப் + ஊ) எனப் பிரித்து உயிர் ஈற்றைக் காணுதல் வேண்டும். பூ (ப் + ஊ) + பூத்தது = பூப்பூத்தது.
வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய்யாக இருந்தால், மெய் முதல் எனச் சொல்லுதல் வேண்டும். உயிராக இருந்தால் உயிர்முதல் எனச் சொல்லுதல் வேண்டும்.
(எ.கா) பொன் + வளையல் – பொன் வளையல் (வ் * அ) இங்கு “வ்: மெய்முதல்.
கண் + அழகு -கண்ணழகு (இங்கு அ உயிர்முதல்) .
நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால், அதனை விகாரப்புணர்ச்சி என்பர்.
(எ.கா) 1. பலா + சுளை = பலாச்சுளை – மெய் தோன்றியது.
- படம் + காட்சி = படக்காட்சி – நிலைமொழி ஈறுகெட்டு மெய் தோன்றியது. (ம் மறைந்து க் தோன்றியது)
- பொன் + சிலை = பொற்சிலை – நிலைமொழி ஈறு திரிந்தது. (ன்-ற் ஆனது)
இவ்வாறு விகாரப்புணர்ச்சி தோன்றல், கெடுதல், திரிதல் என மூவகைப்படும்.
விகாரப்புணர்ச்சிக்குச் சில எடுத்துக்காட்டுகள்
மா + பழம் – மாம்பழம், வடக்கு + திசை – வடதிசை, மணம் + கோலம் – மணக்கோலம், அல் + திணை – அஃறிணை.
இயல்புப்புணர்ச்சி விகாரப்புணர்ச்சி
வாழை – மரம் – வாழைமரம் தோன்றல் : திரு + குறள் – திருக்குறள் (க்)
கெடுதல் : மரம் – வேர் – மரவேர் (ம்)
திரிதல் : பல் + பொடி- பற்பொடி (ற்)
வல்லினம் மிகும் இடங்கள்
அ, இ என்னும் சுட்டெழுத்துகளின்பின் வல்லொற்று மிகும். (எ.கா.) அ + கனி – அக்கனி, இ + புத்தகம் – இப்புத்தகம்
௭ என்னும் வினா எழுத்தின்பின் வல்லொற்று மிகும். (எ.கா.) எ + பொருள் – எப்பொருள்
அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளின்பின் வல்லொற்று மிகும். (எ.கா.) அந்த + பையன் – அந்தப் பையன், இந்த + பள்ளி – இந்தப் பள்ளி
அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின்பின் வல்லொற்று மிகும். (எ.கா) அப்படி + கேள் – அப்படிக்கேள், இப்படி + செய் – இப்படிச்செய், எப்படி + படித்தான் – எப்படிப் படித்தான்
அவ்வகை, இவ்வகை, எவ்வகை என்னும் சொற்களின்பின் வல்லொற்று மிகும். (எ.கா.) அவ்வகைப் பேச்சு
இனி, தனி, மற்று, மற்ற, மற்றை என்னும் சொற்களின்பின் வல்லொற்று மிகும். (எ.கா) இனிப் பேசுவான்.
இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின்பின் வல்லொற்று மிகும். (எ.கா.) படத்தைப் பார்த்தான், அவனுக்குக் கொடு.
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகையின்பின் வல்லொற்று மிகும் (எ.கா.) தயிர்க்குடம்
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகையின்பின் வல்லொற்று மிகும். (௭.கா.) பட்டுச்சேலை
நான்காம் வேற்றுமையில் அஃறிணைப் பெயர்களின்பின் வல்லொற்று மிகும். (எ.கா.) கூலித்தொழில்
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகையின்பின் வல்லொற்று மிகும். (எ.கா.) விழிப்புனல்
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க ரின்பின் வல்லொற்று மிகும். (எ.கா) நீர்ப்பாம்பு
ஏழாம் வேற்றுமைத்தொகையின்பின் வல்லொற்று மிகும். (எ.கா.) குடிப்பிறந்தார்
நிலவு + என்று = நிலவென்று; தமிழ் + எங்கள் = தமிழெங்கள்; அமுதென்று = அமுது + என்று; செம்பயிர் = செம்மை + பயிர்; செந்தமிழ் = செம்மை + தமிழ்; பொய்யகற்றும் = பொய் + அகற்றும்; பாட்டு+ இருக்கும்= பாட்டிருக்கும்; எட்டு + திசை=எட்டுத்திசை; இடப்புறம் = இடது + புறம்; சீரிளமை = சீர் + இளமை; சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்; கணினி + தமிழ் = கணினித்தமிழ்; அல் + திணை = அஃறிணை; பாகு + அல் + காய் = பாகற்காய்; வெண்குடை= வெண்மை + குடை; பொற்கோட்டு = பொன் + கோட்டு; கொங்கு + அலர் = கொங்கலர்; அவன் + அளிபோல் = அவனளிபோல்; நன்மாடங்கள்= நன்மை + மாடங்கள்; நிலத்தினிடையே =நிலத்தின் + இடையே; முத்து + சுடர்= முத்துச்சுடர்; நிலா + ஒளி = நிலவொளி;தட்பவெப்பம் =தட்பம் + வெப்பம் வேதியுரங்கள் =வேதி + உரங்கள் தரை + இறங்கும் =தரையிறங்கும்; வழி + தடம்=வழித்தடம்; குறுமை + இயல் + உகரம்= குற்றியலிகரம்; ஐகாரக்குறுக்கம் = ஐகாரம் + குறுக்கம்; உயிரளபெடை = உயிர் + அளபடை; கண்டு + அறி= கண்டறி; ஓய்வற = ஓய்வு + அற; ஏன் + என்று = ஏனென்று; ஔடதம் + ஆம் = ஔடதமாம்; ஆழக்கடல் =ஆழம் + கடல்; விண்வெளி = விண் + வெளி; நீலம் + வான் =நீலவான்; இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்; நின்றிருந்த = நின்று + இருந்த; அவ்வுருவம் = அ + உருவம்; மருத்துவம் + துறை =மருத்துவத்துறை; செயல் + இழக்க = செயலிழக்க; இடமெல்லாம் = இடம் + எல்லாம்; மாசற = மாசு + அற; குற்றம் + இல்லாதவர் =குற்றமில்லாதவர்; சிறப்பு + உடையார் = சிறப்புடையார்;கைப்பொருள் = கை+பொருள்; மானமில்லா= மானம் + இல்லா; பசியின்றி =பசி + இன்றி; காட்டாறு= காடு + ஆறு; படிப்பறிவு = படிப்பு + அறிவு; அறிவு + உடைமை = அறிவுடைமை; இவை + எட்டும்= இவையெட்டும்; நன்றியறிதல் = நன்றி + அறிதல்; பொறையுடைமை = பொறை + உடைமை; பாட்டிசைத்து = பாட்டு + இசைத்து; கண்ணுறங்கு = கண் + உறங்கு; வாழை + இலை = வாழையிலை; கை + அமர்த்தி = கையமர்த்தி;போகிப்பண்டிகை=போகி + பண்டிகை; பொங்கல் + அன்று=பொங்கலன்று; பொருளுடைமை = பொருள்+உடைமை; உள்ளுவது + எல்லாம் = உள்ளுவதெல்லாம்; பயன் + இலா= பயனிலா; கல்லெடுத்து= கல் + எடுத்து; நானிலம் =நான்கு + நிலம்; நாடென்ற= நாடு + என்ற; கலமேறி= கலம்+ ஏறி; கதிர்ச்சுடர்= கதிர் + சுடர்; மூச்சடக்கி = மூச்சு + அடக்கி; பெருமை + வானம்= பெருவானம்; அடிக்கும் + அலை= அடிக்குமலை; வணிகம் + சாத்து= வணிகச்சாத்து; பண்டம் + மாற்று = பண்டமாற்று; வண்ணம்+படங்கள்= வண்ணப்படங்கள்; விரிவு + அடைந்த= விரிவடைந்த; நூலாடை = நூல்+ஆடை; எதிர் + ஒலிக்க=எதிரொலிக்க; தம் + உயிர்= தம்முயிர்; இன்புற்று + இருக்க= இன்புற்றிருக்கை; தானென்று= தான் + என்று; எளிதாகும் = எளிது + ஆகும்; பாலையெல்லாம் = பாலை+எல்லாம்; இன்னுயிர்= இனிமை + உயிர்; மலையெலாம்= மலை + எலாம்; குரலாகும் = குரல் + ஆகும்; வான் + ஒலி = வானொலி; இரண்டல்ல= இரண்டு + அல்ல; தந்துதவும் = தந்து + உதவும்; ஒப்புமை + இல்லாத= ஒப்புமையில்லாத; காடெல்லாம்= காடு + எல்லாம்; கிழங்கெடுக்கும்= கிழங்கு + எடுக்கும்; பெயரறியா = பெயர் + அறியா; மனமில்லை = மனம் + இல்லை; நேற்று + இரவு= நேற்றிரவு; காட்டாறு = காடு + ஆறு; அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி; நேரம் + ஆகி = நேரமாகி; வேட்டை + ஆடிய= வேட்டையாடிய; பொருட்செல்வம்= பொருள் + செல்வம்;யாதெனில் = யாது + எனில்; தன்நெஞ்சு= தன் + நெஞ்சு; தீது + உண்டோ= தீதுண்டோ; யாண்டுளனோ = யாண்டு + உளனோ; கல்லளை= கல் + அளை; பூட்டுங்கதவுகள் = பூட்டும் + கதவுகள்; தோரணமேடை = தோரணம் + மேடை; வாசல் + அலங்காரம் = வாசலலங்காரம்; பெருங்கடல்= பெருமை + கடல்; இன்று + ஆகி= இன்றாகி; ஏடெடுத்தேன் = ஏடு + எடுத்தேன்; துயின்றிருந்தார்= துயின்று + இருந்தார்; என்றுரைக்கும்= என்று + உரைக்கும்; வாய்த்தீயின் = வாய்த்து + ஈயீன்; கேடில்லை = கேடு + இல்லை; எவனொருவன் = எவன் + ஒருவன்; இவையெல்லாம்= இவை + எல்லாம்; உயர்வடைவோம் = உயர்வு + அடைவோம்; வனப்பில்லை = வனப்பு + இல்லை; வார்ப்பெனில் = வார்ப்பு + எனில்; வண்கீரை= வண்மை + கீரை; கட்டியடித்தல்= கட்டி + அடித்தல்; கோட்டோவியம் = கோட்டு + ஓவியம்; செப்பேடு = செப்பு + ஏடு; எழுத்துதாணி= எழுத்து + ஆணி; கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணும்; கற்றனைத்தூறும்= கற்றனைத்து+ ஊறும்; நீருலையில் = நீர் + உலையில்; மாரியொன்று= மாரி + ஒன்று; தேர்ந்தெடுத்து = தேர்ந்து + எடுத்து; ஓடையெல்லாம்= ஓடை + எல்லாம்; ஞானச்சுடர்=ஞானம் + சுடர்; இன்புருகு=இன்பு + உருகு; இன்சொல்=இனிமை + சொல்; அறக்கதிர்=அறம் + கதிர்;நாடென்ப = நாடு + என்ப; கண்ணில்லது= கண் + இல்லது; மலையளவு= மலை + அளவு; தன்னாடு= தன் + நாடு; இவையில்லாது =இவை + இல்லாது; தானொரு = தான் + ஒரு; எதிரொலித்தது = எதிர் + ஒலித்தது; முதுமொழி= முதுமை+மொழி; என்று + என்றும் = என்றென்றும்; வானமளந்தது = வானம் + அளந்தது; அறிந்தது + அனைத்தும்= அறிந்ததனைத்தும்; வானம் + அறிந்த= வானமறிந்த; இருதிணை = இரண்டு + திணை; ஐம்பால் = ஐந்து + பால்; நன்செய் = நன்மை + செய்; நீளுழைப்பு = நீள் + உழைப்பு; சீருக்கு + ஏற்ப= சீருக்கேற்ப; ஓடை + ஆட= ஓடையாட; விழுந்தது + அங்கே=விழுந்ததங்கே; செத்து + இறந்த=செத்திறந்த; பருத்தி + எல்லாம்=பருத்தியெல்லாம்; இனிமை + ஓசை=இன்னோசை; பால் + ஊறும்=பாலூறும்; வல்லுருவம் = வன்மை + உருவம்; நெடுமை + தேர்= நெடுந்தேர்; இவையுண்டார் = இவை + உண்டார்; தாம் + இனி= தாமினி; நலமெல்லாம் = நலம் + எல்லாம்; இடம் + எங்கும்= இடமெங்கும்; கலனல்லால் = கலன் + அல்லால்; கோயிலப்பா = கோயில் + அப்பா; பகைவன் + என்றாலும்= பகைவனென்றாலும்; கனகச்சுனை = கனகம் + சுனை; முழவு + அதிர = முழவதிர;பாடறிந்து = பாடு + அறிந்து; முறை + எனப்படுவது= முறையெனப்படுவது; மட்டுமல்ல = மட்டும் + அல்ல; கயிறு + கட்டில்= கயிற்றுக்கட்டில்; கண்ணோடாது = கண் + ஓடாது; கசடற = கசடு + அற; என்றாய்ந்து= என்று + ஆய்ந்து; அக்களத்து = அ + களத்து; கதிர் + ஈன= கதிரீன; வாசலெல்லாம் = வாசல் + எல்லாம்; பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்; கால் + இறங்கி = காலிறங்கி; வெங்கரி = வெம்மை + கரி; என்றிருள் = என்று + இருள்; போல் + உடன்றன= போலுடன்றன; சீவனில்லாமல் = சீவன் + இல்லாமல்; விலங்கொடித்து = விலங்கு + ஒடித்து; காட்டை + எரித்து= காட்டையெரித்து; இதம் + தரும்= இதந்தரும்; நமனில்லை = நமன் + இல்லை; நம்பர்க்கு + அங்கு= நம்பர்க்கங்கு; ஆனந்தவெள்ளம் = ஆனந்தம் + வெள்ளம்; உள் + இருக்கும் = உள்ளிருக்கும்; பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்; ஊராண்மை = ஊர் + ஆண்மை; திரிந்து + அற்று = திரிந்தற்று; இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்; குணங்களெல்லாம் = குணங்கள் + எல்லாம்; விழித்தெழும் = விழித்து + எழும்; போவதில்லை = போவது + இல்லை; படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது; தூக்கிக்கொண்டு = தூக்கி + கொண்டு; கண்டெடுக்கப்பட்டுள்ளன= கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன; எந்தமிழ்நா = எம் + தமிழ் + நா; அருந்துணை = அருமை + துணை;