Blog

மறைமலை அடிகள்

2
Old Syllabus

மறைமலை அடிகள்

மறைமலை அடிகள்
மறைமலையடிகள்
குறிப்பு
  • இயற் பெயர்: சாமி வேதாசலம்
  • ஊர்:  நாகை மாவட்டம் காடம்பாடி
  • பெற்றோர்: சொக்கநாதப் பிள்ளை, சின்னம்மா அம்மையார்
  • மகள்: நீலாம்பிகை அம்மையார்
  • தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழியிலும் வல்லவர்
  • சைவத்தையும் தமிழையும் தம் உயிராக கொண்டவர்
  • சென்னை கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்
  • சாமி வேதாசலம் என்ற தன் வடமொழி பெயரை மறைமலை அடிகள் என தமிழில் மாற்றிக் கொண்டார்
  • “ஞானசாகரம்” என்ற இதழுக்கு “அறிவுக்கடல்” என்று பெயர் மாற்றம் செய்து நடத்தினார்
  • “சிறுவர்க்கான செந்தமிழ்” என்ற தலைப்பில் பாடநூல்களையும் வரைந்துள்ளார்.
  • அடிகளின் “அறிவுரைக் கொத்து” என்ற நூலே “கட்டுரை” என்ற தமிழ்ச் சொல்லையும், கட்டுரை எழுதும் முறைகளையும் மாணவர்களிடையே பரப்பிற்று
  • இவர் சைவ சித்தாந்த மகா சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்
வேறு பெயர்கள்
  • தனித்தமிழ் மலை
  • தமிழ்க் கடல்
  • பல்லாவரம் முனிவர்
  • தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
  • தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
  • தன்மான இயக்கத்தின் முன்னோடி
  • தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி
புனைப்பெயர்
  • முருகவேள்
செய்யுள் நூல்கள்
  • திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை
  • சோமசுந்தரக் காஞ்சி
ஆய்வு நூல்கள்
  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
  • பட்டினப்பாலை ஆராய்ச்சி
  • சிவஞான போத ஆராய்ச்சி
  • குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி
  • திருக்குறள் ஆராய்ச்சி
மறைமலையடிகள் ஆங்கில நூல்கள்
  • Ancient and Modern Tamil Poets (1937)
  • Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
  • Can Hindi be a lingua Franca of India? (1969)
  • Tamilian and Aryan form of Marriage (1936)
நாடகம்
  • சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
  • குமுதவல்லி
  • அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
நாவல்
  • கோகிலாம்பாள் கடிதங்கள்
  • குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி
இதழ்
  • அறிவுக்கடல் (ஞானசாகரம்) (1902)
  • ORIENTAL MYSTIC OF MYNA (1908)
  • THE OCEAN OF WISDOM (1935)

 

சிறப்பு
மறைமலையடிகள்
  • “தனித்தமிழ் இயக்கம்” தோற்றுவித்தவர்
  • திரு வி க மறைமலை ஒரு பெரும் அறிவுச் சுடர்; தமிழ் நிலவு; சைவ வான்; தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை அடிகளாருக்கே சேரும்
  • சங்க இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர்

வேதாசலத்தின்‌ மகள்‌ நீலாம்பிகை அம்மையார்‌ ஆவார்‌. அவர்‌, தம்‌ தந்தையாரையே நல்லாசிரியராகப்‌ பெறும்‌ பேறு பெற்றார்‌. தம்‌ தந்தையாரிடம்‌ தமிழும்‌ இசையும்‌ பயின்றார்‌. அவர்தம்‌ முயற்சியால்‌ பதின்மூன்றாம்‌ வயதிலேயே மேடையேறிச்‌ சொற்பொழிவாற்றினார்‌. ஒரு நாள்‌ மாலையில்‌, சோலையில்‌ நீலாம்பிகையுடன்‌ உலாவிக்‌ கொண்டிருந்தார்‌ வேதாசலம்‌. அப்போது இராமலிங்க வள்ளலார்‌ அருளிய திருவருட்பாப்‌ பாடலை அடிகள்‌ பாடினார்‌.

“பெற்ற தாய்தனை மகமறந்‌ தாலும்‌

பிள்ளை யைப்பெறுந்‌ தாய்மறந்‌ தாலும்‌

உற்ற தேகத்தை உயிர்மறந்‌ தாலும்‌

உயிரை மேவிய உடல்மறந்‌ தாலும்‌ . . . .” என்னும்‌ அப்பாடலை உள்ளமுருக, உயிருருக ஒதி முடித்தார்‌. பின்னர்‌, மகளிடம்‌, “நீலா! இப்பாடலில்‌ உள்ள “தேகம்‌”

என்னும்‌ வடசொல்லுக்கு மாறாக, “யாக்கை என்னும்‌ தமிழ்ச்சொல்‌ ஆளப்பட்டிருந்தால்‌ இப்பாடலின்‌ சொல்லோசை மேலும்‌ இனிமையாக இருக்குமன்றோ ? பிறமொழிச்‌ சொற்கள்‌ தமிழில்‌ கலப்பதனால்தான்‌ தமிழின்‌ இனிமை குறைகிறது” என்றார்‌ வேதாசலம்‌.

அது கேட்ட மகள்‌ தந்தையாரிடம்‌, “அப்படியானால்‌ நாம்‌ இனிப்‌ பிறமொழிச்‌ சொற்களை நீக்கித்‌ தனித்தமிழிலேயே பேசுதல்‌ வேண்டும்‌” என்றார்‌. மகளின்‌ அன்பும்‌ அறிவும்‌ கலந்த வேண்டுகோளை ஏற்று, சுவாமி வேதாசலம்‌ என்னும்‌ தம்‌ வடமொழிப்‌ பெயரைத்‌ தனித்தமிழில்‌ மறைமலையடிகள்‌ என்று மாற்றி வைத்துக்கொண்டார்‌.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories