10TH BOOK BOX POINT
April 24, 2025 2025-05-14 11:5310TH BOOK BOX POINT
10TH BOOK BOX POINT
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் – க. சச்சிதானந்தன்
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”
நற்றிணை – நல் + திணை – தொகை நூல்களுள் முதல் நூல் நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்
குறுந்தொகை – நல்ல குறுந்தொகை என அழைக்கப்படும் குறைந்த பாடல் எல்லைகள் (4 – 8) கொண்ட நூல்
ஐங்குறுநூறு – ஐந்திணைகளை பாடும் நூல் மிக குறைந்த பாடல் எல்லைகள் (3 – 6) கொண்ட நூல்
பதிற்றுப்பத்து – சேர அரசர்கள் பத்துபேரை 10 புலர்கள் பத்து பத்தாகப் பாடியது பதிற்றுபத்து மிக குறைந்த பாடல் எல்லைகள் (3 – 6) கொண்ட நூல்
‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்கிறார் மகாகவி பாரதியார்.
“பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களம் தமிழில் உள” என்கிறார் கால்டுவெல். ( திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்).
உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்
தமிழாசிரியர்; நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்; சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” ஒன்றை அமைத்திருப்பவர்; பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்; தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்; தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர். விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்; அதற்காக, தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்; இன்றளவும் இவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர். பற்பல நூல்களை எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியன இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகள்.
இரட்டுற மொழிதல் : ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர் செய்யுள், உரைநடை, மேடைப்பேச்சு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர். – தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம்)
திருமூலர் தம் – திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்
வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம்உண் டாம் ஔவை குறள், 49
காற்று நான்கு திசைகளில் வீசும் போது தமிழர்கள் சூட்டியுள்ள பெயர்கள்
கிழக்கு – குணக்கு; மேற்கு – குடக்கு; வடக்கு – வாடை ;தெற்கிலிருந்து வீசும்போது தென்றல்.
“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” – சிலம்பு 2: 24
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி,
“நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”
எனத் தூது செல்ல தென்றலே அன்போடு அழைக்கிறாள்.
“நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – புறம்.
வளி மிகின் வலி இல்லை (புறம். 51) – ஐயூர் முடவனார்.
UNICEF – United Nations International Children’s Emergency Fund.
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
விரிச்சி ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லை க் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.
விருந்து போற்றுதும்
முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை “மோப்பக் குழையும் அனிச்சம்”.
” தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” – சிலப்பதிகாரம். ,
கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை இளங்கோவடிகள் உணர்த்துகிறார்.
“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே” – கம்பராமாயணம்,
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – கலிங்கத்துப்பரணி,
கலிங்கத்துப்பரணியிலும் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்.
தனித்து உண்ணார்
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை,
“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே……..” – புறநானூறு, 182 என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்.
அல்லில் ஆயினும்
“அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும்” – என்று நற்றிணை (142) குறிப்பிடுகிறது. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு.
“காலின் ஏழடிப் பின் சென்று” -பொருநராற்றுப்படை, 166
குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலள் – என்று புறநானூறு (333)
தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி.
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்…. புறநானூறு, 316
நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த தன் பழையவாளைப் பணையம் வைத்தான் தலைவன்; இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு.
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.
விருந்தை எதிர்கொள்ளும் தன்மை இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ” என்ற குறுந்தொகை (118) அடிகள் புலப்படுத்துகின்றன.
“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கொன்றை வேந்தனில் ஔவையார் பாடியுள்ளார்.
ஒப்புடன் முகம் மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம்
முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியி னோடு
கடும்பசி ஆகும் தானே – விவேகசிந்தாமணி
இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியே நின்று பார்த்தோமெனில், சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார். 1300 ஆண்டுகளுக்குமுன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்…
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
………………………………………………
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” (திருவாசகம் 3 – 1 – 6)
அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவும், ஒப்பற்ற வளமையான காட்சியும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினைச் சொல்வது எனின், அவை நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல அவை நுண்மையாக இருக்கின்றன.
மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார்.
சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன்
ஏடாளும் புலவரொருவர் நாடாளும் மன்னரைக் காண அரண்மனை சென்றார். களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் கண்ணயர்ந்தார்; அரச குற்றமான அச்செயலைச் செய்த புலவருக்குத் தண்டனை வழங்காமல் கவரி வீசினார் மன்னர். உறங்கிய புலவர் மோசிகீரனார். கவரி வீசிய மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. கண்விழித்த புலவர் மன்னரின் செயலைக் கண்டு வியந்து பா மழை பொழிந்தார். அப்பாடல் இதோ …
“மாசற விசித்த வார்புறு வள்பின் …” புறம் 50
கரகாட்டம் – (குடக்கூத்து) ‘கரகம்’ என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம். இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு. கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனை பேர்தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.
மயிலாட்டம் – மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும்.
காவடியாட்டம் – கா-என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பொருள். இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம்.
ஒயிலாட்டம் – ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம். ஒயிலாட்டத்தை இருவரிசையாக நின்றும் ஆடுகின்றனர்.
தேவராட்டம், சேர்வையாட்டம் – தேவராட்டம், வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம். உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் ‘தேவதுந்துபி’, தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி. இந்தக் கலை, வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறுதுணி கட்டியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது.
பொய்க்கால் குதிரையாட்டம் – “போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
தப்பு ஆட்டம் – ‘தப்பு’ என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும். ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம்
தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது.
புலி ஆட்டம் – தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும். பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று.
தெருக்கூத்து – நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை. வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. அருச்சுனன் தபசு என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக
இருக்கிறது.
ந. முத்துசாமி என்ற கலைஞாயிறு
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர். இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான
கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர். இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். இவர்தான் கூத்துப்பட்டறை ந. முத்துசாமி என்ற கலைஞாயிறு.
செங்கீரைப் பருவம்
செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6ம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் இருகைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலினை நீட்டி தலை நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.
மார்ஷல் நேஷமணி
இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர். நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார். 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.
ம.பொ.சி (சிலம்புச்செல்வர்)
சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியதற்குக் காரணமுண்டு; திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ விரும்பாதவர் அல்ல; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுகிறார். இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார்.
சென்னையை மீட்போம் என்று ம.பொ.சி குறிப்பிடுவன
ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று அந்திர தலைவர்கள் விரும்பினர். தலைநகர் காக்க தன் முதல்வர் பதவியை துறக்க முன் வந்தார் இராஜாஜி மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அப்போது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் “சென்னை” என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர் முன்மொழிந்து “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.
ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு
“சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா
வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்” – திருத்தணிகையுலா
உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்) – சிலப்பதிகாரம்
உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு. வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம். இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.
அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை
இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது எனக் கூறப்பட்டது.
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – புறம்.
எனச் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார். நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது என்பது இதில் உணர்த்தப்பட்டுள்ளது.
அரசியல் அறம்
சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன. ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’, ‘அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’ மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன.
அரசன் அறநெறியில் ஆட்சிசெய்வதற்கு அமைச்சரும் உதவினர். நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்கிறது மதுரைக்காஞ்சி. ‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்.
அறங்கூறவையம் அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. ‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது; அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.
போர் அறம்
தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு புறப்பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
எறியார் எறிதல் யாவணது எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான் – புறம் 301.
கொடை
“செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே” (புறம் 189 :7-8)என்றார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
எழுவரின் கொடைப் பெருமை சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை இலக்கியங்களாகவே உள்ளன. பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது. புறநானூற்றின் கொடைப்பதிவும் குறிப்பிடத்தக்கது.
அரியன என்று கருதாது, தயங்காது கொடுத்தலும் ஈதலால் வரும் இழப்புக்கு வருந்தாமையும் நாள்தோறும் கொடுத்தலும் கொடைப் பெருமைகளாகப் பேசப்படுகின்றன. வள்ளல்கள் “இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்பட்டனர். வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை நக்கீரர் பாராட்டுகிறார். வள்ளலின் பொருள் இரவலனின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று பெரும்பதுமனார் குறிப்பிடுகிறார்.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஔவையார். இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார். பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர். தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.
புற இலக்கியங்களில் மட்டுமன்றி அக இலக்கியங்களிலும் ஈதல் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்றெல்லாம் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது.
வள்ளல்கள் மட்டுமன்றிப் புலவர்களும் ஈந்து மகிழ்ந்ததை இலக்கியம் பதிவு செய்துள்ளது. தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் புறநானூற்றில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது.
உதவி
உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘உதவியாண்மை’ என்று குறிப்பிடுகிறார்.
பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் (கலி.139)
என்று பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பற்றி நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். ‘உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்’ என்கிறார் நல்வேட்டனார்.
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (நற். 210)
உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார். இதனால்தான் ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு’ என்கிறது தமிழ் இலக்கியம்.
வாய்மை
வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை, “பொய்யார் செத்தா”, “பொய்படுபறியா வயங்கு செந்தா” என்று இலக்கியங்கள் கூறுகின்றன. நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள். இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. பொய்பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
- நாளுக்கு ஒருமுறை மலர்வது – சண்பகம்.
- ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது – பிரம்ம கமலம்.
- பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது – குறிஞ்சி.
- தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது – மூங்கில்.
ஜெயகாந்தன் விருதுகள்
• குடியரசுத் தலைவர் விருது (உன்னைப்போல் ஒருவன் – திரைப்படம்)
• சாகித்திய அகாதெமி விருது – சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)
• சோவியத் நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்)
• ஞானபீட விருது
• தாமரைத்திரு விருது
மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் பெருகும்; துயரைப் பகிர்ந்தால் குறையும்; சுவரோடாயினும் சொல்லி அழு என்பார்களல்லவா? துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் முகவரிகள்!
உனதருளே பார்ப்பன் அடியேனே யாரிடம் யார் கூறியது – இறைவனிடம் குலசேகராழ்வார்.
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி – சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது – கல்வி
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் – அங்கு வறுமை இல்லாததால்
மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் மாலவன் குன்றமும் – வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே திருப்பதியும் திருத்தணியும்.
‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் – நெறியோடு நின்று காவல் காப்பவர்.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் – வலிமையை நிலைநாட்டல்
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது – சிலப்பதிகாரம்
மெய்க்கீர்த்தி – மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாத வகையில் அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் ஆகும்.
மேன்மை தரும் அறம் என்பது – கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஔவையார். இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்.
பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர்.
தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் – அகவற்பா என்னும் ஆசிரியப்பா.
இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் இவ்வடிகளில் கற்காலம் என்பது – தலையில் கல் சுமப்பது – கொண்ட நாகூர்ரூமி
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது – பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார் (ஜெயகாந்தன்)
வாய்மையே மழைநீராகி இத் தொடரில் வெளிப்படும் அணி – உருவகம்;