இராசராச சோழன் உலா
October 11, 2023
2025-01-11 13:57
இராசராச சோழன் உலா
இராசராச சோழன் உலா
-
உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
-
பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடுதலின் இப்பெயர் பெற்றது.
-
உலா என்பதற்குப் பவனிவரல் என்பது பொருள்.
-
தலைவன் வீதியில் உலாவர, அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியம் ஆகும்.
-
உலா கலிவெண்பாவால் இயற்றப்படும்.
-
இவ்விலக்கியம் உலாப்புறம் எனவும் வழங்கப்படும்.

உலாவின் முன்னிலை
-
பாட்டுடைத்தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடை சூழத் தன் ஊர்தியில் ஏறி உலா வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
உலாவின் பின்னிலை
-
உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாகக் கூறுவன உலாவின் பின்னிலை என்று கூறுவர்.
உலாவில் பெண்களின் ஏழு பருவங்கள்
-
ஏழு பருவப் பெண்களின் வயது முறையைப் பின் வருமாறு கூறுவர். பேதை 5 – 7, பெதும்பை 8 – 11, மங்கை 12 – 13, மடந்தை 14 – 19, அரிவை 20 -25, தெரிவை 26 – 32, பேரிளம் பெண் 33-40.
ஒட்டக்கூத்தர் ஆசிரியர் குறிப்பு
-
இராசராச சோழனுலாவைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்.
-
கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுகிறார்.
-
ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
-
அம்மூவரைப் பற்றியும் அவர் பாடிய மூன்று உலாக்களும் மூவருலா எனப்படுகிறது.
-
தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் முதலியன இவர் இயற்றிய வேறு நூல்கள் ஆகும்.
-
கூத்தர் என்பதே இவர் இயற்பெயர்.
-
ஒட்டம் (பந்தயம்) வைத்துப்பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்கூத்தர் எனப்பட்டார்.
-
இவரது காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஆகும்.