Blog

ஓரெழுத்து ஒருமொழி

Class 13 சொல்லகராதி

ஓரெழுத்து ஒருமொழி

நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை 42 எழுத்துகள் உள்ளதாகப் பவணந்தி முனிவர் கூறுகிறார்.

இவற்றில், நெடில் எழுத்துகள் – நாற்பது (40).

குறில் எழுத்துகள் – இரண்டு (2).

 ஓரெழுத்து ஒரு மொழிகள்:

உயிர் எழுத்து – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

மகர வரிசை – மா, மீ, மூ, மே, மை, மோ

தகர வரிசை – தா, தீ, தூ, தே, தை

பகர வரிசை – பா, பூ, பே, பை, போ

நகர வரிசை – நா, நீ, நே, நை, நோ

ககர வரிசை – கா, கூ, கை, கோ

சகர வரிசை – சா, சீ, சே, சோ

வகர வரிசை – வா, வீ, வை, வௌ

யகர வரிசை – யா

குறில் எழுத்து – நொ, து

 

ஓரெழுத்து ஒரு மொழி:

உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசையில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.

உயிர் நெடில்ஆறு எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழிகளாகப்பொருள் தருகின்றன.

 

வரிசை எண் உயிர் நெடில் பொருள்
1 பசு
2 கொடு
3 இறைச்சி
4 அம்பு
5 தலைவன்
6 மதகுநீர்தாங்கும் பலகை

 

மேற்கண்ட ஆறு உயிர் நெடிலுடன்  வல்லின ஒற்றுகளான க், ச், த், ப் உடன் இணைத்து உயிர்மெய் நெடில் எழுத்துகளாகி ஓரெழுத்து ஒருமொழி பொருளாகத் தருகின்றன.

 

  வரிசை(நெடில்) – 4

 

கா கூ கை கோ
சோலை பூமி ஒழுக்கம் அரசன்

 

 வரிசை (நெடில்) – 4

 

சா சீ சே சோ
இறந்து போ இகழ்ச்சி உயர்வு மதில்

 

  வரிசை (நெடில்) – 5

 

தா தீ தூ தே தை
கொடு நெருப்பு தூய்மை கடவுள் தைத்தல்

 

 வரிசை (நெடில்) – 5

 

பா பூ பே பை போ
பாடல் மலர் மேகம் கைப்பை செல்

 

மெல்லின  ஓரெழுத்து ஒருமொழிகள்

 

 வரிசை (நெடில்) – 5

 

நா நீ நே நை நோ
நாவு முன்னிலை ஒருமை அன்பு இழிவு வறுமை

 

 வரிசை (நெடில்) – 5

 

மா மீ மூ மே மை மோ
மரம் வான் மூப்பு அன்பு அஞ்சனம் முகத்தல்

 

இடையின  ஓரெழுத்து ஒருமொழி

 

  வரிசை(நெடில்) – 1

 

யா என்பதன் பொருள்  அகலம்

 

 வரிசை (நெடில்) – 4

 

வா வீ வை வௌ
அழைத்தல் மலர் வைக்கோல் கவர்

 

குறில் (இரண்டு)ஓரெழுத்து ஒருமொழிகள்

 

நொ (ந் + ) – நோய்

து (த் + ) – உண்

ஓர் எழுத்துச் சொற்கள்.

1. ______ புல்லை மேயும்.      விடை : ஆ

2. ______ சுடும்                           விடை : தீ

3. ______ பேசும்.                       விடை : கை

4. ______ பறக்கும்                   விடை : ஈ

5. ______ மணம் வீசும்          விடை : பூ

  1. தா – கொடு
  2. தீ = நெருப்பு
  3. பா = பாடல்
  4. தை = தைத்தல்
  5. வை = புல்
  6. மை = அஞ்சனம்

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories