பிழை திருத்துக
January 31, 2025 2025-05-13 10:24பிழை திருத்துக
பிழை திருத்துக
ஓர் – ஒரு
ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா) ஓர்ஊர் ஓர்ஏரி ஒரு நகரம் ஒரு கடல்
அஃது – அது
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
(௭.கா) அஃது இங்கே உள்ளது. அது நன்றாக உள்ளது.
1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
- ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.
- ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.
3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
- அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.
- அது நகரத்திற்குச் செல்லும் சாலை.
5. அது ஒரு இனிய பாடல்.
-
- அஃது அது ஒரு இனிய பாடல்.
6. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
விடை : சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
7. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
விடை : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.
8. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
9. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கின்றனர்.
10. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
விடை : சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும். பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம். யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு
விடை:-
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும். பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம். யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு