8TH BOOK BOX POINT
March 26, 2025 2025-04-08 6:068TH BOOK BOX POINT
8TH BOOK BOX POINT
உயிரளபெடை :
செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். இது உயிரளபெடை எனப்படும் (தழாஅல், வழாஅமை).
கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் அமைப்பு
- ‘ஸ’ எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது.
- மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
- எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன. அரச்சலூர் கல்வெட்டே இதற்குச் சான்றாகும். இக்கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ச், ஞ் – ஆகிய இரு மெய்களும் நாவின் இடைப்பட்டப் பகுதி, நடு அண்ணத்தின் இடைப் பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ட், ண் – ஆகிய இரு மெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ர், ழ் – ஆகிய இரு மெய்களும் மேல் வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
ல் – இது மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
ள் – இது மேல் வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள் (புறநானூறு)
இசையை இரு வகையாகப் பிரிப்பர்
உடுக்கையின் வேறு பெயர்கள்
பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர்.
சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர்.
கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
குழல்கள் வேறு பெயர்கள் – வேய்ங்குழல், புல்லாங்குழல்
புல்லாங்குழல் செய்ய பயன்படும் மரங்கள் – மூங்கில் சந்தனம், செங்காலி, கருங்காலி
கொம்பு இசைக்கருவியின் வகைகள்- ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி.
பேரியாழ் – 21 நரம்புகளை கொண்டது; மகரயாழ் – 19 நரம்புகளை கொண்டது; சகோடயாழ் – 14 நரம்புகளை கொண்டது;
பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இணைச்சொற்கள்
தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம்.
(எ.கா.) தாய் குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தாள்.
இணைச்சொற்கள் மூன்று வகைப்படும். அவை, 1. நேரிணை, 2. எதிரிணை, 3. செறியிணை
நேரிணை :-
ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை எனப்படும்.
- உற்றார்உறவினர்
- வாடிவதங்கி
- நட்டநடுவில்
- பட்டிதொட்டி
- சீரும் சிறப்பும்
- பேரும் புகழும்
எதிரிணை :-
எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை எதிரிணை எனப்படும்.
- விருப்புவெறுப்பு
- காலைமாலை
- உள்ளும்புறமும்
- மேடுபள்ளம்
- ஆடல்பாடல்
- இரவுபகல்
- உயர்வுதாழ்வு
செறியிணை :-
பொருளின் செறிவைக் குறித்து வருவன செறியிணை எனப்படும்.
- கன்னங்கரேல்
- பச்சைப்பசேல்
- வெள்ளைவெளேர்
மழைச்சோற்று வழிபாடு
மழை பெய்யயாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர். கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.
தூத்துக்குடி – முத்து நகரம் சிவகாசி – குட்டிஜப்பான் மதுரை – தூங்கா நகரம் திருவண்ணாமலை – தீப நகரம் திண்டுக்கல் – தமிழ்நாட்டின் ஹாலந்து திருப்பூர் – பின்னலாடை நகரம் ஈரோடு – மஞ்சள் சந்தை சேலம் – மாங்கனி நகரம் ஏற்காடு – ஏழைகளின் ஊட்டி
தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள்
தந்தைப் பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தி தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார். மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார். தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
1988-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் இறப்பிற்கு பின்பு இந்திய அரசு பாரதரத்னா விருதினை வழங்கியது.
என் பகுத்தறிவுப் பிரசசாரத்திற்கு சீர்திருத்தக கருத்துக்களும் முன்னோடியகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிமதணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் என்று கூறியவர் – தந்தை பெரியார்
திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பை தொடங்கியவர் – அயோத்திதாசர் (1892)
பாவை நூல்கள்
மார்கழி மாதம் பொழுது விடியும் முன்பே, பெண்கள் தூக்கத்திலிருந்து எழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் பாவை நோன்பு ஆகும். திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்கள் எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை ஆகும். ஆண்டாள் இந்நூலை பாடியுள்ளார். சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை ஆகும். இந்நூலை பாடியவர் மாணிக்கவாசகர்.