பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்
January 31, 2025 2025-03-13 9:46பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்
பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்
பன்னெண்டு – பன்னிரண்டு; நார்பது – நாற்பது; அம்பது – ஐம்பது; உசிர் – உயிர்; ஊரளி – ஊருளி; ஒருத்தன் – ஒருவன்
கடகால் – கடைக்கால்; குடக்கூலி – குடிக்கூலி; முயற்சித்தார் – முயன்றார்; வண்ணத்திப்பூச்சி – வண்ணத்துப்பூச்சி; வென்னீர் – வெந்நீர்;
எண்ணை – எணணெய்; சிகப்பு – சிவப்பு; தாவாரம் – தாழ்வாரம்; புண்ணாக்கு – பிண்ணாக்கு; கோர்வை – கோவை;
வலது பக்கம் – வலப்பக்கம்; பேரன் – பெயரன்; பேத்தி – பெயர்த்தி; தலகாணி – தலையணை; வேர்வை – வியர்வை;
சீயக்காய் – சிகைக்காய்; சுவற்றில் – சுவரில்; இருபல் – இருமல்; அருவாமனை – அரிவாள்மனை; அண்ணாக்கவுரு – அரைநாண்கயிறு;
புஞ்சை – புன்செய்; புண்ணாக்கு – பிண்ணாக்கு; நாத்தம் – நாற்றம்; பதனி – பதிநீர்; அருகாமை – அருகில்; வெங்கலம் – வெண்கலம்;
வெண்ணை – வெண்ணெய்; ஒத்தடம் – ஒற்றடம்; தேனீர் – தேநீர்; கவுறு – கயிறு; பயிறு – பயறு; பாவக்காய் – பாகற்காய்;
ரொம்ப – நிரம்ப; கோடாலி – கோடாரி; கடப்பாறை – கடப்பாரை; ஆம்பளை – ஆண்பிள்ளை; ஈர்கோலி – ஈர்கொல்லி
அவரக்கா – அவரைக்காய்; நல்லாச் சாப்டான் – நன்றாகச்சாப்பிட்டான்;