லகர, ளகர, ழகர வேறுபாடு
March 5, 2025 2025-04-01 6:43லகர, ளகர, ழகர வேறுபாடு
ல– நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம்.
ள– நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்.
ழ– நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு.
பொருள் வேறுபாடு உணர்க.
விலை -பொருளின் மதிப்பு விளை – உண்டாக்குதல் விழை – விரும்பு
இலை – செடியின் இலை இளை – மெலிந்து போதல் இழை – நூல் இழை
சிரம் என்பது ________ (தலை / தளை) இலைக்கு வேறு பெயர் ________ (தளை / தழை) வண்டி இழுப்பது ________ (காலை / காளை)
தேர்த் திருவிலாவிற்கு செண்றனர் (தேர்த் திருவிழாவிற்கு சென்றனர்.)
வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது (வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது)
போரில் பயன்படுத்துவது வாள் / பூனைக்கு உள்ளது வால் வாசலில் போடுவது காேலம் / பந்தின் வடிவம் கோளம்
அலை – அழை
- அலை – கடலலை – இன்று கடல் அலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது.
- அழை – வர வழைத்தல் – என் திருமணத்திற்கு நண்பர்களை அழைத்துள்ளேன்
குளவி – குழவி
- குளவி – பூச்சி வகைகளுள் ஒன்று – குளவி வீட்டின் நிலைப்படியில் கூடு கட்டுகிறது
- குழவி – குழந்தை – குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்)
வாளை – வாழை
- வாளை – மீன் வகைகளில் ஒன்று – ஆற்றில் வாளை மீன் துள்ளிக் குதித்தது.
- வாழை – வாழைப்பழம் – முக்கனிகளுள் ஒன்று வாழைப்பழம்.