மரபுத் தொடரின் பொருளறிதல்
January 31, 2025 2025-05-14 12:04மரபுத் தொடரின் பொருளறிதல்
மரபுத் தொடரின் பொருளறிதல்
1. மனக்கோட்டை
முயற்சி இல்லாமல் முன்னேறலாம் என சிலர் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.
2. கண்ணும் கருத்தும்
கண்ணும் கருத்தாய் கவனமுடன் படிக்க வேண்டும்.
3. அள்ளி இறைத்தல்
பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தல் நம்மை வறுமை நிலைக்கு தள்ளவிடும்.
4. ஆறப்போடுதல்
பிரச்சனைகளை பெரிதாக்கமல் ஆறப்போடுதல் நல்லது.
5. வாழையடி வாழையாக
வாழையடி வாழையாக நம் முன்னோர்கள் விவசாயம் செய்து வந்தனர்.
6. முதலைக்கண்ணீர்
காவலரிடம் மாட்டிக்கொண்ட திருடன் தான் திருடவில்லை என்று முதலைக்கண்ணீர் வடித்தான்.
7. எடுப்பார் கைப்பிள்ளை
நாம் சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படடக்கூடாது.