Blog

7TH BOOK BOX POINT

Class 29 சொல்லகராதி

7TH BOOK BOX POINT

ஒன்றல்ல இரண்டல்ல – உடுமலை நாராயணகவி

‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம் பெற்றுள்ள வள்ளல்கள் 

  • முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
  • புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் உடுமலை நாராயணகவி கூறுவன

  • பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
  • பரிபாடல் கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர்  கூறுகிறார்

குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படும்

குற்றிலியலுகரத்தின் வகைகள்

நெடில்தொடர் குற்றியலுகரம் தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும். (எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு .

ஆயுதத்தொடர் குற்றியலுகரம் ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். (எ.கா.) எஃகு, அஃது

உயிர்த்தொடர் குற்றியலுகரம் தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

(எ.கா.) அரசு (ர = ர் + அ) கயிறு (யி = ய் + இ)  ஒன்பது ( ப = ப் + அ) வரலாறு (லா = ல் + ஆ)

வன்த்தொடர் குற்றியலுகரம் வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளை த் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘வன்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று

மென்த்தொடர் குற்றியலுகரம் மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்த்தொடர் க் குற்றியலுகரம்’ எனப்படும். (எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று

இடைத்தொடர் குற்றியலுகரம் இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந் து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். (எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு

பத்துப்பாட்டு நூல்கள் 

திருமுருகாற்றுப்படை               மதுரைக்காஞ்சி

பெருநாராற்றுப்படை                நெடுநெல்வாடை

பெரும்பாணாற்றுப்படை        குறிஞ்சிப்பாட்டு

சிறுபாணாற்றுப்படை              பட்டினப்பாலை

முல்லைப்பாட்டு                          மலைபடுகடாம்

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை                                      பரிபாடல்

குறுந்தொகை                             கலித்தொகை

ஐங்குறுநூறு                                அகநானூறு

பதிற்றுப்பத்து                            புறநானூறு

தமிழரின் கப்பற்கலை

நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது – தொல்காப்பியம். அந்நூல்‌ முந்நீர்‌ வழக்கம்‌ என்று கடற்பயணத்தைக்‌ குறிப்பிடுகிறது. எனவே, தொல்காப்பியர்‌ காலத்திற்கு முன்பே தமிழர்கள்‌ கடல்‌ பயணம்‌ செய்துள்ளனர்‌ என்பதை அறியலாம்‌.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து. (குறள்‌ 496)

வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. என்னும்‌ திருவள்ளுவர்‌ காலத்திலேயே பெரிய கப்பல்கள்‌ இருந்தன என்பதற்குச்‌ சான்றாகும்‌.

பூம்புகார்‌ துறைமுகத்திலிருந்து கப்பல்கள்‌ மூலம்‌ பொருள்கள்‌ ஏற்றுமதியும்‌ இறக்குமதியும்‌ செய்யப்பட்டன என்பதைப்‌ பட்டினப்பாலை விரிவாக விளக்குகிறது.

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம். (பாடல்‌ 255) என்று பெறிய கப்பலை அகநானூறு குறிப்பிடுகிறது.

“அருங்கலம்‌ தரீஇயர்‌ நீர்மிசை நிவக்கும்‌

பெருங்கலி வங்கம்”‌. –  (பாடல்‌ 52) பதிற்றுப்பத்து.

சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்துபட்ட அறிவு பெற்றிருந்தார்கள் என்பதை உணரலாம்.

எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்து விட்டுத் தோணியாகப் பயன்படுத்தினான். உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன.

சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்

1. தோணி         2. ஓடம்            3. படகு            4. புணை        5. மிதவை          6. தெப்பம்

கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்

1. கலம்  2. வங்கம்  3. நாவாய்

சோழர்களில்‌ இராசராச சோழனும்‌, இராசேந்திர சோழனும்‌ பெரிய கப்பற்படையைக்‌ கொண்டு பல நாடுகளை வென்றனர்‌ என்பதை வரலாறு பகர்கிறது.

கப்பல்‌ கட்டும்‌ கலைஞர்கள்‌ கம்மியர்‌ என்று அழைக்கப்பட்டனர்‌.

கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்  – (காதை 25, அடி 124) என்னும்‌ மணிமேகலை அடியால்‌ அறியலாம்‌.

கண்ணடை என்பது இழைத்த மரத்தில்‌ காணப்படும்‌ உருவங்கள்‌ ஆகும்‌.

தச்சுமுழம்‌ என்னும்‌ நீட்டலளவையால்‌ கணக்கிட்டனர்‌.

கரிமுக அம்பி

  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை தலையை போன்று வடிவமைப்பதாகும்

பரிமுக அம்பி

  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை குதிரை தலையை போன்று வடிவமைப்பதாகும்

இத்தாலி நாட்டைச்‌ சேர்ந்த மார்க்கோபோலோ கடற்பயணி.

இரும்பு ஆணிகள்‌ துருப்பிடித்துவிடும்‌ என்பதால்‌ மரத்தினாலான ஆணிகளையே பயன்படுத்தினர்‌. இந்த ஆணிகளைத்‌ தொகுதி என்பர்‌.

“ஆங்கிலேயர்‌ கட்டிய கப்பல்களைப்‌ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்‌. ஆனால்‌ தமிழர்‌ கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள்‌ ஆனாலும்‌ பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று வாக்கர்‌ என்னும்‌ ஆங்கிலேயர்‌ கூறியுள்ளார்‌.

“நளியிரு முந்நீர்‌ நாவாய்‌ ஒட்டி

வளி தொழில்‌ ஆண்ட உரவோன்‌ மருக “  – (பாடல்‌ 66) என்னும்‌ புறப்பாடல்‌ அடிகளில்‌ வெண்ணிக்குயத்தியார்‌ குறிப்பிடுகிறார்‌.

கடலில்‌ செல்லும்‌ கப்பல்களுக்குத்‌ துறைமுகம்‌ இருக்கும்‌ இடத்தைக்‌ காட்டுவதற்காக அமைக்கப்படுவது கலங்கரை விளக்கம்‌ ஆகும்‌.

கலங்கரை விளக்கம் பெயர் காரணம் 

கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது கலங்கரை விளக்கம் ஆகும்.

உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை கொண்டாதாக இஃது அமைக்கப்படும்

கலம் என்றால் கப்பல், கரைதல் என்றால் அழைத்தல் அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் இது கலங்கரை விளக்கம் எனப்படும்.

தமிழர்கள் பயன்படுத்திய பாய்மரங்கள்

1. பெரிய பாய்மரம்   2. திருக்கைத்திப்பாய்மரம்   3. காணப்பாய்மரம்   4. கோசுப்பாய்மரம்

கப்பல் செலுத்துபவர்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள்

1. மாலுமி  2. மீகான்   3. நீகான்  4. கப்பலோட்டி

கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்கள்‌

1.ஏரா      2. பருமல்     3. வங்கு  4. கூம்பு  5. பாய்மரம்  6. சுக்கான்

கப்பலைச்‌ செலுத்துவதற்கும்‌ உரிய திசையில்‌ திருப்புவதற்கும்‌ பயன்படும்‌ முதன்மையான கருவி சுக்கான்‌ எனப்படும்.‌‌

“கலம் தந்த பொற்பரிசம்

கழித் தோணியான், கரை சேர்க்குந்து”(பாடல்‌ 343) என்று புறநானூறு கூறுகிறது.

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”  என்று வள்ளுவர் அழியாத செல்வம் கூறுகிறார்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர் –  என்று கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் தன் குறளின் மூலம் குறை கூறுகிறார்.

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர் – பாரதியார்

“புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் “- நெடுநல்வாடை

“புனையா ஓவியம் புறம் போந்தன்ன” – மணிமேகலை.

“இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்

துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” -பரிபாடல்

கருத்துப்பட ஓவியம் இந்தியா இதழில் பாரதியார்தான் முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தினார். இப்போது பெரும்பாலான இதழ்களில் பார்க்க முடியும் கருத்துப்பட ஓவியம் மற்றொரு வடிவமே கேலிச்சித்திரம் ஆகும். மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே கேலிச்சித்திரம் என்பர்.

ஓவியம் வேறுபெயர்கள் : ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி

ஓவியம் வரைபவர் வேறுபெயர்கள்: கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர், ஒவியர்‌, வித்தத வினைஞன்‌,

ஓவியக் கூடம் வேறுபெயர்கள்: எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை.

வரைகருவிகள்‌: வண்ணந்தீட்டும்‌ கோல்‌ தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள்‌ குழப்பும்‌ பலகைக்கு வட்டிகைப்‌ பலகை எனப்‌ பெயரிட்டிருந்தனர்‌.

புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல்‌ என்னும்‌ குகைக்கோவில்‌ ஒவியங்கள்‌, ஒவியக்‌ கருவூலங்களாக வைத்துப்‌ போற்றத்தகுந்தன. கி.பி. ஒன்பதாம்‌ நூற்றாண்டில்‌ அவனிப சேகர ஸ்ரீவல்லபன்‌ என்ற பாண்டிய மன்னன்‌ காலத்தில்‌, மதுரை ஆசிரியர்‌ இளம்கெளதமன்‌ இவ்வோவியங்களை வரைந்தார்‌ எனக்‌ கல்வெட்டுச்‌ செய்தி அறிவிக்கின்றது.

ஒவியக்‌ கலைஞர்‌ குழுவை ஒவிய மாக்கள்‌ என்றழைத்தனர்‌. ஆண்‌ ஓவியர்‌ சித்திராங்கதன்‌ எனவும்‌, பெண்‌ ஒவியர்‌ சித்திரசேனா எனவும்‌ பெயர்‌ பெற்றிருந்தனர்‌.

பொதியி லாயினும் இமய மாயினும்

பதியெழு அறியாப் பழங்குடி”  (சிலம்பு 14 -15)

என்று இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார். இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் குற்றாலமலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”

என்று குற்றால மலைவளத்தைத் திரிகூட இராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சி நூலில் பாடியுள்ளார்.

திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப்  பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை  (நற்றிணை 23:6)

கொற்கையில் பெருந்துறை முத்து (அகம் 27:9)

என்று சங்க இலக்கியங்கள் கொற்கையின் முத்துகளைக் கூறுகின்றன. கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.

இங்குத் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை,

“திங்கள் நாள்விழா மல்கு திருநெல்

வேலியுறை செல்வர் தாமே” 

என்னும் திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.

ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர் (அந்தம் – முடிவு, ஆதி – முதல்)

திருமாலை போற்றிப்பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும்.

பன்னிரு ஆழ்வார்களுள் பொழ்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தினை தொகுத்தவர் நாதமுனி ஆவார்.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories