Blog

இயற்பியல்‌ அளவுகளின்‌ அளவீடுகள்‌

Class 50 பொது அறிவியல்

இயற்பியல்‌ அளவுகளின்‌ அளவீடுகள்‌

இயற்பியல் அளவுகள் மற்றும் அலகுகள்

அளவிடக்கூடிய அளவுகளை இயற்பியல் அளவுகள் என்கிறோம். இயற்பியல் அளவுகளை இரண்டாக வகைப்படுத்தலாம். அவை: அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் ஆகும்.

வேறு எந்தவொரு அளவினாலும் அளவிட முடியாத அளவுகளை அடிப்படை அளவுகள் என்கிறோம். எடுத்துக்காட்டு: நீளம், நிறை, காலம் மற்றும் வெப்பநிலை. வேறு அளவுகளினால் அளவிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எடுத்துக்காட்டு: பரப்பளவு, கன அளவு மற்றும் அடர்த்தி.

அலகு என்பது தெரியாத அளவு ஒன்றுடன் ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவு ஆகும். விதி அல்லது மரபின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட எண் மதிப்பை உடைய இயற்பியல் அளவே அலகு என்று வரையறுக்கப்படுகிறது. உதாரணமாக, அடி என்பது நீளத்தை அளவிடக்கூடிய அலகு ஆகும். 10 அடி நீளம் என்பது ‘1 அடி’ என்ற வரையறுக்கப்பட்ட நீளத்தைப் போன்று 10 மடங்கு என்பதைக் குறிக்கிறது.

F.P.S அலகு முறை

f.p.s அலகு முறை ஓர் பிரிட்டிஷ் அலகு முறையாகும். இம்முறையில் நீளம், நிறை மற்றும் காலத்தை அளக்க முறையே அடி (Foot), பவுண்ட் (Pound), வினாடி (Second) ஆகிய மூன்று அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

C.G.S அலகுமுறை

இது ஓர் காஸ்ஸியன் (Gaussian) முறையாகும். இம்முறையில் நீளம், நிறை மற்றும் காலத்தை அளக்க முறையே சென்டிமீட்டர், கிராம் மற்றும் வினாடி ஆகிய மூன்று அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

M.K.S முறை

நீளம், நிறை மற்றும் காலத்தை அளக்க முறையே மீட்டர், கிலோகிராம் மற்றும் வினாடி ஆகிய மூன்று அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

CGS, MKS மற்றும் SI அலகு முறைகள் மெட்ரிக் அல்லது தசம அலகு முறையாகும். ஆனால் FPS அலகு முறை மெட்ரிக் அலகு முறை அல்ல.

அலகுமுறை நீளம் நிறை காலம்
CGS சென்டிமீட்டர் கிராம் வினாடி
FPS அடி பவுண்ட் வினாடி
MKS மீட்டர் கிலோகிராம் வினாடி
அடிப்படை அளவு அலகு குறியீடு
நீளம் மீட்டர் m
நிறை கிலோகிராம் kg
காலம் வினாடி s
வெப்பநிலை கெல்வின் K
மின்னோட்டம் ஆம்பியர் A
ஒளிச்செறிவு கேண்டிலா cd
பொருளின் அளவு மோல் mol

 

நீளம்

இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் SI அலகு மீட்டர் ஆகும். ஒளியானது 1/ 29,97,92,458 விநாடியில் வெற்றிடத்தில் கடக்கும் தூரமே ஒரு மீட்டர் எனப்படும். நீளத்தின் SI அலகு மீட்டர் ஆகும்.

இயற்பியல் அளவு வாய்ப்பாடு அலகு
பரப்பு நீளம் x அகலம் மீ² (m²)
கனஅளவு அல்லது பருமன் நீளம் x அகலம் × உயரம் மீ3(m3)
அடர்த்தி நிறை / பருமன் கிகி/மீ3 (kg / m³)
திசைவேகம் இடப்பெயர்ச்சி/காலம் மீ/வி (m/s)
உந்தம் நிறை × திசைவேகம் கிகி மீ/வி (kgms-1)
முடுக்கம் திசைவேகம் /காலம் மீ/வி2 (m/s2)
விசை நிறை × முடுக்கம் கி கிமீ/வி² (kgms-2) அல்லது நியூட்டன் (N)
அழுத்தம் விசை / பரப்பளவு நியூட்டன் / மீ²(N/m²) அல்லது பாஸ்கல் (Pa)
ஆற்றல் (வேலை) விசை × தொலைவு நியூட்டன் × மீ (Nm) அல்லது ஜூல் (J)
பரப்பு இழுவிசை விசை / நீளம் நியூட்டன் / மீ (N/m)
தளக்கோணம் வட்டவில்/ ஆரம் rad
திண்மக்கோணம் மேற்பரப்பு/ஆரம்2 sr
கோணத்திசைவேகம் கோணஇடப்பெயர்ச்சி/ காலம் rad s-1
கோணமுடுக்கம் கோணத்திசைவேகம்/ காலம் rad s-2
நிலைமத் திருப்புத்திறன் நிறை × (தொலைவு)2 kg m²
திறன் வேலை / காலம் J s-1 அல்லது வாட் (W)
கணத்தாக்கு விசை விசை × காலம் N s
விசையின் திருப்புத்திறன் (திருப்பு விசை) விசை × தொலைவு N m
மின்னூட்டம் மின்னோட்டம் × காலம் A s அல்லது C
மின்னோட்ட அடர்த்தி மின்னோட்டம் / பரப்பு A m-2
காந்தத் தூண்டல் விசை/ (மின்னோட்டம் × நீளம்) N A-1 m-1 அல்லது tesla
விசை மாறிலி விசை / இடப்பெயர்ச்சி N m-1
ஃபிளாங் மாறிலி போட்டானின் ஆற்றல் / அதிர்வெண் J s
தன்வெப்பம் (S) வெப்ப ஆற்றல் / (நிறை × வெப்பநிலை) Jkg-1 K-1
போல்ட்ஸ்மேன் மாறிலி (k) ஆற்றல் / வெப்பநிலை JK-1

வானியல் அலகு(AU):

வானியல் அலகு என்பது புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு ஆகும். ஒரு வானியல் அலகு (1AU) =1.496 × 1011 மீ

ஒளி ஆண்டு:

ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம் செய்யும் தொலைவு ஆகும். ஒரு ஒளி ஆண்டு = 9.46 x 1015 மீ

விண்ணியல் ஆரம் (Parsec):

விண்ணியல் ஆரம் என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படுகிறது. ஒரு விண்ணியல் ஆரம் = 3.26 ஒளி ஆண்டு.

அணு நிறை அலகு

புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் போன்ற துகள்களின் நிறையை அணுநிறை அலகால் அளவிடலாம்.

அணுநிறை அலகு (1 amu) = C12 அணுவின் நிறையில் 1/12 மடங்கு ஆகும்.

10 – இன் அடுக்கு முன்னீடு குறியீடு
101 டெகா (deca) da
102 ஹெக்டோ (hecto) h
103 கிலோ (Kilo) k
106 மெகா (mega) M
109 ஜிகா (giga) G
1012 டெரா (tera) T
1015 பெட்டா (peta) P
1018 எக்ஸா (exa) E
1021 ஜீட்டா (zetta) Z
1024 யோட்டா (yotta) Y
10-1 டெசி (deci) da
10-2 சென்டி (centi) c
10-3 மில்லி (milli) m
10-6 மைக்ரோ (micro) µ
10-9 நானோ (nano) n
10-12 பிக்கோ (pico) p
10-15 ஃபெம்டோ (femto) f
10-18 ஆட்டோ (atto) a
10-21 செப்டோ (zepto) z
10-24 யோக்டோ (yocto) y

ரேடியன் (rad):

வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டவில் வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம், ஒரு ரேடியன் ஆகும்.

ஸ்டிரேடியன் (sr);

ஆரத்தின் வர்க்கத்திற்கு சமமான பரப்பு உடைய கோளப்பரப்பின் ஒரு பகுதி, கோளத்தின் மையத்தில் ஏற்படுத்தும் திண்மக்கோணம் ஒரு ஸ்டிரேடியன் ஆகும்.

பொருட்களின் அளவு மற்றும் தொலைவுகள் நீளம் (m)
அண்டத்தின் எல்லையின் அறிந்த தொலைவு 1026
பூமிக்கும், ஆன்ட்ரோமோடா விண்மீன் திரளுக்கும் இடையே உள்ள தொலைவு 1022
நமது விண்மீன்திரளின் அளவு 1021
பூமிக்கும் அருகில் உள்ள விண்மீனுக்கும் இடையேயான தொலைவு (சூரியனைத் தவிர) 1016
புளுட்டோவின் சராசரி சுற்றுப் பாதையின் ஆரம் 1012
பூமியில் இருந்து சூரியனின் தொலைவு 1011
பூமியில் இருந்து சந்திரனின் தொலைவு 108
பூமியின் ஆரம் 107
கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 104
கால்பந்தாட்ட மைதானத்தின் நீளம் 102
தாளின் தடிமன் 10-4
இரத்த சிவப்பணுக்களின் விட்டம் 10-5
ஒளியின் அலைநீளம் 10-7
வைரஸின் நீளம் 10-8
ஹைட்ரஜன் அணுவின் விட்டம் 10-10
அணுக்கருவின் அளவு 10-14
புரோட்டானின் விட்டம் (தடிமன்) 10-15

சில பொதுவான நடைமுறை அலகுகள்

(1) Fermi = 1 fm = 10-15m

(2)  1 Angstrom  = 1 A° = 10-10m

(3) 1 நானோமீட்டர் = 1 nm=10-9m

(4) 1 Micron = 1µm = 10-6m

(5) ஒளியாண்டு (வெற்றிடத்தில், ஒளியானது ஒரு ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு) 1 ஒளியாண்டு = 9.467 x 1015 m

(6) வானியல் அலகு- புவியிலிருந்து சூரியனின் சராசரி தொலைவு (1 AU = 1 Astronomical Unit) 1 AU = 1.496 x 1011 m

(7) 1 பர்செக் (பாரலாட்டிக் நொடி) (வில்லின் நீளம் ஒரு வானியல் அலகும் (1 AU), மையக் கோணம் ஒரு (one second) நொடி வில்லும் கொண்ட வட்டவில்லின் ஆரமே 1 பர்செக் (Parsec) ஆகும்). 1 பர்செக் = 3.08 x 1016 m = 3.26 ஒளியாண்டு.

பொருள் நிறையின் வரிசை முறைகள் (kg)
எலக்ட்ரான் 10-30
புரோட்டான் அல்லது நியூட்ரான் 10-27
யுரேனியம் அணு 10-25
இரத்தசிவப்பு அணுக்கள் 10-14
செல் 10-10
தூசித்துகள் 10-9
மழைத்துளி 10-6
கொசு 10-5
திராட்சைப்பழம் 10-3
தவளை 10-1
மனிதன் 102
மகிழுந்து 103
கப்பல் 105
சந்திரன் 1023
பூமி 1025
சூரியன் 1030
பால்வழித்திரள் 1041
காணக்கூடிய அண்டம் 1055
நிகழ்வுகள் கால இடைவெளியின் வரிசை முறைகள் (s)
நிலைத்தன்மை அற்ற துகளின் ஆயுட்காலம் 10-24
அணுக்கரு அளவை ஒளி கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 10-22
X கதிரின் அலைவு நேரம் 10-19
ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் சுற்றுக்காலம் 10-15
கண்ணுறு ஒளியின் (visible light) அலைவு நேரம் 10-15
ஜன்னல் கண்ணாடியை கண்ணுறு ஒளி கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 10-8
அணுவின் கிளர்ச்சி நிலையில் ஆயுட்காலம் 10-8
ரேடியோ அலைகளின் அலைவு நேரம் 10-6
செவிஉணர் ஒலியின் அலைவு நேரம் 10-3
கண் சிமிட்டும் நேரம் 10-1
இரு அடுத்தடுத்த இதய துடிப்புகளுக்கிடையேயான நேர இடைவெளி 100
நிலவில் இருந்து ஒளியானது புவியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 100
சூரியனில் இருந்து ஒளியானது புவியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 102
நியூட்ரானின் அரை ஆயுட்காலம் 103
செயற்கைக் கோளின் சுற்றுக் காலம் 104
புவி தன் அச்சைப் பொருத்து சுழல எடுத்துக் கொள்ளும் காலம் (ஒரு நாள்) 105
புவி சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் (ஒரு வருடம்) 107
மனிதனின் சராசரி ஆயுட்காலம் 109
எகிப்து பிரமிடுகளின் வயது 1011
அண்டத்தின் வயது 1017

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories