ரா.பி. சேது
August 28, 2023 2025-01-11 13:56ரா.பி. சேது
ரா.பி. சேது
ரா பி சேதுப்பிள்ளை
ரா பி சேதுப்பிள்ளை வாழ்க்கைக்குறிப்பு
-
ஊர்: நெல்லை மாவட்டம் ராசவல்லிபுரம்
-
பெற்றோர்: பெருமாள் பிள்ளை, சொர்ணத்தம்மாள்
சிறப்புபெயர்கள்
-
சொல்லின் செல்வர்
-
செந்தமிழுக்கு சேதுபிள்ளை
படைப்புகள்
-
தமிழின்பம் (சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல்) (நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்)
-
செந்தமிழும் கொடுந்தமிழும்
-
வீரமாநகர்
-
வேலும் வில்லும்
-
திருவள்ளுவர் நூல் நயம் (முதல் கட்டுரை நூல்)
-
சிலப்பதிகார நூல் நயம்
-
தமிழ் விருந்து
-
தமிழர் வீரம் (நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்)
-
கடற்கரையிலே
-
தமிழ்நாட்டு நவமணிகள்
-
வாழ்கையும் வைராக்கியமும்
-
இயற்கை இன்பம்
-
கால்டுவெல் ஐயர் சரிதம்
-
Tamil words and their significance
-
தமிழக ஊரும் பேரும் (நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்)
(படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது. மேலும்,
-
தமிழின்பம்
-
தமிழ் வீரம்
-
தமிழ்விருந்து (நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்)
-
வேலின்வெற்றி (நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்)
-
வழிவழி வள்ளுவர்
-
ஆற்றங்கரையினிலே (நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்)
-
தமிழ்க்கவிதைக் களஞ்சியம்
-
செஞ்சொற் கவிக்கோவை
-
பாரதியாரின் கவித்திரட்டு
-
கடற்கரையினிலே (நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்)
-
கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் (நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்)
-
மேடைப் பேச்சு (நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்)
பதிப்பித்தவை
-
திருக்குறள் எல்லீஸ் உரை
-
தமிழ் கவிதைக் களஞ்சியம்
-
பாரதி இன்கவித் திரட்டு
குறிப்பு
-
இவர் அடிப்படையில் வழக்கறிஞர்
-
சென்னை பல்கலைகழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர்
-
எதுகை மோனை அமையப் பேசவும் எழுதவும் வல்லவர்
-
இரா. பி. சேதுப்பிள்ளையின் முன்னெழுத்துகளாக அமைந்த ‘இரா’ என்பது இராசவல்லிபுரத்தையும் ‘பி’ என்பது ‘பிறவிப்பெருமான்பிள்ளை’ அவர்களையும் குறிப்பன.
-
இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார்.
-
ரா. பி. சேதுப்பிள்ளை (1896 – 1961) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
-
உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.
-
சேதுப்பிள்ளை தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்து விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறாண்டுகள் பணி புரிந்தார்
-
வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார்.
-
சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் இவரது கம்பராமாயணச் சொற்பொழிவு மூன்றாண்டுகள் நடைபெற்றது.
-
அச்சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பர் கழகம் நிறுவப்பட்டது.
-
கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.
-
சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்னும் விருது வழங்கியது.
-
சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்.
அதர் என்பது ஒரு பழைய தமிழ்ச்சொல். வழி என்பது அச்சொல்லின் பொருள். காற்று வருவதற்காக வீட்டில் அமைக்கும் ஐன்னலுக்குக் காலதர் என்று பண்டைத்தமிழர் பெயரிட்டனர். ஜன்னல் என்பது தமிழ்ச்சொல்லன்று; போர்ச்சுக்கீசியப் பதம். காலதர் – கால் என்றால் காற்று; அதர் என்றால் வழி. காலதர் என்றால் காற்று வரும் வழி. இக்காலத்தில் பேச்சுவழக்கில் இல்லாத அதர் என்னும் சொல்லைத் திருக்குறள் முதலிய பல பழைய உரைநூல்களில் காணலாம். -ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழ் விருந்து.