திருவிளையாடற் புராணம்
October 10, 2023
2025-01-11 13:57
திருவிளையாடற் புராணம்

நூல் குறிப்பு:
-
திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.
-
இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் 64 படலங்களும் உடையது.
-
இந்நூல் கந்தப்புராணத்தின் ஒரு பகுதியான “ஆலாசிய மான்மியத்தை’ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது
-
மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்கள் இதில் கூறப்பட்டுள்ளன
-
சிவஞான முனிவர் தம் படுக்கையின் இரு பக்கத்திலும் பெரியபுராணத்தையும், திருவிளையாடற் புராணத்தையும் வைத்து உறங்குவார்.
நூல் அமைப்பு:
-
காண்டம் = 3
-
படலம் = 64
-
பாடல்கள் = 3365
-
காண்டம்:
-
மதுரைக்காண்டம் (18 படலம்)
-
கூடற்காண்டம் (30 படலம்)
-
திருவாலவாய்க் காண்டம் (16 படலம்)
ஆசிரியர் குறிப்பு:
-
பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டம் திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்
-
தந்தை = மீனாட்சி சுந்தர தேசிகர்
-
பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
-
சிவபக்தி மிக்கவர்.
இவரின் படைப்புகள்:
-
திருவிளையாடற் போற்றிக்கலிவெண்பா
-
மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி
-
வேதாரண்யப் புராணம்(திருமறைக்காட்டுப் புராணம்)
திருவிளையாடற் புராணம் – பாடல் வரிகள்
இடைக்காடனார் மன்னனின் அவையில் கவிதை படித்தல்
கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்
மொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன்
வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல்.
(2615)
|
மன்னன் தன் புலமையை மதிக்காமை குறித்து இறைவனிடம் முறையிடல்
சந்நிதியில் வீழ்ந் து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்
நல் நிதியே திரு ஆலவா ய் உடை ய நாயகனே நகுதார் வேம்பன்
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட் டுச்
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி.
(2617)
என்னை இகழ்ந்தனனோ சொல் வடிவா ய் நின்இடம் பிரியா இமையப் பாவை
தன்னை யும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என் தன க்கு யாது என்னா
முன்னை மொழிந்து இடைக்காட ன் தணியாத முனிவு ஈர்ப்ப முந்திச் சென்றான்
அன்ன உரை திருச்செவியின் ஊறுபா டு என உறைப்ப அருளின் மூர்த்தி.
(2619)
|
இறைவன் கோவிலை விட்டு நீங்குதல்
போனஇடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்துவகை பொலியுமாற்றான்
ஞானமய மாகியதன் இலிங்கவுரு மறைத் துஉமையாம் நங்கை யோடும்
வானவர்தம் பிரானெழுந்து புறம்போய்த்தன் கோ விலின்நேர் வடபால் வையை
ஆனநதித் தென்பாலோர் ஆலயங்கண்டு அங்கு இனிதின் அமர்ந்தான் மன்னோ.
(2620)
|
கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன்ன ன் இறைவனை வேண்டுதல்
அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து
எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றாலோ
தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ
இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோயான் அறியேன் எந்தாய்! எந்தாய்!.
(2629)
|
இறைவனின் பதில்
ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்
நீங்குவம் அல்லேம் கண்டா ய் ஆயினும் நீயும் வேறு
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா.
(2637)
|
மன்னன் தன் பிழையைப் பொறுத்து அருளுமாறு இறைவனிடம் வேண்டுதல்
பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரம யோகி
விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்
புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ
எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான் இறைஞ்சினானே .
(2638))
|
மன்னன், புலவருக்கு மரியாதை செய்தல்
விதிமுறை கதலி பூகம் கவரிவா ல் விதானம் தீபம்
புதியதோர் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றல்
கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமே ற் கற்றோர் சூழ
மதிபுனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி.
(2641)
|
மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்
புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.
(2644)
|