சிற்றிலக்கியங்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி
October 11, 2023 2025-01-11 13:57சிற்றிலக்கியங்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி
சிற்றிலக்கியங்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலக் குறவஞ்சி
-
சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனிமனிதர்களைப் பாடின.
-
சமய நூல்கள் கடவுளரைப் பாடின சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின.
முத்தமிழ் காவியம்
-
அவற்றுள் இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி.
-
“முத்தமிழ் காவியம்” எனப்படும் நூல் = குற்றாலக் குறவஞ்சி
-
“முத்தமிழ் காப்பியம்” எனப்படும் நூல் = சிலப்பதிகாரம்.
குறவஞ்சி
-
குறவஞ்சி என்பது ஒருவகை நாடக (opera) இலக்கிய வடிவமாகும்.
-
இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
-
பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல்கொள்ள, குறவர் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறிகூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுவதால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது.
-
இது குறத்திப்பாட்டு என்றும் வழங்கப்படுகின்றது.
-
பரிசில் பெற்றுவரும் சிங்கிக்கும் சிங்கனுக்கும் இடையிலான உரையாடல் சுவைமிக்கது.
குற்றால குறவஞ்சி நூல் குறிப்பு
-
தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப் பாடப்பட்டது குற்றாலக் குறவஞ்சி.
திரிகூடராசப்பக் கவிராயர்
-
திரிகூட ராசப்பக் கவிராயரின் ‘கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்படும் நூல் = குற்றாலக் குறவஞ்சி
-
மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது.
-
திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர்.
-
குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.
-
‘திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்’ என்று சிறப்புப் பட்டப் பெயர் பெற்றவர்.
-
குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார்.
குறவஞ்சி இலக்கியம்
-
“கட்டினும் கழங்கினும்” என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் தோன்றியது குறவஞ்சி இலக்கியம்
-
குறவஞ்சி என்பது தொல்காப்பியர் கூறும் “வனப்பு” என்ற நூல் வகையுள் அடங்கும்
-
குறம், குறத்திப்பாட்டு என்னும் வேறு பெயர்களும் உண்டு
-
குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்ற பெயர்களும் உண்டு
-
96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று
-
குறிஞ்சி நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
-
குறி சொல்லும் மகளிரை ஔவையார் தன் குறுந்தொகைப் பாட்டில் “அகவன் மகள்” என அழைக்கிறார்
-
குறவஞ்சி அக இலக்கிய நூலாக இருப்பினும் தலைவன், தலைவி பெயர் கூறப்படும்
-
இயற்றமிழ், இசைத்தமிழ் இரண்டும் கலந்த இலக்கியம் குறவஞ்சி
-
குறவஞ்சி பல வகைப் பாக்கள் கலந்து வரப் பாடப்படும்.
-
குறவஞ்சி இலக்கியத்திற்கு முன்னோடி அடிப்படை நூல் = குமரகுருபரரின் மீனாட்சிக் குறம்
-
முதல் குறவஞ்சி நூல் = குற்றால குறவஞ்சி
-
பன்னிரு பாட்டியல் குறவஞ்சி
இறப்பு நிகழ்வெதிர் வெண்ணுமுக் காலமும்திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே |
குறவஞ்சி நூல்கள்
திருக்குற்றால குறவஞ்சி (முதல் குறவஞ்சி) |
திருகூடராசப்ப கவிராயர் |
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி |
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் |
தமிழரசி குறவஞ்சி |
வரத நஞ்சையப்ப பிள்ளை |
பெத்தலேகம் குறவஞ்சி |
வேதநாயக சாஸ்திரி |
கூட்டுறவுக் குறவஞ்சி |
தஞ்சைவாணன் |
வண்ணக்குறவஞ்சி |
விஸ்வநாத சாஸ்திரி |
குற்றாலக் குறவஞ்சி – குற்றால மலையின் வளம்
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே
– திரிகூட ராசப்பக் கவிராயர்,
பொருள்
வளைந்த இளம்பிறையைத் தன் சடையில் அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் மலை குற்றாலமலை. அதுதான் எங்கள் மலை. இந்த மலையில் ஆண் குரங்குகள் பெண் குரங்குகளுக்குப் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து தரும். உண்ணும்போது பெண் குரங்குகள் பழங்களைத் தவறவிட்டு விடும். அவை சிந்தும் பழங்களைக் கேட்டுத் தேவர்கள் கெஞ்சி நிற்பார்கள். உயர்ந்த எங்கள் மலையில் உள்ள கானவர்கள் வானத்தில் இருக்கும் தேவர்களைக் கண்சிமிட்டி அழைப்பார்கள். சித்தர்கள், இறப்பை நீக்கும் மூலிகைகளை எங்கள் மலையில் வளர்த்து வருவார்கள். அருவியின் அலை உயர்ந்து எழும்பிவானத்தையே தொடும். அந்த அலைநீரில் கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளின் கால்களும் தேரின் சக்கரங்களும் வழுக்கிவிழும்.
சொல்பொருள்
- வானரங்கள் – இச்சொல், பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும். இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது; மந்தி – பெண் குரங்கு; வான்கவிகள் – தேவர்கள்; கமனசித்தர் – வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்; காயசித்தி – மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை; பரிக்கால் – குதிரைக்கால்; கூனல் – வளைந்த; வேணி – சடை.
- மின்னார் – பெண்கள்; மருங்கு – இடை; சூல்உளை – கருவைத்தாங்கும் துன்பம்.
நூல்குறிப்பு : இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி. ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார். குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல். ஓசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன.