மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள்
October 6, 2023
2025-01-11 13:57
மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள்
மணிமேகலை நூல் அமைப்பு
-
ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
-
காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
-
அடிகள் = 4755 வரிகள்
-
காதைகள் = 30
-
பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
-
சமயம் = பௌத்தம்
மணிமேகலை நூலின் வேறு பெயர்கள்
-
மணி மேகலைத் துறவு
-
முதல் சமயக் காப்பியம்
-
அறக்காப்பியம்
-
சீர்திருத்தக்காப்பியம்
-
குறிக்கோள் காப்பியம்
-
புரட்சிக்காப்பியம்
-
சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
-
கதை களஞ்சியக் காப்பியம்
-
பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
-
பசு போற்றும் காப்பியம்
-
இயற்றமிழ்க் காப்பியம்
-
துறவுக் காப்பியம்
மணிமேகலை ஆசிரியர் குறிப்பு
-
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
-
சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
-
இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.
-
கூலவாணிகம் செய்தவர்(கூலம் = தானியம்)
-
இவரை, “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” எனப் போற்றுவர்.
மணி மேகலை நூல் குறிப்பு
-
இந்நூலில் காண்டப் பிரிவு இல்லை.
-
முப்பது காதைகள் மட்டும் உள்ளன.
-
முதல் காதை = விழாவறைக் காதை
-
இறுதி காதை = பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
மணிமேகலை கதை மாந்தர்கள்
-
மணி மேகலையின் தோழி சுதமதி
-
புத்தத்துறவி அறவன அடிகள்
-
மணி மேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவள் ஆதிரை
-
மனி மேகலை பிறந்த ஊர் பூம்புகார்
-
மணி மேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
-
கோவலனின் குலதெய்வம் மணி மேகலை
மணிமேகலை குறிப்பு
-
இரட்டை காப்பியத்துள் கிளைக்கதைகள் மிகுந்த நூல் இது
-
இரட்டை காப்பியத்துள் பிறமொழி கலப்பு மிகுந்த நூல்
-
பிறமொழிச் சொற்களை மிகுதியும் பயன்படுத்திய நூல் இதுவாகும்
-
சிலப்பதிகாரத்தின் இறுதியில் “மணி மேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்” எனக் கூறப்படுவதால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.
-
இக்காப்பியத்தை சாத்தனார், இளங்கோவடிகள் முன் அரங்கேற்றினார்.
-
கதை தலைவியின் பெயரால் அமைந்த முதல் காப்பியம் இதுவே.
-
தொல்காப்பியர் கூறிய எட்டு அணிகளுடன் மடக்கணி, சிலேடையணி இரண்டையும் பயன்படுத்திய முதல் காப்பியம் மணி மேகலை.
-
திருவள்ளுவரை “பொய்யில் புலவன்” எனவும் திருக்குறளைப் “பொருளுரை” என்றும் முதலில் கூறிய காப்பியம்
மேற்கோள்
-
வினையின் வந்தது வினைக்கு விளைவாது
புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது
மூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை
-
கோள்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவளம் குன்றும்
-
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!
-
மண்தினி ஞாலத்து வாழ்க்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரரே
-
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
-
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கெலாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்லென காவலன் உரைக்கும்