பெருமையும்
January 29, 2024 2025-01-11 13:56பெருமையும்
பெருமையும்
ஏறு தழுவுதல்
சங்க இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுந்தது துகள்,
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு,
கலங்கினர் பலர் – (கலி- 102: அடி 21-24)
நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன. – (கலி – 106: அடி 27-10)
சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
ஏறு தழுவுதல் பற்றிப் பிற்காலச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பள்ளு இலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல்
நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.
ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.
- சேலம்
- நீலகிரி – கரிக்கையூர்
- மதுரை – கல்லூத்து மேட்டுப்பட்டி
- தேனி – சித்திரக்கல் புடவு
- சிந்துசமவெளி அகழாய்வு
நடுகல்
சேலம் மாவட்டத்தில் கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்த சங்கன் என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய பயல் எடுத்த நடுகல்.