சொல்லும் பொருளும் அறிதல்
August 28, 2023 2025-05-14 9:48சொல்லும் பொருளும் அறிதல்
சொல்லும் பொருளும் அறிதல்
6th Standard New Book
நிருமித்த – உருவாக்கிய; விளைவு – விளைச்சல்; சமூகம் – மக்கள் குழு; அசதி – சோர்வு; சுடர் – ஒளி; ஆழிப்பெருக்கு – கடல்கோள்; மேதினி – உலகம்; ஊழி – நீண்டதொரு காலப்பகுதி; உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை; மெய் – உண்மை; வழி – நெறி; அகற்றும் – விலக்கும்; மேன்மை – உயர்வு; அறம் – நற்செயல்; திங்கள் – நிலவு; கொங்கு – மகரந்தம்; அலர் – மலர்தல்; திகிரி – ஆணைச்சக்கரம்; பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்; மேரு – இமயமலை; நாமநீர் – அச்சம் தரும் கடல்; அளி – கருணை; காணி – நில அளவைக் குறிக்கும் சொல் மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்; சித்தம் – உள்ளம் . இயன்றவரை – முடிந்தவரை; ஒருமித்து – ஒன்றுபட்டு; ஔடதம் – மருந்து; மசற – குறைஇல்லாமல்; சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து; தேசம் – நாடு; தூற்றும் படி – இகழும் படி; மூத்தோர் – பெரியோர்; மேதைகள் – அறிஞர்கள்; மாற்றார் – மற்றவர்; நெறி – வழி; வற்றாமல் – அழியாமல்; நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை; ஒப்புரவு – பிறருக்கு உதவி செய்தல்; நட்டல் – நட்பு கொள்ளுதல்; நந்தவனம் – பூஞ்சோலை; பார் – உலகம்; பண் – இசை; இழைத்து – பதித்து; மல்லெடுத்த – வலிமைபெற்ற; சமர் – போர்; நல்கும் – தரும்; கழனி – வயல்; மறம் – வீரம்; எக்களிப்பு – பெருமகிழ்ச்சி; கலம் – கப்பல்; ஆழி – கடல்; கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி; மின்னல்வரி – மின்னல் கோடுகள்; அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்; மெய்- உண்மை; தேசம் – நாடு; தண்டருள் – குளிர்ந்த கருணை; கூர் – மிகுதி; செம்மையருக்கு – சான்றோருக்கு; ஏவல் – தாெண்டு; பராபரமே – மேலான பொருள்; பணி – தொண்டு; எய்தும் – கிடைக்கும்; எல்லாரும் – எல்லா மக்களும்; அல்லாமல் – அதைத்தவிர; அஞ்சினார் – பயந்தனர்; கருணை – இரக்கம்; வீழும் – விழும்; ஆகாது – முடியாது; பார் – உலகம்; நீள்நிலம் – பரந்த உலகம்; முற்றும் – முழுவதும்; மாரி – மழை; கும்பி – வயிறு; பூதலம் – பூமி;
7th Standard New Book
ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்; குறி – குறிக்கோள்; விரதம் – நோன்பு; பொழிகிற – தருகின்ற; ஒப்புமை – இணை; முகில் – மேகம்; அற்புதம் – விந்தை; உபகாரி – வள்ளல்; ஈன்று – பெற்று; களித்திட – மகிழ்ந்திட; கொம்பு – கிளை; நச்சரவம் – விடமுள்ள பாம்பு; அதிமதுரம் – மிகுந்த சுவை; விடுதி – தங்கும் இடம்; பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு; துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்; சிற்றில் – சிறு வீடு; யாண்டு – எங்கே; கல் அளை – கற்குகை; ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு; சூரன் – வீரன்; வாரணம் – யானை; பொக்கிஷம் – செல்வம்; பரி – குதிரை; சாஸ்தி – மிகுதி; சிங்காரம் – அழகு; விஸ்தாரம் – பெரும்பரப்பு; கமுகு – பாக்கு; மெத்தை வீடு – மாடி வீடு; மதலை – தூண்; சென்னி – உச்சி; ஞெகிழி – தீச்சுடர்; உரவுநீர் – பெருநீர்பரப்பு; அழுவம் – கடல்; கரையும் – அழைக்கும்; வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்; உரு – அழகு; வங்கம் – கப்பல்; போழ – பிளக்க; எல் – பகல்; வங்கூழ் – காற்று; கோடு உயர் – கடை உயர்ந்த; நீகான் – நாவாய் ஓட்டுபவன்; மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்;எத்தனிக்கும் – முயலும்; பரிதி – கதிரவன்; வெற்பு – மலை; அன்னதோர் – அப்படி ஒரு; கழனி – வயல்; கார்முகில் – மழைமேகம்; நிகர் – சமம்; துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார்; வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்; கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது; வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்; விச்சை – கல்வி; வவ்வார்- கவர முடியாது; எச்சம் – செல்வம்; பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்; வனப்பு – அழகு; நெடி – நாற்றம்; பூரிப்பு – மகிழ்ச்சி; மழலை – குழந்தை; மேனி – உடல்; வண்கீரை – வளமான கீரை; பரி – குதிரை; முட்டப்போய் – முழுதாகச் சென்று; கால் – வாய்க்கால், குதிரையின் கால்; மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்; மாரி – மழை; வறந்திருந்த – வறண்டிருந்த; புகாவா – உணவாக; மடமகள் – இளமகள்; நல்கினாள் – கொடுத்தாள்; முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை); வையம் – உலகம்; வெய்ய – வெப்பக்கதிர் வீசும்; சுடர் அழியான் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்; இடர் ஆழி – துன்பக்கடல்; சொல் மாலை – பாமாலை; தகளி – அகல்விளக்கு; ஞானம் – அறிவு; நாரணன் – திருமால்; வித்து – விதை; ஈன – பெற; நிலன் – நிலம்; களை – வேண்டாத செடி; பைங்கூழ் – பசுமையான பயிர்; வன்சொல் – கடுஞ்சொல்; சாந்தம் – அமைதி; தாரணி – உலகம்; மகத்துவம் – சிறப்பு; தத்துவம் – உண்மை; பேதங்கள் – வேறுபாடுகள்; இரக்கம் – கருணை;
8th Standard New Book
நிரந்தரம் – காலம் முழுமையும்; வண்மொழி – வளமிக்கமொழி; வைப்பு – நிலப்பகுதி; இசை – புகழ்; சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்; தொல்லை – பழமை, துன்பம்; விசும்பு – வானம்; மரபு – வழக்கம்; மயக்கம் – கலவை; திரிதல் – மாறுபடுதல்; இருதிணை – உயர்திணை, அஃறிணை; செய்யுள் – பாட்டு; வழாஅமை – தவறாமை; தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்); ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்; தூண்டுதல் – ஆர்வம்கொள்ளுதல்; பயிலுதல் – படித்தல்; ஈரம் – இரக்கம்; நாணம் – வெட்கம்; முழவு – இசைக்கருவி; செஞ்சொல் – திருந்தியசொல்; நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்; புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்; வள்ளைப்பாட்டு – நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்; முகில் – மேகம்; வின்னம் – சேதம்; கெடிகலங்கி – மிக வருந்தி; வாகு – சரியாக; சம்பிரமுடன் – முறையாக; காலன் – எமன்; சேகரம் – கூட்டம்; மெத்த – மிகவும்; காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று; தீர்வன – நீங்குபவை; திறத்தன – தன்மையுடையன; உவசமம் – அடங்கி இருத்தல்; கூற்றவா – பிரிவுகளாக; நிழல்இகழும் – ஒளிபொருந்திய; பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே; பேர்தற்கு – அகற்றுவதற்கு; பிணி – துன்பம்; திரியோகமருந்து – மூன்று யோகமருந்து; ஓர்தல் – நல்லறிவு; தெளிவு – நற்காட்சி; பிறவார் – பிறக்கமாட்டார்; நித்தம் நித்தம் – நாள்தோறும்; வையம் – உலகம்; மட்டு – அளவு; பேணுவயல் – பாதுகாத்தல்; சுண்ட – நன்கு; திட்டுமுட்டு – தடுமாற்றம்; கலன் – அணிகலன்; முற்ற – ஒளிர; வேண்டாவாம் – தேவையில்லை; தடம் – அடையாளம்; அகம்பாவம் – செருக்கு; பண் – இசை; கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை; மதவேழங்கள் – மதயானைகள்; முரலும் – முழங்கும்; பழவெய் – முதிர்ந்த மூங்கில்; அலந்தவர் – வறியவர்; கிளை – உறவினர்; செறாஅமை – வெறுக்காமை; பேதையார் – அறிவற்றவர்; நோன்றல் – பொறுத்தல்; மறாஅமை – மறவாமை; போற்றார் – பகைவர்; பொறை – பொறுமை; வாரி – வருவாய்; எஞ்சாமை – குறைவின்றி; முட்டாது – தட்டுப்பாடின்றி; ஒட்டாது – வாட்டம்இன்றி; வைகுக – தங்குக; ஓதை – ஓசை; வெரீஇ – அஞ்சி; யாணர் – புதுவருவாய்; கனத்த மழை – பெருமழை; மறலி – காலன்; வழிவர் – நழுவி ஓடுவர்; கரி – யானை; பிலம் – மலைக்குகை; தூறு – புதர்; மண்டுதல் – நெருங்குதல்; அருவர் – தமிழர்; இறைஞ்சினர் – வணங்கினர்; உடன்றன – சினந்து எழுந்தன; முழை – மலைக்குகை; சீவன் – உயிர்; வையம் – உலகம்; சத்தியம் – உண்மை; சபதம் – சூளுரை; ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி; மோகித்து – விரும்பு; நமன் – எமன்; நாணாமே – கூசாமல்; சித்தம் – உள்ளம்; உய்ம்மின் – ஈடேறுங்கள்; நம்பர் – அடியார்; ஈயில் – வழங்கினால்; படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்; பகராய் – தருவாய்; பராபரம் – மேலான பொருள்; ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு; அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு; நிறை – மேன்மை; அழுக்காறு – பொறாமை; பொறை – பொறுமை; மதம் – கொள்கை; பொச்சாப்பு – சோர்வு; இகல் – பகை; மையல் – விருப்பம்; மன்னும் – நிலைபெற்ற; ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்;
9th Standard New Book
குந்த – உட்கார; கந்தம் – மணம்; மிசை – மேல்; விசனம் – கவலை; எழில் – அழகு; துயர் – துன்பம்; மா – வண்டு; மது – தேன்; வாவி – பொய்கை; வளர் முதல் – நெற்பயிர்; தரளம் – முத்து; பணிலம் – சங்கு; வரம்பு – வரப்பு; கழை – கரும்பு; கா – சோலை; குழை – சிறு கிளை; அரும்பு – மலர் மொட்டு; மாடு – பக்கம்; நெருங்கு வளை – நெருங்குகின்ற சங்குகள்; கோடு – குளக்கரை; ஆடும் – நீராடும்; மேதி – எருமை; துதைந்து எழும் – கலக்கி எழும்; கன்னி வாளை – இளமையான வாளைமீன்; சூடு – நெல் அரிக்கட்டு; சுரிவளை – சங்கு; வேரி – தேன்; பகடு – எருமைக்கடா; பாண்டில் – வட்டம்; சிமயம் – மலையுச்சி; நாளிகேரம் – தென்னை; நரந்தம் – நாரத்தை; கோளி – அரசமரம்; சாலம் – ஆச்சா மரம்; தமாலம் – பச்சிலை மரங்கள்; இரும்போந்து – பருத்த பனைமரம்; சந்து – சந்தன மரம்; நாகம் – நாகமரம்; காஞ்சி – ஆற்றுப்பூவரசு; யாக்கை – உடம்பு; புணரியோர் – தந்தவர்; புன்புலம் – புல்லிய நிலம்; தாட்கு – முயற்சி, ஆளுமை; தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறை வில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்; சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்; பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள்; குழீஇ – ஒன்றுகூடி; தோம் – குற்றம்; கோட்டி – மன்றம்; பொலம் – பொன்; வேதிகை – திண்ணை; தூணம் – தூண்; தாமம் – மாலை; கதலிகைக் கொடி – சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது; காழூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி; விலோதம் – துணியாலான கொடி; வசி – மழை; செற்றம் – சினம்; கலாம் – போர்; துருத்தி – ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு); களர்நிலம் – பண்படாத நிலம்; நவிலல் – சொல்லல்; வையம் – உலகம்; மாக்கடல் – பெரிய கடல்; இயற்றுக – செய்க; மின்னாளை – மின்னலைப் போன்றவளை; மின்னாள் – ஒளிரமாட்டாள்; தணல் – நெருப்பு; தாழி – சமைக்கும் கலன்; அணித்து – அருகில்; தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத; யாண்டும் – எப்பொழுதும்; மூவாது – முதுமை அடையாமல்; நாறுவ – முளைப்ப; தாவா – கெடாதிருத்தல்; மைவனம் – மலைநெல்; முருகியம்- குறிஞ்சிப்பறை; பூஞ்சினை-பூக்களை உடைய கிளை; சிறை- இறகு; சாந்தம் – சந்தனம்; பூவை- நாகணவாய்ப் பறவை; பொலம்- அழகு; கடறு- காடு; பொலி- தானியக்குவியல்; முக்குழல்-கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்; உழை- ஒரு வகை மான்; வாய்வெரீஇ- சோர்வால் வாய் குழறுதல்; குருளை- குட்டி; இனைந்து- துன்புறுதல்;
உயங்குதல்- வருந்துதல்; படிக்கு உற – நிலத்தில் விழ; கோடு- கொம்பு; கல்-மலை; முருகு- தேன், மணம், அழகு; மல்லல்- வளம்; செறு- வயல்; கரிக்குருத்து- யானைத்தந்தம்; போர்- வைக்கோற்போர்; புரைதப- குற்றமின்றி; தும்பி- ஒருவகை வண்டு; துவரை-பவளம்; மரை- தாமரை மலர்; விசும்பு- வானம்; மதியம்-நிலவு; தீபம் – விளக்கு; சதிர் – நடனம்; தாமம் – மாலை; தெங்கு – தேங்காய்; இசை – புகழ்; வருக்கை – பலாப்பழம்; நெற்றி – உச்சி; மால்வரை – பெரியமலை; மடுத்து – பாய்ந்து; கொழுநிதி – திரண்ட நிதி; மருப்பு – கொம்பு; வெறி – மணம்; கழனி – வயல்; செறி – சிறந்த; இரிய – ஓட; அடிசில் – சோறு; மடிவு – சோம்பல்; கொடியன்னார் – மகளிர்; நற்றவம் – பெருந்தவம்; வட்டம் – எல்லை; வெற்றம் – வெற்றி; சூல் -கரு; அள்ளல் – சேறு; பழனம் – நீர் மிக்க வயல்; வெரீஇ – அஞ்சி; பார்பபு – குஞ்சு; நாவலோ – நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து; இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்; நந்து – சங்கு; கமுகு – பாக்கு; முத்தம் – முத்து; புரிசை – மதில்; அணங்கு – தெய்வம்; சில்காற்று – தென்றல்; புழை – சாளரம்; மாகால் – பெருங்காற்று; முந்நீர் – கடல்; பணை – முரசு; கயம் – நீர்நிலை; ஓவு – ஓவியம்; நியமம் – அங்காடி; விண் – வானம்; ரவி – கதிரவன்; கமுகு – பாக்கு; அறம் – நற்செயல்; வெகுளி – சினம்; ஞானம் – அறிவு; விரதம் – மேற்கொண்ட நன்னெறி; நசை – விருப்பம்; நல்கல் – வழங்குதல்; பிடி – பெண்யானை; வேழம் – ஆண்யானை; யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது; பொளிக்கும் – உரிக்கும்; ஆறு – வழி;
10th Standard New Book
துய்ப்பது – கற்பது, தருதல்; மேவலால் – பொருந்துலால், பெறுதலால்; மெத்த வணிகலன் – வணிகக் கப்பல்கள்(ஐம்பெருங்காப்பியங்கள்); மயலுறுத்து – மயங்கச்செய்; ப்ராண – ரஸம் – உயிர்வளி; லயத்துடன் – சீராக; நனந்தலை உலகம் – அகன்ற உலகம்; நேமி – சக்கரம்; காேடு – மலை; காெடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்; நறுவீ – நறுமணமுடைய மலர்கள்; தூஉய் – தூவி; விரிச்சி – நற்சாெல்; சுவல் – தாேள்; தொங்கான் – கப்பல்; கப்பித்தான் – தலைமை மாலுமி (கேப்டன்); அருகுற – அருகில்; முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்; அசைஇ – இளைப்பாறி; அல்கி – தங்கி; கடும்பு – சுற்றம்; நரலும் – ஒலிக்கும்; ஆரி – அருமை; படுகர் – பள்ளம்; வயிரியம் – கூத்தர்; வேவை – வெந்தது; இறடி – தினை; பொம்மல் – சோறு; நச்சப் படாதவன் – பிறருக்கு உதவி செய்யாதவன்; சுடினும் – சுட்டாலும்; மாளாத – தீராத; மாயம் – விளையாட்டு; விசும்பு – வானம்; ஊழி – யுகம்; ஊழ் – முறை; தண்பெயல் – குளிர்ந்த மழை; ஆர்தருபு – வெள்ளததில் மூழ்கிக் கிடந்த; பீடு – சிறப்பு; ஈண்டி – செறிந்து திரண்டு; கேள்வியினான் – நூல் வல்லான்; கேண்மையினான் – நட்பினன்; தார் – மாலை; முடி – தலை; முனிவு – சினம்; அகத்து உவகை – மனமகிழ்ச்சி; தமர் – உறவினர்; நீபவனம் – கடம்பவனம்; மீனவன் – பாண்டிய மன்னன்; கவரி – சாமரை ( கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்); நுவன்ற – சொல்லிய; என்னா – அசைச்சொல்; பண்டி – வயிறு; அசும்பிய – ஒளிவீசுகிற; முச்சி – தலையுச்சிக் காெண்டை; கரப்பிடும்பை இல்லார் – தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர்; சுண்ணம் – நறுமணப்பொடி; காருகர் – நெய்பவர் (சாலியர்); தூசு – பட்டு; துகிர் – பவளம்; வெறுக்கை – செல்வம்; நொடை – விலை; பாசவர் – வெற்றிலை விற்போர்; ஓசுநர் – எண்ணெய் விற்போர்; மண்ணுள் வினைஞர் – ஓவியர்; மண்ணீட்டாளர் – சிற்பி; கிழி – துணி; சேக்கை – படுக்கை; யாக்கை – உடல்; பிணித்து – கட்டி; வாய்ந்த – பயனுள்ள; இளங்கூழ் – இளம்பயிர்; தயங்கி – அசைந்து; காய்ந்தேன் – வருந்தினேன்; கொம்பு – கிளை; புழை – துளை; கான் – காடு; தேம்ப – வாட; அசும்பு – நிலம்; உய்முறை – வாழும் வழி; ஓர்ந்து – நினைத்து; கடிந்து – விலக்கி; உவமணி – மணமலர்; படலை – மாலை; துணர் – மலர்கள்; மன்றல் – திருமணம்; அடிச்சுவடு – காலடிக்குறி; அகராதி – அகர வரிசை சொற்பொருள் நூல்; தூவல் – மழை/நீர்த்துளி; மருள் – மயக்கம்; மிரியல்–மிளகு; அதசி –சணல்;