Blog

ஐம்பெரும் காப்பியங்கள் – தொடர்பான செய்திகள்.

6666 IPERU
Old Syllabus

ஐம்பெரும் காப்பியங்கள் – தொடர்பான செய்திகள்.

காப்பியங்கள்
  • “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும்.
  • காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்
  • காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.
ஐம்பெரும் காப்பியங்கள்
  • ஐம்பெரும் காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்
  • ஐம்பெரும் காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா)
  • சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள்
  • மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார்
  • சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர்
  • வளையாபதி = பெயர் தெரியவில்லை
  • குண்டலகேசி = நாதகுத்தனார்
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.
  • சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
  • புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை, குண்டலகேசி
சுத்தானந்த பாரதி
  • கவியோகி சுத்தானந்தபாரதி ஐம்பெரும்காப்பியங்களையும் அணிகலன்களாக உருவகிக்கிறார்.
காதொளிரும் குண்டலமும் கைக்குவளையாபதியும்
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும்
மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போது
ஒளிரும் திருவடியும்
ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் ஆசிரியர்கள்
நூல்
சமயம்
பாவகை
ஆசிரியர்
நூல் அமைப்பு
சிலப்பதிகாரம்
சமணம்
நிலைமண்டில ஆசிரியப்பா + கொச்சக கலிப்பா
இளங்கோவடிகள்
3 காண்டம், 30 காதை, 5001அடிகள்
மணிமேகலை
பௌத்தம்
நிலைமண்டில ஆசிரியப்பா
சீத்தலைச் சாத்தனார்
30 காதை, 4755 வரிகள்
சீவகசிந்தாமணி
சமணம்
விருத்தம்
திருத்தக்கதேவர்
13 இலம்பகம்,  3145 பாடல்கள்
வளையாபதி
சமணம்
விருத்தம்
72 பாக்கள் கிடைத்துள்ளன
குண்டலகேசி
பௌத்தம்
விருத்தம்
நாதகுத்தனார்
224 பாடல்கள் கிடைத்துள்ளன
ஐம்பெருங் காப்பிய நூல்களின் சிறப்பு பெயர்கள்
நூல்
வேறுபெயர்கள்
சிலப்பதிகாரம்
  • தமிழின் முதல் காப்பியம்
  •   உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
  •  முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
  •  புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  •  ஒற்றுமைக் காப்பியம்
  •  ஒருமைப்பாட்டுக் காப்பியம்
  • தமிழ்த் தேசியக் காப்பியம்
  •  மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்ட காப்பியம்
  •  புரட்சிக்காப்பியம்
  •  சிறப்பதிகாரம் (உ.வே.சா)
  • பைந்தமிழ் காப்பியம்
மணிமேகலை
  •  மணிமேகலைத் துறவு
  • முதல் சமயக் காப்பியம்
  • அறக்காப்பியம்
  • சீர்திருத்தக்காப்பியம்
  • குறிக்கோள் காப்பியம்
  •  புரட்சிக்காப்பியம்
  • சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
  • கதை களஞ்சியக் காப்பியம்
  • பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
  • பசு போற்றும் காப்பியம்
சீவக சிந்தாமணி
  • மணநூல்
  • முக்திநூல்
  • காமநூல்
  • மறைநூல்
  • முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
  • இயற்கை தவம்
வளையாபதி
குண்டலகேசி
  • குண்டலகேசி விருத்தம்
  • அகல கவி

 

வீழ்ந்து வெண்மழை  தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு

ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி

தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்

சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத் தனவே .              – திருத்தக்கதேவர்‌.

 

பொருள்‌ : மலையின்மீது வெண்மேகங்கள்‌ தவழ்ந்து செல்கின்றன. அவ்வாறு மலையைவிட்டு வெண்மேகம்‌ நகர்வது பாம்பு தோலுரிப்பதனைப்‌ போன்று இருக்கிறது. மேகம்‌ நகர்ந்துவிட்டபின்‌, அம்‌ மலையானது தோலூரிக்கப்பட்ட பாம்புபோல்‌ இருக்கிறது. அங்கே வீழ்கின்ற அருவியின்‌ ஒலி, மத்தளம்போன்று ஒலிக்கின்றது. தேன்‌ உண்ணும்‌ வண்டுகள்‌ பாடுகின்றன. மயில்கள்‌ ஆடுகின்றன. ஆகையால்‌, இக்காட்சி ஒரு நாடகம்‌ நடப்பது போன்று இருக்கிறது.

சொற்பொருள்‌: விண்‌ – வானம்‌; வரை – மலை; முழவு – மத்தளம்‌; மதுகரம்‌ – தேன்‌ உண்ணும்‌ வண்டு.

ஆசிரியர்‌ குறிப்பு: திருத்தக்கதேவர்‌ சோழர்‌ அரச குலத்தில்‌ பிறந்தவர்‌. இவர்‌, சமண சமயத்தைச்‌ சார்ந்தவர்‌. இவரது காலம்‌ கி.பி. பத்தாம்‌ நூற்றாண்டு ஆகும்‌. இவர்‌ பாடிய மற்றொரு நூல்‌ நரி விருத்தம்‌ ஆகும்‌.

நூற்குறிப்பு : ஐம்பெருங்காப்பியங்களுள்‌ ஒன்று சீவகசிந்தாமணி. இந்நூலின்‌ கதைத்‌ தலைவன்‌ சீவகன்‌. அவன்‌ பெயரை இணைத்துச்‌ சீவகசிந்தாமணி என இந்நூல்‌ பெயர்‌ பெற்றது என்பர்‌. இந்நூலுக்கு மணநூல்‌ என்னும்‌ வேறு பெயரும்‌ உண்டு.

 

விவேகசிந்தாமணி

தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு

தியங்கியே கிடந்ததைக் கண்டு

தான்அதைச் சம்பு வின்கனி என்று

தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்

வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி

மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சிப்

போனது வண்டோ பறந்ததோ பழந்தான்

புதுமையோ இதுஎனப் புகன்றாள்.

 

பொருள்‌ : தேன்‌ உண்ணும்‌ வண்டு மலர்த்தேனை உண்டு மயங்கிக்‌ கிடந்தது. அக்கருநிற வண்டினை நாவற்பழமெனக்‌ கருதி மங்கை ஒருத்தி, தன்‌ கையில்‌ எடுத்துப்‌ பார்த்தாள்‌. அந்த வண்டானது, அவள்‌ முகத்தை வான்நிலவு என நினைத்தது. அவள்‌ கையைத்‌ தாமரையெனக்‌ கருதி, நிலவு வந்துவிட்டால்‌ மலர்குவிந்து தன்னை மூடிவிடும்‌ என அஞ்சியது. அதனால்‌, அவ்வண்டு அவள்‌ கையை விட்டுப்‌ பறந்தது. அம்மங்கை, பறந்தது வண்டா, பழமா? இஃது என்ன விந்தையாக இருக்கிறதே! என மயங்கிக்‌ கூறினாள்‌.

சொற்பொருள்‌ : மது- தேன்‌; தியங்கி – மயங்கி; சம்பு – நாவல்‌; மதியம்‌ – நிலவு.

நூல்‌ குறிப்பு : விவேகசிந்தாமணி என்னும்‌ இந்நூல்‌, புலவர்‌ பலரால்‌ இயற்றப்பட்ட பாக்களின்‌ தொகுப்பு. இந்நூலைத்‌ தொகுத்தவர்‌ யாரெனத்‌ தெரியவில்லை.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories