அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
November 29, 2023 2025-04-01 7:50அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
அகரமுதலி
அகரமுதலியில் உயிரெழுத்து வரிசை:அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
அகரமுதலியில் மெய்யெழுத்து வரிசை: க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
அகரமுதலியில் அக்காள் என்னும் சொல் முதலில் வருமா? அண்ணன் என்னும் சொல் முதலில் வருமா ? மெய்யெழுத்து வரிசையைப் பாருங்கள்.
அக்காள் என்னும் சொல்தான் முதலில் வரும்.
அம்மா, அப்பா, அண்ணி, அங்காடி, அன்னம் என்னும் சொற்களை அகரமுதலி வரிசையில் எழுதுவதானால்
அங்காடி, அண்ணி, அப்பா, அம்மா, அன்னம் என்றுதான் எழுதுதல் வேண்டும்.
பயிற்சி அகரமுதலி வரிசையில் எழுதுக.
ஆமை, ஆசிரியர், ஆண்டு, ஆடு, ஆத்திரம், ஆயிரம், ஆவணி, ஆலை, ஆறு, ஆர்வம்.
அகரமுதலி வரிசை
எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.
அழகுணர்ச்சி, ஆரம்நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம்
பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு.
பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து,
பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன், மாணவன், மான், வெளவால்
படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், கசுரம், மகுடி
உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி