Blog

பெரியபுராணம்

55
Old Syllabus

பெரியபுராணம்

பெரியபுராணம்
பெரியபுராணத்தை சேக்கிழார் பெருமாள் இயற்றினார்
சேக்கிழார் குறிப்பு

சேக்கிழாரின் செந்தமிழ் | சேக்கிழாரின் செந்தமிழ் - hindutamil.in

சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்
பிறந்த ஊர் = குன்றத்தூர்
பெரியபுராணம், திருத்தொண்டர் புராணச்சாரம், திருப்பதிகக் கோவை இவரது படைப்புகளாகும்
கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார்,  இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர்
சுந்தரின் திருத்தொண்டர் தொகை அடியவர் பெருமையை கூறுகிறது.
இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பியால் திருத்தொண்டர் திருவந்தாதி பாடலிலும் அடியார்களின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ளது.
சுந்தரரின் திருத்தொண்டத்தொகை
முதல் நூல்
நம்பியாடார் நம்பியின் திருத்தொண்டத் திருவந்தாதி
வழி நூல்
சேக்கிழாரின் பெரியபுராணம்
சார்பு நூல்
இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாக கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொர் அடியராக அறுபத்து மூவரின்  சிறப்புகளை விளக்கி பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம்.
இதன் பெருமை காரணம் இது பெரியபுராணம் என்று அழைக்கப்படுகிறது.
“பக்திசுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.
அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லுக்கும் பெரியபுராணம் ஒப்பிடுகின்றது.
  • பெரியபுராணத்தில் 2 காண்டம் 13 சருக்கம் உள்ளது.
  • முதல் சருக்கம் = திருமலைச்சருக்கம்
  • இறுதி சருக்கம் = வெள்ளையானைச் சருக்கம்
  • நூலில் 63 நாயன்மார்களையும் 9 தொகை அடியார்களையும் கூறியுள்ளார்.
  • பெரியபுராணத்தின் தலைவன் = சுந்தரர்
  • நூலில் பெரும் பகுதி திருஞானசம்பதர் பற்றிய குறிப்பு உள்ளது.
  • சோழனின் மனதை சீவக சிந்தாமணி நூலில் இருந்து சைவத்தின் பக்கம் திருப்ப சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்.
நூல் சிறப்பு
  • “இறைவனே சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி எடுத்து கொடுக்க பாடினார்.
  • தமிழின் முதல் கள ஆய்வு நூல் பெரிய புராணம்
  • தமிழின் இரண்டாவது தேசியக் காப்பியம்
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை படைத்த “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” நூலில் “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனச் சிறப்பிக்கிறார்.
  • “சேக்கிழார் புராணம்” பாடியவர் = உமாபதி சிவம்
  • சிவஞான முனிகள், “எங்கள் பாக்கியப் பயனாகிய குன்றை வாழ் சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்” என கூறுகிறார்.
  • பெரியபுராணத்தை உலக பொது நூல் என்கிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.
பெரியபுராணம் வேறு பெயர்கள்
  • உத்தம சோழப் பல்லவன்
  • தொண்டர் சீர் பரவுவார்
  • தெய்வப்புலவர்
  • இராமதேவர்
  • மாதேவடிகள்
பெரியபுராணம் – பாடல் வரிகள்
மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால்
(பா.எ.59)
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்
(பா.எ.63)
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்
(பா.எ.67)
அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்
(பா.எ.69)
அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யாப்பார்
விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்
(பா.எ.73)
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
போல்வலங் கொண்டு சூழும் காட்சியின் மிக்க தன்றே.
(பா.எ.74)
நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளிசா லந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்.
(பா.எ.78)
பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பு:
காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்து ஆரவாரம் செய்கின்றன. நாட்டுக்கு வளம் தரம் காவிரி கால்வாய்களில் எங்கும் ஓடுகின்றது.
நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலைச்சுருள் விருந்தது. இதனைக் கண்ட உழவர் இதுதான் களைப் பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.
காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.
சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.
பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.
வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.
கரை எங்கும் இளைய அன்னங்கள் உள்ளன.
அதனால் நாடு நீர் நாடு என்ற சொல்லத்தக்கதாய் உள்ளது.
அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது
செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள், முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றை திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.
தென்னை, செருந்தி, நரந்தரம், அரசமரம், கடம்பமரம், பச்சிலை மரம், குராமரம், பனை, சந்தனம், நாகம், வஞ்சி – காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் வளர்ந்துள்ளன.
இவையே பெரியபுராணம் திருநாட்டுச் சிறப்பு ஆகும்
நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலைச்சுருள் விருந்தது. இதனைக் கண்ட உழவர் இதுதான் களைப் பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.
  • செந்நெல்லின் சூடுகள்
  • பலவகைப்பட்ட மீன்கள்
  • முத்துக்கள், மலர்த் தொகுதிகள்,  திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.
திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளவையாக பெரியபுராணம் குறிப்பிடுவன
  • தென்னை
  • செருந்தி
  • நரந்தரம்
  • அரசமரம்
  • கடம்பமரம்
  • பச்சிலை மரம்
  • குராமரம்
  • பனை
  • சந்தனம்
  • நாகம்
  • வஞ்சி – காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories