Blog

தமிழின் தொன்மை

Class 46 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

தமிழின் தொன்மை

உலகின்‌ மிகப்பழைமையான நிலப்பகுதி குமரிக்கண்டம்‌. அந்நிலப்பகுதி கடல்கோளால்‌ மூழ்கிவிட்டது. அத்தொன்னிலத்தில்தான்‌ தமிழ்‌ தோன்றியதெனத்‌ தண்டியலங்கார மேற்கோள்‌ செய்யுள்‌ கூறுகிறது.
ஒங்க லிடைவந்‌ துயர்ந்தோர்‌ தொழவிளங்கி
ஏங்கொலிநீர்‌ ஞாலத்‌ திருளகற்றும்‌ – ஆங்கவற்றுள்‌
மின்னேர்‌ தனியாழி வெங்கதிரொன்‌ றேனையது
தன்னே ரிலாத தமிழ்‌.
நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம். என்று பாடியவர்” – பாரதியார்
 “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாடியவர் பாரதியார்
சீர்மை மொழி
சீர்மை என்பது ஒழுங்கு முறையைக்‌ குறிக்கும்‌ சொல்‌. தமிழ்‌ மொழியின்‌ பலவகைச்‌ சீர்மைகளுள்‌ அதன்‌ சொற்சிறப்பு குறிப்பிடத்தக்கது.
உயர்திணை, அஃறிணை என இருவகைத்‌ திணைகளை அறிவோம்‌. உயர்திணையின்‌ எதிர்ச்சொல்‌ தாழ்திணை என அமையவேண்டும்‌. ஆனால்‌ தாழ்திணை என்று கூறாமல்‌ அஃறிணை (அல்‌ + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர்‌ இட்டனர்‌ நம்‌ முன்னோர்‌.
பாகற்காய்‌ கசப்புச்சுவை உடையது. அதனைக்‌ கசப்புக்காய்‌ என்று கூறாமல்‌, இனிப்பு அல்லாத காய்‌ பாகற்காய்‌ (பாகு + அல்‌ + காய்‌) என வழங்கினர்‌. இவ்வாறு பெயரிடூவதிலும்‌ சீர்மை மிக்கது தமிழ்‌ மொழி.
சொல்‌
முதலில்‌ ஆளப்படும்‌ இலக்கியம்‌
மேற்கோள்‌ 
தமிழ்‌
தொல்காப்பியம்‌ -385
தமிழென் கிளவியும் அதனோ ரற்றே
தமிழ்‌நாடு
சிலப்பதிகாரம்‌
வஞ்சிக்காண்டம்‌-165
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
தமிழன்‌
அப்பர்‌ தேவாரம்‌
திருத்தாண்டகம் – 236
தமிழன் கண்டாய்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்
சொல்
இடம்பெற்ற நூல்
வேளாண்மை
கலித்தொகை -101, திருக்குறள் – 81
உழவர்
நற்றிணை – 4
பாம்பு
குறுந்தொகை – 239
வெள்ளம்
பதிற்றுப்பத்து – 15
முதலை
குறுந்தொகை – 324
கோடை
அகநானூறு – 42
உலகம்
தொல்காப்பியம், கிளவியாக்கம் – 56 திருமுருகாற்றுப்படை – 1
மருந்து
அகநானூறு -147, திருக்குறள் – 952
ஊர்
தொல்காப்பியம், அகத்திணையியல் – 41
அன்பு
தொல்காப்பியம், களவியல் – 110, திருக்குறள் – 84
உயிர்
தொல்காப்பியம், கிளவியாக்கம் – 56, திருக்குறள் – 955
மகிழ்ச்சி
தொல்காப்பியம், கற்பியல் -142, திருக்குறள் – 531
மீன்
குறுந்தொகை – 54
புகழ்
தொல்காப்பியம், வேற்றுமையியல் – 71
அரசு
திருக்குறள் – 554
செய்
குறுந்தொகை – 72
செல்
தொல்காப்பியம் – 75 புறத்திணையியல்
பார்
பெரும்பாணாற்றுப்படை – 435
ஒழி
தொல்காப்பியம், கிளவியாக்கம் – 48
முடி
தொல்காப்பியம், வினையியல் – 206
“பேசப்படுவதும்‌ கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும்‌ படிக்கப்படுவதும்‌ அடுத்தநிலையில்‌ வைத்துக்‌ கருதப்படும்‌ மொழியாகும்‌ இவையே அன்றி வேறு வகை மொழிநிலைகளும்‌ உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது கனவு காணப்படுவது ஆகியவையும்‌ மொழியே ஆகும்‌”  –      மு.வரதராசனார்‌.
“எடுத்தல்‌ படுத்தல்‌ நலிதல்‌ உழப்பில்‌‌
திரிபும்‌ தத்தமில்‌ சிறிது உள வாகும்‌” – நன்னூல்‌ நூற்பா.
“எளியநடையில்‌ தமிழ்நூல்‌ எழுதிடவும்‌ வேண்டும்‌
இலக்கணநூல்‌ புதிதாக இயற்றுதலும்‌ வேண்டும்‌.
வெளியுலகில்‌, சிந்தனையில்‌ புதிதுபுதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும்‌ பெயர்கள்‌ எல்லாம்‌ கண்டு
தெளிவுறுத்தும்‌ படங்களொடு சுவடிஎலாம்‌ செய்து
செந்தமிழைச்‌ செழுந்தமிழாய்ச்‌ செய்வதுவும்‌ வேண்டும்‌.”
என்பது பாவேந்தரின்‌ ஆசை
தமிழ்‌ வரிவடிவ வளர்ச்சி
தொடக்க காலத்தில்‌ எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல்‌ பொருளின்‌ ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்‌.
ஓர்‌ ஒலிக்கு ஓர்‌ எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்‌. இன்று உள்ள இதறிந்து எழுத்துகள்‌ ஒரு காலத்தில்‌ பொருள்களின்‌ ஓவியமாக இருந்தவற்றின்‌ திரிபுகளாகக்‌ கருதப்படுகின்றன.
கல்வெட்டுகளில்‌ உள்ள எழுத்துகளின்‌ அமைப்பு
  1. ‘ஸ’ எனும்‌ வடமொழி எழுத்து காணப்படுகிறது.
  2. மெய்யைக்‌ குறிக்கப்‌ புள்ளி பயன்படுத்தவில்லை.
  3. எகர, ஒகரக்‌ குறில்‌ நெடில்‌ வேறுபாடில்லை.
கல்வெட்டுகள்‌, செப்பேடுகள்‌ ஆகியவற்றில்‌ காணப்படும்‌ வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப்‌ பிரிக்கலாம்‌. வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால்‌ அமைந்த மிகப்‌ பழைய தமிழ்‌ எழுத்து ஆகும்‌. தமிழெழுத்து என்பது இக்காலத்தில்‌ எழுதப்படும்‌ தமிழ்‌ எழுத்துகளின்‌ பழைய வரி வடிவம்‌ ஆகும்‌
தமிழ்‌ மொழியை எழுத இருவகை எழுத்துகள்‌ வழக்கிலிருந்தன என அரச்சலூர்‌ கல்‌வவட்டே அறிகிறோம்‌.
(i) புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்.
(ii) நேர்க்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும்.
(iii) ஓலைச்சுவடிகளில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது.
ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
கடைச்சங்க காலத்தில்‌ தமிழகத்தில்‌ எழுதப்பட்ட எழுத்துகள்‌ கண்ணெழுத்துகள்‌ என்று அழைக்கப்பட்டன. இதனைச்‌ சிலப்பதிகாரத்தில்‌ இடம்பெறும்‌
“கண்ணெழுத்துப்‌ படுத்த எண்ணுப்‌ பல்பொதி” (சிலம்பு 5 : 112)

புள்ளிகளும் எழுத்துகளும்

அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் கருதப்பட்டன. (க. = கா, த. = தா ). ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின்முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (..க = கை). எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஔகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ, தெ.. = தௌ).

உருவ மாற்றம்

நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுத்தப்படுகிறது.

ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு  பயன்படுத்தப்படுகிறது.

ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுத்தப்படுகிறது.

குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின்மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.

எழுத்துச் சீர்திருத்தம்

தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். “எ” என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு “ஏ” என்னும் எழுத்தை நெடிலாகவும் “ஒ” என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு “ஓ” என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார். அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு (வே), இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து (கோ) புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்

வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பு வரை ”எ”கரம், ”ஒ”கரம் இரண்டும் நெடில் எழுத்தாகவும் ”எ”கரம், “ஒ”கரத்துக்கு மேல் ஒரு புள்ளி வைத்தால் அவை குறில் எழுத்தாகவும் கருதப்பட்டு வந்தன. . இந்த முறையை மாற்றி ”எ”, “ஒ” இரண்டும் குறில் என்றும் ”ஏ”, “ஓ” இரண்டும் நெடில் என்றும் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் வீரமாமுனிவர்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தம்
 இவற்றை அச்சுக் கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டுத் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
காலந்தோறும் ஏற்பட்ட இவ்வாறான வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ் மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது; தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது.
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்  – பிங்கல நிகண்டு
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – பாரதியார்
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள்:
  • இலங்கை
  • சிங்கப்பூர்
***உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21***
ஓலைச்சுவடி
அந்தக்‌ காலத்தில்‌ தாளோ எழுதுகோலோ இல்லை. பனை ஓலையைப்‌ பக்குவப்படுத்தி, அதில்‌ எழுத்தாணி கொண்டு எழுதுவர்‌. அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு “ஓலைச்சுவடி” என்று பெயர்‌. அக்காலத்தில்‌ இலக்கியங்களும்‌ இலக்கணங்களும்‌ ஓலைச்சுவடிகளில்தான்‌ எழுதப்பட்டன. ஆணியால்‌ ஓலையில்‌ எழுதும்போது, ஒலை கிழியாமல்‌ எழுதுதல்‌ வேண்டும்‌. அதனால்‌, ஓலைச்சுவடி எழுத்துகளில்‌ புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது. பேரன்‌ என்பதனைப்‌ பெரன என்றும்‌ வாசிக்கலாம்‌. பேரன என்றும்‌ வாசிக்கலாம்‌. முன்னும்‌ பின்னும்‌ உள்ள வரிகளை வைத்துப்‌ பொருள்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories