மரபுத் தமிழ்
August 29, 2023 2025-05-02 12:08மரபுத் தமிழ்
மரபுத் தமிழ்
தாவர இலைப் பெயர்கள் | |
ஆல், அரசு, மா, பலா, வாழை | இலை |
அகத்தி, பசலை, முருங்கை | கீரை |
அருகு, கோரை | புல் |
நெல், வரகு | தாள் |
மல்லி | தழை |
சப்பாத்திக்கள்ளி, தாழை | மடல் |
கரும்பு, நாணல் | தோகை |
பனை, தென்னை | ஓலை |
கமுகு | கூந்தல் |
இளமைப் பெயர்கள்
புலி | பறழ் |
சிங்கம் | குருளை |
யானை | கன்று |
பசு | கன்று |
கரடி | குட்டி |
ஒலி மரபு
புலி | உறுமும் |
சிங்கம் | முழங்கும் |
யானை | பிளிறும் |
பசு | கதறும் |
கரடி | கத்தும் |
பறவைகளின் ஒலிமரபு | வினை மரபு |
ஆந்தை அலறும் | சோறு உண் |
காகம் கரையும் | முறுக்குத் தின் |
சேவல் கூவும் | சுவர் எழுப்பு |
மயில் அகவும் | தண்ணீர் குடி |
கிளி பேசும் | பால் பருகு |
குயில் கூவும் | கூடை முடை |
கோழி கொக்கரிக்கும் | பூக் கொய் |
புறா குனுகும் | இலை பறி |
கூகை குழறும் | பானை வனை |
தொகை மரபு | ||
மக்கள் கூட்டம் | ||
ஆட்டு மந்தை | ||
ஆநிரை |
மரபுப் பிழையை நீக்குதல்
பறவை மற்றும் விலங்களின் – ஒலி குறிப்பு சொற்கள்
பறவைகள் |
விலங்குகள் |
---|---|
ஆந்தை – அலறும் |
நாய் – குரைக்கும் |
கோழி – கொக்கரிக்கும் |
நரி – ஊளையிடும் |
குயில் – கூவும் |
குதிரை- கனைக்கும் |
காகம் – கரையும் |
கழுதை – கத்தும் |
கிளி – கொஞ்சும்/பேசும் |
பன்றி – உறுமும் |
மயில் – அகவும் |
சிங்கம் – முழங்கும் |
கோட்டான் – குழலும் |
பசு – கதறும் |
வாத்து – கத்தும் |
எருது – எக்காளமிடும் |
வானம்பாடி – பாடும் |
எலி – கீச்சிடும் |
குருவி – கீச்சிடும் |
தவளை – கத்தும் |
வண்டு – முரலும் |
குரங்கு – அலம்பும் |
சேவல் – கூவும் |
பாம்பு – சீறிடும் |
கூகை – குழலும் |
யானை – பிளிரும் |
புறா – குனுகும் |
பல்லி – சொல்லும் |
பொருட்களின் தொகுப்பு பெயர்கள்
ஆடு – மந்தை மாடு – மந்தை எறும்பு – சாரை கல் – குவியல் சாவி – கொத்து திராட்சை – குலை பசு – நிரை யானை – கூட்டம் வீரர் – படை வைக்கோல்- போர்
விறகு – கட்டு மக்கள் – தொகுப்பு
தாவரங்கள் : காய்களின் இளமை மரபு
அவரைப்பிஞ்சு கத்தரிப்பிஞ்சு வாழைக்கச்சல்
வெள்ளரிப்பிஞ்சு தென்னங்குரும்பை மாவடு
விலங்குகள்: இளமை மரபு
குருவிக்குஞ்சு கோழிக்குஞ்சு ஆட்டுக்குட்டி
கழுதைக்குட்டி எருமைக்கன்று பன்றிக்குட்டி
புலிப்பறழ் மான்கன்று பூனைக்குட்டி
சிங்கக்குருளை யானைக்கன்று நாய்க்குட்டி
அணிற்பிள்ளை குதிரைக்குட்டி கழுதைக்குட்டி
கீரிப்பிள்ளை குரங்குக்குட்டி எலிக்குட்டி
ஒலி மரபுச்சொற்கள்
குயில் கூவும் மயில் அகவும் காகம் கரையும் புலி உறுமும்
கிளி கொஞ்சும் கூகை குழறும் குதிரை கனைக்கும்
சிங்கம் முழங்கும் நரி ஊளையிடும் யானை பிளிறும்
வினைமரபுச்சொற்கள்
அப்பம் தின் காய்கறி அரி இலை பறி
நெல் தூற்று களை பறி பழம் தின்
நீர் பாய்ச்சு பாட்டுப் பாடு மலர் கொய்
விலங்குகளின் வாழிடங்கள்
ஆட்டுப்பட்டி கோழிப்பண்ணை யானைக்கூடம்
குதிரைக்கொட்டில் மாட்டுத்தொழுவம் வாத்துப்பண்ணை
தாவர உறுப்புப் பெயர்கள்
ஈச்ச ஓலை தாழை மடல் பனையோலை
சோளத்தட்டை தென்னையோலை பலாஇலை
மாவிலை மூங்கில் இலை வாழைஇலை
வேப்பந்தழை கமுகங்கூந்தல் நெற்றாள்
காய்களின் இளநிலை
அவரைப்பிஞ்சு மாவடு முருங்கைப்பிஞ்சு
தென்னங்குரும்பை வாழைக்கச்சல் வெள்ளரிப்பிஞ்சு
செடி கொடி மரங்களின் தொகுப்பிடம்
ஆலங்காடு சவுக்குத்தோப்பு தென்னந்தோப்பு
கம்பங்கொல்லை சோளக்கொல்லை தேயிலைத்தோட்டம்
பனந்தோப்பு பலாத்தோப்பு பூந்தோட்டம்
பொருள்களின் தொகுப்பு
ஆட்டுமந்தை கற்குவியல் சாவிக்கொத்து
திராட்சைக்குலை வேலங்காடு பசுநிரை
மாட்டுமந்தை யானைக்கூட்டம் வைக்கோற்போர்
பொருளுக்கேற்ற வினைமரபு
சோறு உண் நீர் குடி பால் பருகு
பழம் தின் பாட்டுப் பாடு கவிதை இயற்று
கோலம் இடு தயிர் கடை விளக்கை ஏற்று
தீ மூட்டு படம் வரை கூரை வேய்
பால் மரபு
பால் மரபு ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியனவாகும்.
உயர்திணையில்,
1. ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால். (எ.கா.) மாணவன், செல்வன்.
2. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால். (எ.கா) ஆதினி, மாணவி .
3. ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால். (எ.கா.) மாணவர்கள், மக்கள் .
அஃறிணையில்,
4. ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால்.
(எ.கா.) கல், பசு.
5. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால்.
(எ.கா.) மண் புழுக்கள், பசுக்கள்.
1. கண்ணகி சிலம்பு அணிந்தான். விடை : கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
2. கோவலன் சிலம்பு விற்கப் போனாள். விடை : கோவலன் சிலம்பு விற்கப் போனான்
3. அரசர்கள் நல்லாட்சி செய்தார். விடை : அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.
4. பசு கன்றை ஈன்றன. விடை : பசு கன்றை ஈன்றது.
5. மேகங்கள் சூழ்ந்து கொண்டது. விடை : மேகங்கள் சூழ்ந்து கொண்டன.
6. குழலி நடனம் ஆடியது. விடை : குழலி நடனம் ஆடினாள்
நாற்று | நடுதல் |
நீர் | பாய்ச்சுதல் |
கதிர் | அறுத்தல் |
களை | பறித்தல் |
அடி வகை ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி தண்டு : கீரை,வாழை முதலியவற்றின் அடி கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி தூறு : குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி கழி: கரும்பின் அடி கழை : மூங்கிலின் அடி அடி: புளி, வேம்பு முதலியவற்றின் அடி.
கிளைப்பிரிவுகள் தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள்.
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை; கொம்பு அல்லது கொப்பு: கவையின் பிரிவு; கிளை: கொம்பின் பிரிவு; சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு; குச்சு: போத்தின் பிரிவு; இணுக்கு: குச்சியின் பிரிவு.
காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல் காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள்.
சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி); விறகு: காய்ந்த சிறுகிளை; வெங்கழி: காய்ந்த கழி; கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.
இலை வகை தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள்.
இலை: புளி, வேம்பு முதலியவற்றின் இலை; தாள்: நெல்,புல் முதலியவற்றின் இலை; தோகை: சோளம், கரும்பு முதலியவற்றின் இலை;
ஓலை: தென்னை, பனை முதலியவற்றின் இலை; சண்டு: காய்ந்த தாளும் தோகையும்; சருகு: காய்ந்த இலை.
கொழுந்து வகை தாவரத்தின் நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள்.
துளிர் அல்லது தளிர்: நெல், புல் முதலியவற்றின் கொழுந்து; முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து;
குருத்து: சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து; கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி.
பூவின் நிலைகள்
அரும்பு: பூவின் தோற்றநிலை; போது: பூ விரியத் தொடங்கும் நிலை; மலர்(அலர்): பூவின் மலர்ந்த நிலை; வீ: மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை; செம்மல்: பூ வாடினநிலை.
பிஞ்சு வகை
பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு; பிஞ்சு: இளம் காய்; வடு: மாம்பிஞ்சு; மூசு: பலாப்பிஞ்சு; கவ்வை: எள்பிஞ்சு; குரும்பை: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு;
முட்டுக் குரும்பை: சிறு குரும்பை; இளநீர்: முற்றாத தேங்காய்; நுழாய்: இளம்பாக்கு; கருக்கல்: இளநெல்; கச்சல்: வாழைப்பிஞ்சு.
குலை வகை
கொத்து: அவரை, துவரை முதலியவற்றின் குலை; குலை: கொடி முந்திரி போன்றவற்றின் குலை; தாறு: வாழைக் குலை; கதிர்: கேழ்வரகு சோளம் முதலியவற்றின் கதிர்;
அலகு அல்லது குரல்: நெல், தினை முதலியவற்றின் கதிர்; சீப்பு: வாழைத்தாற்றின் பகுதி.
கெட்டுப்போன காய்கனி வகை
சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்; சிவியல்: சுருங்கிய பழம்; சொத்தை: புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி; வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு; அளியல்: குளுகுளுத்த பழம்;
அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்; சொண்டு: பதராய்ப் போன மிளகாய். கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்;
தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்; அல்லிக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்; ஒல்லிக்காய்: தென்னையில் கெட்ட காய்.
பழத்தோல் வகை
தொலி: மிக மெல்லியது; தோல்: திண்ணமானது; தோடு: வன்மையானது; ஓடு:மிக வன்மையானது; குடுக்கை: சுரையின் ஓடு; மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி;
உமி: நெல்,கம்பு முதலியவற்றின் மூடி; கொம்மை: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி.
மணிவகை
தானியங்களுக்கு வழங்கும் சொற்கள்:
கூலம்: நெல்,புல் (கம்பு) முதலிய தானியங்கள் ; பயறு: அவரை, உளுந்து முதலியவை; கடலை: வேர்க்கடலை, கொண்டைக்கடலை முதலியவை;
விதை: கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து; காழ்: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து; முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து;
கொட்டை: மா, பனை முதலியவற்றின் வித்து; தேங்காய்: தென்னையின் வித்து; முதிரை: அவரை, துவரை முதலிய பயறுகள்.
இளம் பயிர் வகை
நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை; கன்று: மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை; குருத்து: வாழையின் இளநிலை; பிள்ளை: தென்னையின் இளநிலை;
குட்டி: விளாவின் இளநிலை; மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை; பைங்கூழ்: நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.
சொற்களின் கூட்டப்பெயர்
கல் – கற்குவியல்; பழம் – பழக்குலை; புல் – புற்கட்டு; ஆடு – ஆட்டுமந்தை;