வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்
October 18, 2024 2025-05-12 7:54வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்
வந்தான், பழுத்த, எடுத்து ஆகியன.
இவற்றுள் “வந்தான்” என்பது “செயல்” முற்றுப்பெற்றதனை உணர்த்துவதனால், இது வினைமுற்று ஆகும். இச்சொல், இறந்தகாலத்தைக் காட்டுகிறது. மூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்தும்; திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும்.
“பழுத்த” என்னும் சொல், முற்றுப்பெறாத வினைச்சொல். இச்சொல் பழம் என்னும் பெயர்ச்சொல்லைக்கொண்டு முடிவுபெறுகிறது. இவ்வாறு ஒரு பெயரைக்கொண்டு முடியும் முற்றுப்பெறாத வினைச்சொல்லே பெயரெச்சம்.இது முக்காலத்திலும் வரும்.
“எடுத்து” என்னும் முற்றுப்பெறாத வினைச்சொல் “வந்தான்” என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது. இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும். இவ்வினையெச்சம் முக்காலத்தையும் உணர்த்தும்.
படித்தான், படித்த, படித்து – ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப் பெறுகிறது. எனவே, இது வினைமுற்று ஆகும்.
வினைச்சொல்
படித்தான், ஆடுகின்றாள், பறந்தது, சென்ற, கண்டு ஆகியவை செயலை அடிப்படையாகக் கொண்ட சொற்கள் ஆகும். செயலை வினை என்றும் குறிப்பர். இவ்வாறு ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
வினைமுற்று
மலர்விழி எழுதினாள். கண்ணன் பாடுகிறான். மாடு மேயும்.
இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்று ஜந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும். வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் ____________ (திகழ்) (திகழ்கிறது)
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ____________ (கலந்துகொள்) (கலந்துகொள்வாள்)
3. உலகில் மூவாயிரம் மொழிகள் ____________ (பேசு) (பேசப்படுகின்றன)
3. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ____________ (செல்) (சென்றனர்)
4. தவறுகளைத் ____________ (திருத்து) (திருத்துவேன்)
தெரிநிலை வினைமுற்று
ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
(எ.கா.) மாணவி கட்டுரை எழுதினாள்.
செய்பவர் – மாணவி காலம் – இறந்தகாலம்
கருவி – தாளும் எழுதுகோலும் செய்பொருள் – கட்டுரை
நிலம் – பள்ளி செயல் – எழுதுதல்
குறிப்பு வினைமுற்று
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.
பொருள் – பொன்னன் சினை – கண்ணன்
இடம் – தென்னாட்டார் பண்பு (குணம்) – கரியன்
காலம் – ஆதிரையான் தொழில் -. எழுத்தன்
தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுகள் அன்றி ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப் பிறவகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு.
ஏவல் வினைமுற்று
பாடம் படி. கடைக்குப் போ.
இத்தொடர்கள் ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றன. இவ்வாறு தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.
(எ.கா.) எழுது – ஒருமை எழுதுமின் – பன்மை
பன்மை ஏவல் வினைமுற்று எழுதுங்கள் என வருவது இக்கால வழக்கு.
வியங்கோள் வினைமுற்று
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்றுவியங்கோள் வினைமுற்று எனப்படும். இவ்வினைமுற்று இரு திணைகளையும் (உயர்திணை, அஃறிணை ) ஐந்து பால்களையும் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்) மூன்று இடங்களையும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) காட்டும். இதன் விகுதிகள் ௧, இய, இயர், அல் என வரும்.
(எ.கா.) வாழ்க, ஒழிக, வாழியர், வாரல்
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்
ஏவல் வினைமுற்று |
வியங்கோள் வினைமுற்று |
முன்னிலையில் வரும். |
இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும். |
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். |
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும். |
விகுதி பெற்றும் பெறாமலும் வரும். |
விகுதி பெற்றே வரும். |
வினைமுற்று |
நட |
உண் |
உறங்கு |
ஆண்பால் |
நடக்கிறான் |
உண்கிறான் |
உறங்கினான் |
பெண்பால் |
நடக்கிறாள் |
உண்கிறாள் |
உறங்கினாள் |
பலர்பால் |
நடக்கிறார் |
உண்டார் |
உறங்கினார் |
ஒன்றன் பால் |
நடந்தது |
உண்டது |
உறங்கியது |
பலவின் பால் |
நடந்தன |
உண்டன |
உறங்கின |
தன்மை |
நடந்தேன் |
உண்கிறேன் |
உறங்கினேன் |
முன்னிலை |
நடந்தீர் |
உண்டீர் |
உறங்குவீர் |
படர்க்கை |
அவன் நடந்தான் |
அவன் உண்பான் |
அவன் உறங்கினாள் |
இறந்த காலம் |
நடந்தான் |
உண்டான் |
உறங்கினான் |
நிகழ் காலம் |
நடக்கிறான் |
உண்கிறான் |
உறங்குகிறான் |
எதிர் காலம் |
நடப்பான் |
உண்பான் |
உறங்குவான் |
வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள். – கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார். – ஊட்டமிகு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்
3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர். – நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்
4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார். – பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே – பாடல்; கேட்டவர்.
அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாது இவை அனைத்தையும் யாம் அறிவோம்.
வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
தொழிற்பெயர் | எதிர்மறைத் தொழிற்பெயர் |
அறிதல் | அறியாமை |
புரிதல் | புரியாமை |
தெரிதல் | தெரியாமை |
பிறத்தல் | பிறவாமை |