Blog

நாலடியார்

3
Class 45 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

நாலடியார்

நாலடியார்
திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.
இது ‘நாலடி நானூறு’ எனவும் அழைக்கப்படுகிறது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள “ஒரே தொகை நூல்” நாலடியார் ஆகும்.
  • ஆசிரியர் : சமண முனிவர்களால்
  • பா வகை : வெண்பா
  • பாடல் எண்ணிக்கை : 400
40 அதிகாரங்களைக் கொண்டது, (அதிகாரத்தத்துக்கு பத்து பாடல்கள் வீதம் 400 பாடல்களைக் கொண்டது)
இயற்றப்பட்ட காலம் : (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்)
வேறு பெயர்கள்:
நாலடி நானூறு
வேளாண் வேதம்
திருக்குறளைப் போன்றே முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
  1. அறத்துப்பால் : 13
  2. பொருட்பால் : 24
  3. காமத்துப்பால் : 3
நூலிற்கு உரை கண்டவர்:
தருமர்
பதுமனார்
நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.
ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
நூலின் பெருமையை கூறும் அடிகள்:
“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”,
“நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் வரும், நாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும் குறிப்பதாகும்.
மேற்கோள்கள்:
1.“கல்வி கரையில கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து. ”
2.“ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப் பால்உண் குருகின் தெரிந்து”
3.“கல்வி அழகே அழகு”
—————————————————————————————————————————————————————————————————————————–
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம் செய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு – சமண முனிவர்

 

“வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற”.*                                -சமண முனிவர்

விளக்கம்

கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால்  கொள்ளபடாது.

ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.

மிக்க சிறப்பினை உடைய அரசாலும் கவர முடியாது.

ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும்.

மற்றவை செல்வம் ஆகாது.

 

நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.

இது நானூறு வெண்பாக்களால் ஆனது.

நாலடி நானூறு, வேளாண் வேதம் என அழைக்கப்ட்டது.

திருக்குறளை போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் பகுப்புகளை கொண்டது.

இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை “நாளும் இரண்டும் சொல்லும் சொல்லுக்குறுதி” என்னும் தொடர் மூலம் அறியலாம்.

 

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.            -சமண முனிவர்

பாடல்பொருள்‌

நாயின்‌ கால்விரல்கள்‌ நெருங்கி இருக்கும்‌. அதனைப்போலச்‌ சிலர்‌ நம்மோடு நெருக்கமாக இருப்பார்கள்‌. ஆனால்‌, அவர்கள்‌ ஈயின்‌ கால்‌ அளவுக்குக்கூட நமக்கு உதவ மாட்டார்கள்‌. அப்படிப்பட்டவர்கள்‌ நட்பால்‌ நமக்கு என்ன பயன்‌ ?

வாய்க்கால்‌, தொலைவிலுள்ள நீரைக்‌ கொண்டுவரும்‌; அந்நீரை வயலுக்குப்‌ பாய்ச்சி விளைய உதவும்‌. வாய்க்காலைப்போல உதவும்‌ மனிதர்கள்‌ இருக்கிறார்கள்‌. எவ்வளவு தொலைவில்‌ இருந்தாலும்‌ அவர்கள்‌ நட்பை நாம்‌ தேடிக்கொள்ளுதல்‌ வேண்டும்‌.

நூல்குறிப்பு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்‌ ஒன்று நாலடியார்‌. இந்நூல்‌,

நானூறு பாடல்களைக்‌ கொண்டது. அறக்கருத்துகளைக்‌ கூறுவது.

“நாலடி நானூறு” என்னும்‌ சிறப்புப்‌ பெயரும்‌ இதற்கு உண்டு. இந்நூல்‌, சமணமுனிவர்‌ பலர்‌ பாடிய பாடல்களின்‌ தொகுப்பு.

 

பதினெண்கீழ்க்கணக்கு – விளக்கம்‌

சங்க நூல்கள்‌ எனப்படுபவை பத்துப்பாட்டும்‌ எட்டுத்தொகையும்‌. பத்துப்பாட்டில்‌ பத்து நூல்களும்‌, எட்டுத்தொகையில்‌ எட்டு நூல்களுமாக மொத்தம்‌ பதினெட்டு நூல்கள்‌. இவற்றை, “மேல்கணக்கு நூல்கள்‌” எனக்‌ கூறுவர்‌. சங்கநூல்களுக்குப்பின்‌ தோன்றியநூல்களின்‌ தொகுப்பு, “பதினெண்கீழ்க்கணக்கு ” என வழங்கப்படுகிறது. இத்தொகுப்பிலும்‌ பதினெட்டு நூல்கள்‌ உள்ளன. பதினெண்‌ என்றால்‌, பதினெட்டு என்பது பொருள்‌. இந்நூல்களைக்‌ கீழ்க்கணக்கு நூல்கள்‌ எனவும்‌ கூறுவர்‌. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்‌ பெரும்பாலானவை அறநூல்களே.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories