புறநானூறு
October 6, 2023 2025-01-11 13:57புறநானூறு
புறநானூறு
புறநானூறு
-
திணை = புறத்திணை
-
பாவகை = ஆசிரியப்பா
-
பாடல்கள் = 400
-
புலவர்கள் = 157
-
அடி எல்லை = 4-40
பெயர்க்காரணம்
-
புறம் + நான்கு + நூறு = புற நானூறு
-
நூலின் பெயரிலேயே புறம் என்று புறத்திணைப் பாகுபாடு புலப்பட உள்ள நூல் இது மட்டுமே.
-
புறத்திணை சார்ந்த நானூறு பாடல்கள் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.
புறநானூறு வேறு பெயர்கள்
-
புறம்
-
புறப்பாட்டு
-
புறம்பு நானூறு
-
தமிழர் வரலாற்று பெட்டகம்
-
தமிழர் களஞ்சியம்
-
திருக்குறளின் முன்னோடி.
-
தமிழ்க் கருவூலம்
தொகுப்பு
-
இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
உரை, பதிப்பு
-
முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
-
267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
-
நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா
கடவுள் வாழ்த்து
-
இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
-
இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
புறநானூறு பாடிய பெண்பாற் புலவர்கள் = 15 பேர்
ஔவையார் |
பாரி மகளிர் |
வெண்ணிக் குயத்தியார் |
ஒக்கூர் மாசாத்தியார் |
காவற்பெண்டு |
பெருங்கோப் பெண்டு |
புறநானூறு குறிப்பு
-
புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
-
புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.
-
244,282,289,323,355,361 ஆகிய என்னுடைய பாடல்களுக்கு தினைப் பெயர் தெரியவில்லை.
-
ஆசிரியபாவால் அமைந்திருந்தாலும் வஞ்சி அடிகளும் உள்ளது.
-
பெண்களின் வீரத்தைக் கூறும் துறை மூதின் முல்லை
-
புற நானூறு பாடிய புலவர்கள் எண்ணிக்கை = 157
-
புற நானூறு பாடிய ஆண்பால் புலவர்கள் = 142
-
புற நானூறு பாடிய பெண்பால் புலவர்கள் = 15
-
புறநானூற்றில் பெயர் தெரியாத புலவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை = 12
-
கரிகாலன் போர் செய்த இடம் = வெண்ணிப் பரந்தலை
-
பாண்டியன் நெடுஞ்செழியன் போர் செய்த இடம் = தலையானங்கானம்
-
சோழர்கள் மௌரியர்களைத் தோற்கடித்த இடம் = வல்லம்
-
புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் = ஔவையார்.
-
ஜி.யு.போப் அவர்களை கவர்ந்த நூல் இதுவாகும். இந்நூலின் சில பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
-
15 பாண்டியர்கள், 18 சோழர்கள் , 18 சேரர்கள், 18 வேளிர்களைப் பற்றி கூறுகிறது இந்நூல்
-
புறநானூறில் 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 30 வகை படைக்கருவிகள், 67 வகை உணவுகள் கூறப்பட்டுள்ளன.
-
மேல் சாதி கீழ் சாதிப் பாகுபாடு இருப்பினும் அதனை கல்வி நீக்கும் என கூறுகிறது.
-
முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தும் இந்நூலை 1894ஆம் ஆண்டு உவே.சா. அச்சில் பதிப்பித்தார்.
-
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல் ஹார்ட் The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் 1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
-
ஜி.யு.போப் (போப்பையர்) என்பவரால் புற நானூற்றின் பல பாடல்கள் “Extracts from purananooru & Purapporul venbamalai” எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
முக்கிய அடிகள்
“சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்
யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே” -காவற்பெண்டு
சிறிய என் வீட்டில் தூணைப் பற்றிக் கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே ?” என என்னைக் கேட்கின்றாய்.அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியாது.ஆனால் “புலி தங்கிய குகை” போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது.அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று தன் மகன் குறித்து தாய் கூறினார். காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.
சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.
கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார்.
இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.
இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது.
- பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை ஆகியவை பற்றி கூறுகிறது.
- பண்டைய மக்களின் புறவாழ்வைக் காட்டுகின்றது.
- பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.
“வான் உட்கும் வடிநீண் மதில்,
மல்லல் மூதூர் வய வேந்தே” –
(புறம் 18: 11 – 30) (பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது) திணை : பொதுவியல் துறை: முதுமொழிக்காஞ்சி
முக்கிய அடிகள்
1) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம் – 18)
2) உண்பது நாழி உடுப்பவை இரண்டே ! (புறம் – 189)
3) யாதும் ஊரே யாவரும் கேளிர் ! (புறம் – 192)
4) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே !
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! (புறம் – 312)
5) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ,
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ! (புறம்- 183)
6)செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே (புறம் – 189)
7)ஈயென இரத்தல் இழிந்தன்று, அதனெதிர்
ஈயோன் என்றல் அதனினும் இழிந்தன்று (புறம் – 204)
8)நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (புறம்- 186)
9)நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் (புறம்- 195)
பொருள் : இவ்வுலகத்தார்க்கு நெல்லும் நீரும் உயிராகா. முறைசெய்து காத்தலினால் மன்னவனே உயிராவான். வேற்படை உடைய வேந்தனின் கடமை நாட்டைப் பேணிக் காப்பதே ஆகும்.
சொற்பொருள் : அறிகை – அறிதல்வேண்டும்; தானை – படை; கடனே – கடமை.
ஆசிரியர் குறிப்பு : இப்பாடலைப் பாடியவர் மோசிகீரனார். தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் வாழ்ந்தவர். கீரன் என்பது குடிப்பெயராகக் குறிப்பிடப்படுகிறது. உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.
நூல் குறிப்பு : புறம் + நான்கு + நூறு – புறநானூறு. இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது புறம்பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு. புறம் என்பது மறம் செய்தலும் அறம் செய்தலும் ஆகும். இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த புலவர்களாலும் மன்னர்களாலும் பாடப்பெற்றவை. புறநானூற்றுப் பாடல்கள்மூலம் பண்டைய தமிழக மன்னர்களின் அற உணார்வு, வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப் பெருமை முதலியவற்றையும் புலவர்களின் பெருமிதம், மக்களுடைய நாகரிகம், பண்பாடு முதலியவற்றையும் அறியலாம்.
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. – புறநானூறு