Blog

ஏலாதி

1234
Class 45 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

ஏலாதி

நூல் குறிப்பு
பாடல்கள்
பாயிரம் – 1,
தற்சிறப்பாயிரம் – 1,
பாடல்கள் – 80
பாவகை = வெண்பா
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துக்கு ஏலாதி எனப் பெயர்.
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் = கணிமேதாவியார்
சமயம் = சமணம்
காலம் = கி.பி. 5ஆம் நூற்றாண்டு
இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது.
பெயர்க்காரணம்
ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று,
இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
பொதுவான குறிப்புகள்
உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில்
1. எடுத்தல்
2. முடக்கல்
3. நிமிர்தல்
4. நிலைத்தல்
5. படுத்தல்
6. ஆடல்
மேற்கோள்
“தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார் கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார் வைத்து வழங்கிவாழ் வார்”
தலைஇழந்த – தலைமகனை இழந்த கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொருளால் உண்ணும் பேற்றினை இழந்தவர். கொடையாளி கைக்குப் பொருள்வந்து சேரும்.
“சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது மேவல் எளிது; அரிது மெய்போற்றல்”
இறத்தல் எளியது, அதற்கு முன் நல்லோன் எனப் பெயர்படைத்தல் அரியது, நல்ல பொருளை விரும்பி யதனை யடைதல் எளியது, வாய்மையைத் தனக்குக் காப்பாகக் கொண்டொழுகுவது அரியது.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories