Blog

மின்னியல்

Class 50 பொது அறிவியல்

மின்னியல்

மின்னோட்டத்தின் SI அலகு

மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A). ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறை செய்யப்படுகிறது.  I=V/R  I= CURRENT  V=VOLTAGE  R=RESISTANCE

மின்சுற்று
மின்சுற்று என்பது மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பல மின் கூறுகளின் வலையமைப்பு கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூடிய சுற்று அல்லது பாதையாகும்.

மின்சாதனங்களையும் மின்னூட்டத்தின் மூலமான மின்கலத்தையும் இணைக்கும் பாதைகளாக மின்கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.

மின்கூறு மின்கூறின் பயன்பாடு
மின்தடையாக்கி மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது.
மின்தடை மாற்றி மின்னோட்டத்தின் அளவை தேர்ந்தெடுக்க பயன்படுகிறது.
அம்மீட்டர் மின்னோட்டத்தை அளவிட பயன்படுகிறது
வோல்ட் மீட்டர் மின்னழுத்த வேறுபாட்டை அளவிட பயன்படுகிறது
கால்வனோ மீட்டர் மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய பயன்படுகிறது
டையோடு மின்னணு கருவிகளில் பயன்படுகிறது
ஒளிமின் டையோடு (LED) ஏழு துண்டு காட்சி பலகையில் பயன்படுகிறது
தரை இணைப்பு மின் சாதனங்களை பாதுகாக்க பயன்படுகிறது.
மின்னழுத்தத்தை அளவிட குறிப்பு புள்ளியாக
செயல்படுகிறது.

மின்னழுத்தம்

ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில் இருந்து மின்விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.

மின்னழுத்த வேறுபாடு

இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்பது ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஓரலகு நேர் மின்னூட்டத்தை மின் விலக்கு விசைக்கு எதிராக நகர்த்த செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.

வோல்ட்

மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் அலகு வோல்ட் (V)

ஒரு கூலும் நேர்மின்னோட்டத்தை ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு மின்விசைக்கு எதிராக எடுத்துச்செல்ல செய்யப்படும் வேலையின் அளவு ஒரு ஜுல் எனில் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் ஆகும்.

1 Volt = 1 Joule/Coulomb (1 J/C)

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories