நான்மணிக்கடிகை
October 3, 2023 2025-01-18 13:24நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை
-
பாடல் எண்ணிக்கை : 101
-
ஆசிரியர் : விளம்பி நாகனார்
-
பாவகை : வெண்பா
-
இயற்றப்பட்ட காலம் : நான்காம் நூற்றாண்டு
-
நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
-
கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை.
-
நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
-
முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
-
கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றியது.
-
ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது
-
நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
-
ஜி.யு.போப் இந்நூலின் இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
-
நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் ‘நான்மணிக்கடிகை’ என்று அழைக்கப்படுகிறது.
முக்கிய அடிகள்
-
“யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
-
“இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க வெல்வது வேண்டின் வெகுளிவிடல்”
-
“இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்”
-
“ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல் கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்”
-
“மனைக்கு விளக்கம் மடவாள் மடவாளுக்கு விளக்கம் புதல்வர் புதல்வர்க்கு விளக்கம் கல்வி கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு”
பாடல்
மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர்; – மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு.
பாடல்பொருள்
குடும்பத்தின் விளக்குப் பெண்ணாவாள். அப்பெண்ணுக்கு விளக்கினைப் போன்றவர்கள், அவள் பெற்ற பண்பில் சிறந்த பிள்ளைகள். மனத்திற்கினிய அன்புமிக்க அப்பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி. அக்கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால், அவர்களிடம் உள்ள நல்லெண்ணங்களே.
சொல்பொருள்
மடவார் – பெண்கள்
தகைசால் – பண்பில் சிறந்த
மனக்கினிய – மனத்துக்கு இனிய
காதல் புதல்வர் – அன்புமக்கள்
ஒதின் -. எதுவென்று சொல்லும்போது
புகழ்சால் – புகழைத்தரும்
உணர்வு -. நல்லெண்ணம்
ஆசிரியர் குறிப்பு : நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார். விளம்பி என்பது ஊர்ப்பெயர்; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
நூல் குறிப்பு : நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள். நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள். ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது.