நாட்டுப்புறப்பாடல்கள்
October 12, 2023 2025-01-11 13:57நாட்டுப்புறப்பாடல்கள்
நாட்டுப்புறப்பாடல்கள்
நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர். |
நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் என்படுகிறது
வாய்மொழி இலக்கியம் என்று நாட்டுப்புறப்பாடலினை கூறுவர்
பல்வேறு தொழில்கள் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
நாட்டுப்புறப்பாடல்கள்
-
தமிழ் நாட்டுப்புறப் பாடலின் தந்தை = வானமாமலை
-
நாட்டுப்புறப் பாடலுக்கு “நாட்டார் வழக்காற்றியல்” என்ற வேறு பெயரும் உண்டு
-
நாட்டுப்புற பாடல்கள் நிலைத்த அமைப்பு உடையன இல்லை
-
நிலைத்த அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல் வகை பிசி
-
விடுகதையை தொல்காப்பியர் பிசி என்று கூறுகிறார்
-
தொல்காப்பியர் கூறும் பண்ணத்தி என்பது நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்கிறார் பேராசிரயர்
-
தொல்காப்பியர் கூறும் புலன் என்ற வனப்பு நாட்டுப்புறப் பாடலைக் குறிக்கும் என்கிறார் அழகப்பன்
-
வள்ளைப்பாட்டு என்பது உலக்கைப் பாட்டு
-
வள்ளைப் பாட்டைத் திருப்பொற்சுண்ணம் என்கிறார் மாணிக்கவாசகர்
-
தோழியர் இருவர் விளையாட்டாகப் பாடுவது திருச்சாழல்
-
தாலாட்டுப் பாடல் நீலாம்பரி ராகத்தில் பாடப்படும்
-
ஒப்பாரிப் பாடலின் வேறு பெயர்கள் = பிலாக்கணம், கையறுநிலை, இரங்கற்பா
-
காதல் சுவை மிகுந்த பாடல் தெம்மாங்கு(தேன்+பாங்கு)
-
பழமொழிப் பதிகம் பாடியவர் திருநாவுக்கரசர்
-
ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் = கலித்தொகை
-
முதல் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு = காற்றிலே மிதந்த கவிதை (மு.அருணாசலம்)
-
முதல் நாட்டுப்புறக் கதைப்பாட்டு = பவளக்கொடி மாலை (கருணானந்த சாமி)
உழவுத்தொழிலின் செயல்பாடுகள்:
-
நிலத்தைத் தெரிவு செய்தல்
-
நாற்றுப் பறித்தல்
-
நாற்று நடுதல்
-
நீர் பாய்ச்சுதல்
-
அறுவடை செய்தல்
-
போரடித்தல்
-
நெல் பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும்.
போரடித்தலின்போது பாடப்படும் பாடலின் சிலவரிகள்
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது
செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை
(நாட்டுப்புறப்பாடல்)
‘கடல்’ பாட்டின் சிலவரிகள்
விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா
அடிக்கும் அலை நம்தோழன் – ஐலசா
அருமைமேகம் நமதுகுடை – ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா
விண்ணின் இடி காணும் கூத்து – ஐலசா
ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனத்தில் வாங்கித் தானும் பாடிப்பாடிப் பழகிவிடுகிறார். இப்படித் தாளில் எழுதாத பாடல்தான், “நாட்டுப்புறப் பாடல்” எனப்படுகிறது. எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு நாட்டுப்புறப்பாட்டு. இதேபோல் எழுதப்படாத, எல்லாருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இவற்றை எல்லாம் “வாய்மொழி இலக்கியம்” எனக் கூறுவார்கள்.
