திருக்குறள் தொடர்பான செய்திகள்
October 3, 2023 2025-04-16 4:38திருக்குறள் தொடர்பான செய்திகள்
திருக்குறள் தொடர்பான செய்திகள்
திருக்குறள்
- “திருக்குறள்” – திரு+குறள்
- இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
- திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
- “குறள்” எனவும், மேன்மை கருதித் ‘திரு’ என்னும் அடைமொழியுடன் ‘திருக்குறள்’ எனவும் வழங்கப்பெறுகிறது.
- அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளையும் விரித்து உரைப்பது திருக்குறள். எனவே, இந்நூல் ‘முப்பால்’ எனவும் பெயர் பெற்றது.அவை
பிரிவுகள் :
அறத்துப்பால் – 38 அதிகாரங்கள் – 4 இயல்கள்
-
பாயிரவியல் – 4 அதிகாரங்கள்
-
இல்லறவியல் – 20 அதிகாரங்கள்
-
துறவறவியல் – 13 அதிகாரங்கள்
-
ஊழியல் – 1 அதிகாரம்
பொருட்பால் – 70 அதிகாரங்கள் – 3 இயல்கள்
-
அரசியல் – 25 அதிகாரங்கள்
-
அமைச்சியல் – 32 அதிகாரங்கள்
-
ஒழிபியல் – 13 அதிகாரங்கள்
காமத்துப்பால் – 25 அதிகாரங்கள் – 2 இயல்கள்
-
களவியல் – 7 அதிகாரங்கள்
-
கற்பியல் – 18 அதிகாரங்கள்
திருக்குறள் தொடர்பான செய்திகள்
-
திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
-
7 சீரால் அமைந்தது.
-
7 என்னும் எண்ணுப்பெயர் 8 குறட்பாக்களில் உள்ளது.
-
அதிகாரங்கள் – 133 —> 1+3+3 = 7
-
குறள்கள் – 1330 —> 1+3+3+0 = 7
-
திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன.
-
திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது
-
உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
-
இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
-
உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல்
-
திருக்குறள் – நூற்றெழு (107) மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-
பழமொழி:
* “ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின்
அருமையையும் விளக்குகிறது.
* “பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்”
-
மலையச்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
சிறப்புப் பெயர்கள்:
-
உலகப் பொதுமறை
-
முப்பால்
-
வாயுறை வாழ்த்து
-
பொதுமறை
-
பொய்யாமொழி
-
தெய்வநூல்
-
தமிழ்மறை
-
முதுமொழி
-
உத்தரவேதம்
-
திருவள்ளுவம்
திருக்குறள் சிறப்பு :
விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள், விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. – குறள், 350
இக்குறளைப் படிக்கும்போது உதடுகள் ஒட்டும்; இதன் பொருளோ இறைவனைப் பற்றி நிற்கும்.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். – குறள், 754
அறம், பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வந்த குறள்.
திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்:
-
தருமர்
-
தாமத்தர்
-
பரித
-
திருமலையர்
-
பரிப்பெருமாள்
-
மணக்குடவர்
-
நச்சர்
-
பரிமேலழகர்
-
மல்லர்
-
காளிங்கர்
சிறந்தது – பரிமேலழகர் உரை
தருமர் மணக்குடவர், தாமத்தர், நச்சர்,பரிதி, பரிமே லழகர், – திருமலையர்,மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர் வள்ளுவர்நூற்கு எல்லையுரை செய்தார் இவர்
திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர் – தருமர்
திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர் – பரிமேழலகர்
மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்.
திருவள்ளுவர்:
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
இவரது காலம் கி .மு.31 என்று கூறுவர் . இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி
திருவள்ளுவர் சிறப்புப்பெயர்கள்
-
செஞ்ஞாப்போதார்,
-
தெய்வப் புலவர்,
-
நாயனார்,
-
முதற்பாவலர்,
-
நான்முகனார்,
-
மாதானுபாங்கி,
-
பெருநாவலர்,
-
பொய்யில் புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.
திருவள்ளுவரின் காலம்:
கி.மு.1 – வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
கி.மு.31 – மறைமலை அடிகள் (இதனை நாம் பின்பற்றுகிறோம்)
கி.மு.1-3 – இராசமாணிக்கனார்
திருக்குறள் மொழிப்பெயர்ப்பு:
-
இலத்தின் – வீரமாமுனிவர்
-
ஜெர்மன் – கிரால்
-
ஆங்கிலம் – ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி
-
பிரெஞ்ச் – ஏரியல்
-
வடமொழி -அப்பாதீட்சிதர்
-
இந்தி – பி.டி.ஜெயின்
-
தெலுங்கு – வைத்தியநாத பிள்ளை
திருவள்ளுவர் சிறப்பு:
-
தமிழ் மனிதன் இனிய உயிர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படுகிறது
-
மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை திருக்குறள்.
-
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் – அவ்வையார்
-
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – பாரதியார்
-
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே – பாரதிதாசன்
-
இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே – பாரதிதாசன்
-
உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம் – கால்டுவெல்
-
சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் , திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் – காந்தியடிகள்
-
உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
-
இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது
-
திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று . அது மன்பதைக்கு உலகுக்குப் பொது – திரு.வி.க
-
திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் , தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது – கி.ஆ.பெ.விசுவநாதம்.
முக்கிய அடிகள்:
-
அறத்தான் வருவதே இன்பம்
-
மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்
-
திருவேறு தெள்ளியராதலும் வேறு
-
பெண்ணிற் பெருந்தக்க யாவுள்
-
ஊழிற் பெருவழி யாவுள
-
முயற்சி திருவினை யாக்கும்
-
இடுக்கண் வருங்கால் நகுக
-
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
-
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
மொழிபெயர்ப்பு:
107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
லத்தீன் – விரமாமுனிவர்
ஆங்கிலம் – ஜி.யு.போப்
திருவள்ளுவமாலை நூல் குறிப்பு:-
திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.
-
திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் நூல் எழுந்தது.
-
இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன.
-
ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளனர்.
-
“திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்டபனையளவு காட்டும் படித்தால்; மனையளகு வள்ளைக் (கு) உறங்கும் வளநாட ! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா வரி” – கபிலர்
-
திருக்குறளுக்கு உள்ள வேறு பெயர்கள்
- உத்தரவேதம்
- பொய்யாமொழி
- வாயுரை வாழ்த்து
- தெய்வநூல்
- பொதுமறை
- முப்பால்
- தமிழ்மறை
- ஈரடி நூல்
- வான்மறை
- உலகப்பொதுமறை
வள்ளுவரின் பல பெயர்கள்- தெய்வப் புலவர்
- செந்நாப் புலவர்
- தெய்வத் திருவள்ளுவர்
- செந்நாப் போதார்
- தெய்வத் திருவள்ளுவர்
- தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
- தேவர்
- திருவள்ளுவர்
- பொய்யில் புலவர்
- வள்ளுவ தேவன்
- வள்ளுவர்
- நாயனார்
- முதற்பாவலர்
- பெருநாவலர்
- பொய்யா மொழியார்
திருக்குறள் பற்றிய கூடுதல் தகவல்கள்- தமிழ், கடவுள் என்னும் சொற்கள் திருக்குறளில் பயன்படுத்தவில்லை.
- 1812 ஆம் ஆண்டு திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்டது.
- வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு முதல் பெயர் முப்பால் என்பர்.
- அறத்துப்பாலில் 380 குறட்பாக்கள்
- பொருட்பாலில் 700 குறட்பாக்கள்
- இன்பத்துப்பாலில் 250 குறட்பாக்கள்
- குறட்பா அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால் ஏழு சீர்களைக் கொண்டது.
- திருக்குறளில் மொத்த சொற்கள் 14,000 உள்ளன.
- திருக்குறளில் 42,194 எழுத்துகள் உள்ளன.
- தமிழ் எழுத்துகள் 247இல் 37 எழுத்துகள் மட்டும் திருக்குறளில் இடம்பெறவில்லை.
- திருவள்ளுவர் பதிவு செய்துள்ள இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
- திருவள்ளுவர் பதிவு செய்துள்ள ஒரே பழம் – நெருஞ்சிப் பழம்.
- திருவள்ளுவர் பதிவு செய்துள்ள ஒரே விதை – குன்றிமணி.
- வள்ளுவர் காலம் – கி.மு 31
- வள்ளுவர் பயன்படுத்தாத எண்ணுப் பெயர் – ஒன்பது (9)
- திருக்குறளை உரை இல்லாமல் அச்சுப் பணி செய்தவர் – ஞானப்பிரகாசர்
- இலத்தீனில் குறளை மொழிபெயர்த்த வெளிநாட்டவர் – வீரமாமுனிவர்
- திருக்குறளின் சிறப்புக்கும் பெருமைக்கும் துணையாக விளங்குகிறது திருவள்ளுவமாலை
- இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று பதிவு செய்தவர் பாரதிதாசன்
- திருவள்ளுவர் இருமுறை பதிவு செய்துள்ள ஓரே அதிகாரம் – குறிப்பறிதல்
- எல்லீஸ் என்பவர் திருவள்ளுவர் படம் பொதிந்த நாணயத்தை வெளியிட்டுள்ளார்
- அறத்துப்பாலில் உள்ள இயல்கள் நான்கு.
- ஒரே திருக்குறளில் ஆறு முறை வந்துள்ள சொல் – பற்று
- திருக்குறள் பொருட்பாலில் 700 குறட்பாக்கள் உள்ளன.
- திருக்குறளில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து – னி
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத உயிர் எழுத்து – ஔ
- திருக்குறளில் 37 தமிழ் எழுத்துகள் இடம்பெறவில்லை என்கின்றனர்.
- பரிமேலழகர் – திருக்குறள் உரையாசிரியர்களுள் பத்தாவது உரையாசிரியர்
- திருக்குறளில் இரண்டு மரங்கள் இடம்பெற்றுள்ளன – பனை, மூங்கில்
- ஒரு திருக்குறளில் 7 சீர்கள் உள்ளது.
- திருக்குறளின் இயல்களின் எண்ணிக்கை – ஒன்பது (9)
- திருக்குறள் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்கின்றனர்.