சுபாஷ் சந்திர போஸ்
October 19, 2023 2025-06-10 10:13சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய இராணுவம்
காங்கிரசைவிட்டு விலகிய சுபாஷ் சந்திர போஸ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பிரிட்டிஷாரின் எதிரிகளோடு கைகோர்த்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த அவர் விரும்பினார். 1941 மார்ச் மாதம், அவர் தனது இல்லத்தில் இருந்து நாடகத்தனமாக (மாறுவேடமணிந்து) தப்பித்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார். முதலில் அவர் சோவியத் யூனியனின் ஆதரவைப் பெற விரும்பினார். ஆனால் பிரிட்டன் உள்ளிட்ட கூட்டணிப் படைகளுடன் சோவியத் யூனியன் அரசு சேர்ந்ததால் அவர் ஜெர்மனிக்கு சென்றார். 1943 பிப்ரவரி மாதம், நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக ஜப்பான் சென்ற அவர், இந்திய தேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்தார். இந்தியப் போர்க்கைதிகளைக் கொண்டு மலாயா மற்றும் பர்மாவில் இருந்த ஜப்பானியர்களின் ஆதரவோடு இந்திய தேசிய இராணுவத்தை (ஆசாத் ஹிந்த் ஃபாஜ்) ஜெனரல் மோகன் சிங் உருவாக்கினார், அதன்பிறகு இது கேப்டன் லட்சுமி செகல் என்பவரால் நடத்தப்பட்டது. இது காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், பெண்கள் பிரிவாக ராணி லக்ஷ்மி பாய் பிரிகேட் என மூன்று படையணிகளாக சுபாஷ் சந்திர போஸ் மறுசீரமைத்தார். சுபாஷ் சந்திர போஸ், சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நிறுவினார். ‘தில்லிக்கு புறப்படு (தில்லி சலோ) என்ற முழக்கத்தை சுபாஷ் வெளியிட்டார். ஜப்பானிய படைகளின் ஒரு பகுதியாக இந்திய தேசிய இராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. எனினும் ஜப்பான் தோல்வி அடைந்த பிறகு இந்திய தேசிய இராணுவம் முன்னேறுவது தடைபட்டது. சுபாஷ் சந்திர போஸ் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதால் சுதந்திரத்துக்காக போராடிய அவரது தீவிரப்பணிகள் முடிவுக்கு வந்தன.
- அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும். எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்.
- மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்.
- விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனைநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கானை விலை துன்பமும் தியாகமும்தான்.