Blog

பெயர்சொல்லின் வகை அறிதல்

Old Syllabus

பெயர்சொல்லின் வகை அறிதல்

(அப்பா, அம்மா, மாநகர்‌ மதுரை, தம்பியும் வந்தான்)

பெயர்ச்சொற்கள் பெயரைக்‌ குறித்து வந்ததால்‌ பெயர்ச்‌ சொற்கள்‌ (அம்மா, அப்பா, மாநகர்‌ மதுரை)

வினைச்சொல்‌ ஒரு பொருளின்‌ செயலைக் குறிப்பதால்‌ இச்சொல்‌ வினைச்சொல்‌ ஆயிற்று. (வந்தான்‌)

இடைச்சொல்‌ தம்பி + உம்‌. இதிலுள்ள “உம்‌” என்பது இணைப்புச்‌ சொல்லாக வருகிறது. இதனை இடைச்சொல்‌ என்பர்‌. (தம்பியும்). இது தனியாக வந்தால்‌ பொருள்‌ தராது; பெயர்ச்சொற்கள்‌, வினைச்சொற்களைச்‌ சார்ந்தே வரும்‌.

உரிச்சொல்‌ பலவகைப்பட்ட பண்புகளைக்கொண்டு பெயர்ச்சொற்கள்‌, வினைச்சொற்களைவிட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன உரிச்சொற்கள்‌. இவ்வாறு இலக்கணவகைச்சொற்கள்‌ பெயர்‌, வினை, இடை, உரி என நான்கு வகைப்படும்‌. (மாநகர்‌) என்னும்‌ சொல்லிலுள்ள மா என்பது உரிச்சொல்‌ ஆகும்‌. இதன்‌ பொருள்‌ பெரிய என்பது

பொருத்துக.

பெயர்ச்சொல்‌ –  வேலன்‌

வினைச்சொல்‌ – வந்தான்‌

இடைச்சொல்‌ –  ஐந்தும்‌ ஆறும்‌

உரிச்சொல்‌ – மாவீரன்‌

பெயர்ச்சொற்களை அறுவகைப்படுத்துவர்‌. பொருட்பெயர்‌, இடப்பெயர்‌, காலப்பெயர்‌, சினைப்பெயர்‌, பண்புப்பெயர்‌, தொழிற்பெயர்‌ என்பனவாம்‌.

பொருட்பெயர்‌

பொருளைக்‌ குறிக்கும்‌ பெயர்‌ பொருட்பெயர்‌. இந்தப்‌ பொருட்பெயர்‌ இருவகைப்படும்‌. அவை : உயிருள்ள பொருள்‌, உயிரற்ற பொருள்‌.

உயிருள்ள பொருள்கள்‌ : குமரன்‌, மலர்க்கொடி, தென்னை, செம்பருத்தி, வெள்ளாடு, ஓணான்‌… முதலியன;

உயிரற்ற பொருள்கள்‌: நாற்காலி, அடுப்பு, தட்டு, எண்ணெய்‌, மண்‌, நீர்‌, காற்று

இடப்பெயர்

ஒரிடத்தைக்‌ குறிப்பது இடப்பெயரே. வீடு, தெரு, பள்ளி, கோவில்‌, மக்கள்‌ வாழிடம்‌, தோட்டம்‌, காடு, மலை என இடங்களைக்‌ குறிப்பனவெல்லாம்‌ இடப்பெயர்தான்‌

காலப்பெயர்

காலத்தைக்‌ குறிக்கும்‌ பெயர்‌ காலப்பெயர் ஐந்துநொடி, முப்பது வினாடி, பன்னிரண்டு மணி, விடியற்பொழுது, திங்கள்கிழமை, ஒருவாரம்‌, தைத்திங்கள்‌, ஒராண்டு, மழைக்காலம்‌.

சினைப்பெயர்‌

சினை என்பது ஒன்றன்‌ உறுப்பின்‌ பெயரைக்‌ குறிப்பது. மனித உறுப்புகள்‌, விலங்கு உறுப்புகள்‌, தாவரப்‌ பகுதிகள்‌, பொருள்களின்‌ பகுதிகள்‌ என முழுமையான ஒன்றின்‌ பகுதிகளைக்‌ குறிக்கும்‌ பெயர்கள்‌ சினைப்பெயர்.

பண்புப்பெயர்‌

பண்புப்பெயர்‌ பெயரைப்‌  குணப்‌பெயர்‌ எனவும்‌ கூறுவர்‌. பண்புப்பெயர்கள்‌ நிறம்‌, சுவை, அளவு, வடிவம்‌.

தொழிற்பெயர்‌

தொழிலைக்‌ குறிக்கும்‌ பெயர்களெல்லாம்‌ தொழிற்‌ பெயர்களே. படித்தல்‌, கற்பித்தல்‌ இவை தொழில்‌ பெயர்கள்

பெயர்‌ வகை                              பெயர்‌

 

பொருட்பெயர்‌                         கண்ணன்‌, நாற்காலி

இடப்பெயர்‌ வேலூர்‌, நாமக்கல்‌

காலப்பெயர்‌ தைத்திங்கள்‌, நண்பகல்‌

சினைப்பெயர்‌ முகம்‌, கை

தொழிற்பெயர்‌ ஆடல்‌, பாடல்‌

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories