உவமைத் தொடரின் பொருளறிதல்
December 8, 2023 2025-05-14 12:04உவமைத் தொடரின் பொருளறிதல்
உவமைத் தொடரின் பொருளறிதல்
உவமைத் தொடர்கள்
நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.
(எ.கா)
1.மடை திறந்த வெள்ளம் போல் – தடையின்றி மிகுதியாக.
திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.
2.உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படைத் தன்மை – *** 2022 ***
பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.
பொருத்துக
காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல |
தற்செயல் நிகழ்வு |
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல |
எதிர்பாரா நிகழ்வு |
பசு மரத்து ஆணி போல |
எளிதில் மனத்தில் பதிதல் |
விழலுக்கு இறைத்த நீர் போல |
பயனற்ற செயல் |
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல |
ஒற்றுமையின்மை |
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
விடை : குன்றின் மேலிட்ட விளக்கைப் போல திருக்குறளின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்தது போல
விடை : வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டை காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களை துன்புறுத்துகின்றன.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
விடை : பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல பரிசுத் தொகையாக இலட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்குக் கோடி கிடைத்தது.
உடலும் உயிரும் போல
விடை : உடலும் உயிரும் போல கணவனும் மனைவியும் அன்போடு வாழ்ந்தன.
கிணற்றுத் தவளை போல
விடை : கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்
1. ஆயிரங்காலத்துப் பயிர் | நீண்டகாலமாக இருப்பது. |
2. கல்லில் நார் உரித்தல் | இயலாத செயல். |
3. கம்பி நீட்டுதல் | விரைந்து வெளியேறுதல் |
4. கானல்நீர் | இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது. |
5. கண்ணை மூடிக்கொண்டு | ஆராய்ந்து பாராமல். |
1. என் தாயார் என்னை ________ காத்து வளர்த்தார். (கண்ணை இமை காப்பது போல / தாயைக் கண்ட சேயைப் போல)
2. நானும் என் தோழியும் ________ இணைந்து இருப்போம். (இஞ்சி தின்ற குரங்கு போல / நகமும் சதையும் போல)
3. திருவள்ளுவரின் புகழை ________ உலகமே அறிந்துள்ளது. (எலியும் பூனையும் போல / உள்ளங்கை நெல்லிக்கனி போல)
4. அப்துல் கலாமின் புகழ் ________ உலகெங்கும் பரவியது. (குன்றின்மேலிட்ட விளக்கு போல / குடத்துள் இட்ட விளக்கு போல)
5. சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் ________ என் மனத்தில் பதிந்தன. (கிணற்றுத்தவளை போல / பசுமரத்தாணி போல)
1. தாமரை இலை நீர்போல
- பட்டினத்தார் வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர்போல ஒட்டாதது துறந்தார்
2. மழைமுகம் காணாப் பயிர்போல
- வெற்றியை எதிர்பார்த்து தோல்வி ஏற்பட்டதால் ரகு மழைமுகம் காணாப் பயிர்போல வாடி நின்றான்.
3. கண்ணினைக் காக்கும் இமை போல
- பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாத்து வளர்ப்பர்
4. சிலை மேல் எழுத்து போல
- கவிஞர்களின் கவிதைகள் சிலை மேல் எழுத்து போல மனதில் பதிந்தது