Blog

செய்நன்றியறிதல்‌

Old Syllabus

செய்நன்றியறிதல்‌

1.செய்யாமற்‌ செய்த உதவிக்கு வையகமும்‌

வானகமும்‌ ஆற்றல்‌ அரிது.

விளக்கம்‌: நாம்‌ பிறர்க்கு ஒரு உதவியும்‌ செய்யாதிருக்க, நமக்கு பிறர்‌ செய்கின்ற உதவிக்கு இந்த மண்ணுலகமும்‌, விண்ணுலகமும்‌ ஈடாகாது.

 

2.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்‌

ஞாலத்தின்‌ மாணப்‌ பெரிது.

விளக்கம்‌: வேண்டிய காலத்தில்‌ ஒருவன்‌ செய்த உதவி சிறியதாக இருந்தாலும்‌ அது செய்யபட்ட காலத்தை ஆராய்ந்து பார்த்தால்‌

இவ்வுலகத்தை விட பெரியதாகும்‌.

 

3.பயன்தூக்கார்‌ செய்த உதவி நயன்தூக்கின்‌

நன்மை கடலின்‌ பெரிது.

விளக்கம்‌: எந்த பயனையும்‌ எதிர்பார்க்காமல்‌ செய்கின்ற உதவி கடலை விட பெரியதாகும்‌.

 

4.தினைத்துணை நன்றி செயினும்‌ பனைத்துணையாக்‌

கொள்வர்‌ பயன்தெரி வார்‌.

விளக்கம்‌: ஓருவன்‌ தினை அளவு உதவி செய்தாலும்‌ அப்பயனை உணர்ந்தவர்‌ அவ்வுதவியை பனை அளவாக கருதி போற்றுவர்‌.

 

  1. உதவி வரைத்தன்‌ றுதவி உதவி

செயப்பட்டார்‌ சால்பின்‌ வரைத்து.

விளக்கம்‌: ஒருவருக்கு செய்யும்‌ உதவி அவ்வுதவியின்‌ அளவை வைத்து மதிக்ககூடாது. அவ்வுதவி செய்யபட்டவரின்‌ தன்மையை வைத்து மதிக்க வேண்டும்‌.

 

6.மறவற்க மாசற்றார்‌ கேண்மை துறவற்க

துன்பத்துள்‌ துப்பாயார்‌ நட்பு.

விளக்கம்‌: துன்பம்‌ வந்த காலத்தில்‌ நமக்கு உதவி செய்தவரின்‌ நட்பை கைவிட கூடாது. அது நமக்கு பாதுகாப்பாக இருக்கும்‌.

 

  1. எழுமை எழுபிறப்பும்‌ உள்ளுவர்‌ தங்கண்‌

விழுமந்‌ துடைத்தவர்‌ நட்பு.

விளக்கம்‌; நமக்கு துன்பம்‌ நேர்ந்த காலத்தில்‌ உதவி செய்தவர்களின்‌ நட்பை ஏழு பிறவிகளிலும்‌ மறக்க கூடாது.

 

8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல

தன்றே மறப்பது நன்று.

விளக்கம்‌; பிறர்‌ செய்த உதவியை எப்பொழுதும்‌ மறக்க கூடாது. அனால்‌ அவர்‌ செய்த தீமை அப்பொழுதே மறந்து விட வேண்டும்‌.

 

9.கொன்றன்ன இன்னா செயினும்‌ அவர்செய்த

ஒன்றுநன்‌ றுள்ளக்‌ கெடும்‌.

விளக்கம்‌: உதவி செய்த ஒருவர்‌ கொலை குற்றம்‌ செய்தாலும்‌ அவர்‌ முன்பு செய்த நன்மையை நினைக்க தீமை மறைந்துவிடும்‌.

 

10.எந்நன்றி கொன்றார்க்கும்‌ உய்வுண்டாம்‌ உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

விளக்கம்‌: எந்தவித தவறு செய்தவனுக்கும்‌ தப்பிக்க வழிகள்‌ உண்டு. ஆனால்‌ ஒருவர்‌ செய்த உதவியை மறந்தவனுக்கு அதிலிருந்து தப்ப வழி இல்லையாம்‌.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories