Blog

குயில் பாட்டு

66
Old Syllabus

குயில் பாட்டு

நூல்
குயில்பாட்டு
ஆசிரியர்
பாரதியார்
நூற்குறிப்பு
உலகம் இசையால் நிரம்பியிருக்கிறது. இசையென்பது அரங்குகளில் இசைக்கப்படும் செவ்வியல் இசைமட்டுமன்று, ஏட்டில் எழுதப்படாமலும் கருவிகளால் இசைக்கப்படாமலும் காற்று முழுவதும் கலந்திருப்பதும் இசைதான்.
வாய்மொழி இலக்கியமாய் மக்கள் இலக்கியமாய்ப் பரவிக் கிடக்கும் இசைத்தமிழ், தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுவது உண்டு.
அந்த இசையின் உருவகமாக நாம் கொள்ளுவது குயில்.
குயில்பாட்டு என்ற பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசப்படுகிறது.
குயில் பாட்டு பாரதியாரின் மற்றொரு புகழ் பெற்ற நூலாகும்.
இந்நூலில் ஆண், பெண் சமத்துவம் மற்றும் அனைத்து பிரிவினர்களுக்கும் காதல் உரியது முதலிய கருத்துக்களை கூறுகிறது.மாந்தோப்பில் குயில் ஒன்று பாட அக்குயிலின் கீதத்தில் கவிஞன் ஒருவன் காதல் கொள்கிறான்.அவன் மீது அந்த குயிலும் காதல் கொள்கிறது.அக்குயில் அவனை நான்காம் நாள் மாந்தோப்பிற்கு வரச்சொல்ல, அவனும் வருகிறான்.அக்குயில் முதலில் குரங்கிடமும், மாட்டிடமும் காதல் சொல்லி அனுப்ப, அந்தக்கவிஞன் கோபம் கொண்டு குயிலுடன் பேசுகிறான்.அதுசமயம் குயில் தனது முற்பிறவிக் கதையை கண்ணீருடன் சொல்கிறது.கவிஞன் மனமுருகி குயிலைத் தீண்ட அக்குயில் அழகு நிறைந்த பெண்ணாக மாறி கவிஞனை அடைகிறது.
குயில் பாடும் பாடல்கள் 3 அடிகளைக் கொண்ட 9 சந்தப்பாடல்களாகக் குறிப்பிடப்படுகிறது.
மேற்கோள்
“பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சி”
“காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”
“சோலைக்குயில் – காதல் – சொன்ன கதை அத்தனையும்
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றிய ஓர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டு
கொண்டேன் ஆன்ற தமிழ்ப் புலவீர் கற்பனையே ஆனாலும்
வேதாந்தமாக விரித்து பொருள் உரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?” என முடிக்கின்றார்
  • இக்கற்பனைக் கதையின் ஊடே பாரதி ஓர் உண்மையைப் பொதிந்து வைத்துள்ளார்
  • குயிலி, குரங்கன், மாடன், சேர இளவரசன் போன்றோர் எல்லாம் உருவகம் போலும்.
  • இந்நூல் முதன்முதலாக 1923-ல் பாரதி பிரசலாயத்தில் வெளியிடப்பட்டது
  • இதில் பாரதி கூறும் கருத்து யாது? என்பது குறித்து பலரும் பலவிதமாக ஆய்துள்ளனர்.
  • பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்.
  • அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வீறுகொண்டெழுந்த விடுதலை வேட்கைக்குத் தம் கவிதைகளால் உரம் ஊட்டியவர்.
  • இவருடைய வசன கவிதைகள் வால்ட்விட்மன் கலீல் கிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடத் தக்கவை.
  • தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதி பாரதியோடு தொடங்குகிறது எனலாம்.
  • முன்னைப் பழம் பொருளாய்ப் பின்னைப் புதுமை வாய்ந்ததாய தமிழ் மொழியைத் திறன்மிக்கதாய் ஆக்கும் அறிஞர் பெருமக்களுள் பாரதிக்கு ஓர் தனி இடம் உண்டு.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories