முத்தொள்ளாயிரம்
October 11, 2023
2025-01-11 13:57
முத்தொள்ளாயிரம்
நூல் குறிப்பு:
-
மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களை கொண்டது.
-
ஆயினும் இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
-
“புறத்திரட்டு” என்னும் நூல் வாயிலாக 108 வெண்பாக்களும், பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
-
வெண்பாவால் எழுதப்பட்ட நூல்
-
மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாக பாடுகிறது.
-
மூவேந்தர்களைப் பற்றிய பாடப்பட்ட 900 பாடல்களை கொண்ட நூல் என்பதால் முத்தெள்ளாயிரம் என்று பெயர் பெற்றது.
-
நூல் முழுமையாக கிடைக்கவில்லை
-
எழுதியவர், தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை.

-
இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரகக் கருதப்படுகிறார்.
முத்தெள்ளாயிரம் – பாடல்வரிகள்
1. சேரநாடு
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடை த்தரரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு
(தற்குறிப்பேற்ற அணி)
2. சோழநாடு
காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிைசக்கும் நாளோதை – காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசை த்தால் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு.
(உவமை அணி)
3. பாண்டியநாடு
நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும்-சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு
(உவமை அணி)
|
நாவலோ என்பதன் பொருள்:
நாள் வாழ் என்பது போன்ற வாழ்த்து
முத்தெள்ளாயிரம் குறிப்பிடும் சோழ நாட்டு வளம்:
உழவர்கள் நெய்போர் மீது ஏறி “நாவலோ” என்று கூறி மற்ற உழவர்களை அழைப்பர். இது போரில் யானை மீது நின்று “நாவலோ” என்று கூவி மற்ற வீரர்களை அழைப்பது போல் இருந்தது. இத்தகு வளம் சோழ நாட்டில் காணப்பட்டது.
முத்தெள்ளாயிரம் குறிப்பிடும் சேர நாட்டு வளம்:
வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.
முத்தெள்ளாயிரம் குறிப்பிடும் பாண்டிய நாட்டு நாட்டு வளம்:
கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது.