முத்துராமலிங்கத்தேவர்
August 18, 2023 2025-01-16 12:18முத்துராமலிங்கத்தேவர்
முத்துராமலிங்கத்தேவர்
முத்துராமலிங்கத்தேவர்
இயற்பெயர் |
முத்துராமலிங்கத்தேவர் |
ஊர் |
இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் |
காலம் |
30.10.1908 – 30.10.1963 |
பெற்றோர் |
உக்கிர பாண்டியத்தேவர் – இந்திராணி |
குறிப்பு
- இவருக்குக் கற்பித்த ஆசிரியர் குறைவற வாசித்தான் என்பவர் ஆவார்.
-
வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி – என்று முத்தராமலிங்கத் தேவரை பெரியார் பாராட்டியுள்ளார்.
-
முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.
-
சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச்சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பலதுறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார். முத்துராமலிங்கத்தேவர் இளமையிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.
-
முதலில் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் மூன்று மணிநேரம் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராசரும் இருந்தார். ‘இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை’ முத்துராமலிங்கத்தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்’ என்று காமராசர் மகிழ்ந்தார்.
-
முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார்.
-
அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்தனர் இதனால் அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்துள்ளது.
-
வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்கு தடை விதித்தது.
-
வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் பாலகங்காதர திலகர்.
-
வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவரைத் தமது அரசியல் குருவாக ஏறறுக்கொண்டார்.
-
முத்துராமலிங்கத் தேவரின் அழைப்பை ஏற்றுக் 06.09. 1939 ஆம் ஆண்டு நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார். நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத் தேவரின் முயற்சி ஏராளமான தமிழர்கள் இணைந்தனர். விடுதலைக்கு பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்.
-
1938 கால கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழ்ந்தார்.
-
மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவனாந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
-
உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.
-
பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்
-
முத்துராமலிங்கத் தேவர் தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தார்.
-
காந்தியவாதி ஏ.வைத்தியநாத ஐயர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேசத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய விடாமல் தாழ்த்தப்பட்டிருந்த சமூகத்தினருடன் 1939 ஜுலை 08 ஆம் தேதி கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தார் . அதனை எதிர்த்து அர்ச்சகர்கள் ஆலயப்பணியைப் புறக்கணித்தனர். தேவர் திருச்சுழியில் இருந்து அர்ச்சகர்கள் இருவரை அழைத்துவந்து ஆலய நுழைவுப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்தார்.
- தெய்வீகம், தேசியம் ஆகிய இரண்டையும் இரு கண்ணாகப் போற்றியவர் பசும்பொன்னார். இவர், “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும்வீணாகும்“ என எடுத்துரைத்தவர். இவர் சமயச் சான்றோராகவும் கருதப்பட்டார்.
முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்ட இடங்கள்
-
அலிப்பூர்
-
அமராவதி
-
தாமோ
-
கல்கத்தா
-
சென்னை
-
வேலூர்
முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள்
-
தேசியம் காத்த செம்மல்
-
வித்யா பாஸ்கர்
-
பிரவசன கேசரி
-
சன்மார்க்க சண்டமாருதம்
-
இந்து புத்தசமய மேதை