பிற மொழிச் சொற்களை நீக்குதல்
July 19, 2024 2025-05-14 6:26பிற மொழிச் சொற்களை நீக்குதல்
பிற மொழிச் சொற்களை நீக்குதல்
4.வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்
வேற்றுமொழிச்சொல் |
தமிழ்ச்சொல் |
---|---|
பஜனை |
கூட்டுவழிபாடு |
வைத்தியர் |
மருத்துவர் |
ஜனம் |
மக்கள் |
கர்வம் |
செருக்கு |
வாபாஸ் |
திரும்பபெறுதல் |
தபால் |
அஞ்சல் |
கிஸ்தி |
வரி |
அலமாரி |
நெடும்பேழை |
முண்டாசு |
தலைப்பாகை |
சிம்மாசனம் |
அரியணை |
அகங்காரம் |
ஆணவம் |
பஜார் |
கடைத்தெரு |
சாதம் |
சோறு |
சபை |
அவை |
நாஷ்டா |
சிற்றுண்டி |
ஆசீர்வாதம் |
வாழ்த்து |
நமஸ்காரம் |
வணக்கம் |
லாபம் |
ஈவு |
இஷ்டம் |
விருப்பம் |
வக்கீல் |
வழக்குரைஞர் |
தராசு |
துலாக்கோல் |
ஹாஸ்டல் |
விடுதி |
சர்க்கார் |
அரசு |
கேப்பை |
கேழ்வரகு |
ஐதீகம் |
சடங்கு |
வேதம் |
மறை |
ஜானவாசம் |
மாப்பிளை அழைப்பு |
அபிஷேகம் |
திருமுழுக்கு |
யாத்திரை |
புனிதப் பயணம் |
ஆயுள் |
வாழ்நாள் |
தீர்த்தம் |
புனித நீர் |
ஜனநாயகம் |
குடியாட்சி |
நதி |
ஆறு |
சந்தா |
கட்டணம் |
பிரதிநிதி |
சார்பாளர் |
பத்திரம் |
ஆவணம் |
மத்தியாணம் |
நண்பகல் |
சிபாரிசு |
பரிந்துரை |
பரீட்சை |
தேர்வு |
பிரார்த்தனை |
தொழுகை |
சென்ட்ரல் கவர்ன்மெண்ட் |
நடுவண் அரசு |
தாலுகா ஆபிஸ் |
வட்டாட்சியர் அலுவலகம் |
அனுமதி – இசைவு
உபயம் – திருப்பணியாளர் கொடை
ஆதவன் – ஞாயிறு
உஷார் – விழிப்பு
ஆரம்பம் – தொடக்கம்
எதார்த்தம் – இயல்பு
ஆஸ்தி – சொத்து
ஐதிகம் – உலக வழக்கு
இம்சை – துன்பம்
காகிதம் – தாள்
இருதயம் – நெஞ்சகம்
கிரீடம் – மணிமுடி
ஈசன் -இறைவன்
குபேரன் – பெருஞ்செல்வன்
உபசரித்தல் – விருந்தோம்பல்
பண்டிகை – திருவிழா
வெள்ளம் – நீர்ப்பெருக்கு
வியாபாரம் – வணிகம்
அசல் – மூலம்
ஜமக்காளம் – விரிப்பு
வேடிக்கை – காட்சி
பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணைவினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணைவினைகளை இட்டு எழுதுக
பிற மொழிச் சொற்கள் | தமிழ்ச் சொற்கள் | துணை வினை சொற்களுடன் |
மார்னிங் எழுந்து | காலையில் எழுந்து | காலையில் எழுந்துவிட்டாள் |
பிரஷ் பண்ணி | பல் துலக்கி | பல் துலக்கி முடித்தாள் |
யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள் | சீருடை அணிந்து பள்ளிக்கு போனாள் | சீருடை அணிந்து கொண்டாள். பள்ளிக்கு பறப்பட்டுப் போனாள். |
சொற்கள் | தமிழாக்கம் |
ரொம்ப வீக்கு | நிரம்ப சபலம் |
ஆதார ருசிகள் | அடிப்படைச் சுவைகள் |
காபி | குழம்பி, கோப்பி, கொட்டை வடி நீர் |
ஸேவரி | காரசுவையுண்டி |
டேஸ்ட் | சுவை |
ருசிகள் | சுவைகள் |
சராசரி | ஏறத்தாழ |
அலட்டல் | மிகையாகக் காட்டிக்கொள்ளுதல் |
எக்ஸ்பிரஷன் | விளைவுகள் |
வாசனை | நறுமணம் |
பாதாம் அல்வா | பாதாம இன்களி |
ஐஸ்க்ரீம் | பனிக்குழைவு |
ரசிக்க | களிக்க |
ஜில்லென்று | குளிர்ச்சி என்று |
கற்பூர வாசனை | சூடம் நறுமணம் |
பெப்பர்மிண்ட் வாசனை | புதினாச்சுவையுள்ள மிட்டாய்கள் |
மஸ்க் அரபுசேக் செண்ட் | ஆண்மானிலிருந்து எடுக்கப் பெற்ற வாசனைத் திரவியம் |
ஈத்தர் | தீப்பற்றக் கூடிய பொருள் |
பெட்ரோல் வாசனை | கல்லெண்ணெய் நறுமணம் |
அமில வாசனை | காடிப் புளியம் |
மால் – பல்லங்காடி; நாளங்காடி – பகலில் செயல்படும் கடைவீதி; அல்லங்காடி – இரவில் செயல்படும் கடைவீதி; மாட்டுத்தாவணி – தாவணின்னா சந்தைன்னு பொருள்
பிற மொழிச் சொல் | தமிழ்ச்சொல் |
காேல்டு பிஸ்கெட் | தங்கக்கட்டி |
பிஸ்கட் | கட்டி |
எக்ஸ்பெரிமெண்ட் | சோதனை |
ஆன்சரை | விடையை, முடிவை |
ஆல் தி பெஸ்ட் | எல்லாம் நல்லபடி முடியட்டும். |
ஈக்குவலாக | சமமாக |
வெயிட் | எடை |
ரிப்பிட் | மறுமுறை, மறுபடி |