செய்வினை, செயப்பாட்டுவினை
January 18, 2025 2025-04-11 13:27செய்வினை, செயப்பாட்டுவினை
செய்வினை, செயப்பாட்டுவினை
செய்வினை, செயப்பாட்டுவினை:
செய்வினை
செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை.
ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.
புத்தகம் படிக்கிறேன்
கொசு கடித்தது.
நாயை அடிக்கிறான்
பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்.
தச்சன் நாற்காலியைச் செய்தான்
அவள் மாலையைத் தொடுத்தாள்
ராதா பொம்மையைச் செய்தாள்
செயப்பாட்டுவினை
செயப்படுபாருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை.
“படு” என்பதைப் போல, “உண், பெறு” முதலான துணைவினைகள் செயப்பாட்டு வினைகளாக அமைகின்றன. அவற்றைப் போலவே, எச்சங்களுடன் சேர்ந்து “ஆயிற்று, போயிற்று, போனது” முதலான துணை வினைகள் செயப்பாட்டுவினைகளை
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற 3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு‘பட்டது’ ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.
கோவலன் கொலையுண்டான். |
ஓவியம் குமரனால் வரையப்பட்டது. |
வீடு கட்டியாயிற்று. |
சட்டி உடைந்து போயிற்று. |
பணம் காணாமல் போனது. |
அப்துல் நேற்று வந்தான் | தன்வினைத் தொடர் |
அப்துல் நேற்று வருவித்தான். | பிறவினைத் தொடர் |
கவிதா உரை படித்தாள் | செய்வினைத் தொடர் |
உரை கவிதாவால் படிக்கப்பட்டது | செயப்பாட்டுவினைத் தொடர் |
பதவியைவிட்டு நீக்கினான் – இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.
“பதவியை விட்டு நீங்கினான்”
-
தன்வினை என்பது பிறரின் துணை இல்லாமல் ஒரு செயலை நாமாக செய்வது தன்வினை எனப்படும் .
-
ஒரு செயல் நம்மால் இயங்கப்படுவதைக் குறிக்கும் .
எ.கா: ராஜா பாடினான் .
-
இதில் ராஜா என்னும் எழுவாய் பாடினான் என்னும் செயலை குறிப்பதால் இது தன்வினை எனும் செய்யலை குறிக்கிறது.
-
வினையின் பயன் எழுவாயை சேறுமாயின் அது தன்வினை என கருதப் படும்.
“பதவியை விட்டு நீக்கினான்” – “பதவியை விட்டு நீங்கினான் “
-
இதில் நீக்கினான் எனும் பிறவினை சொல் நீங்கினான் எனும் தன்வினை செயலாய் மாறுகின்றது.
-
இவ்வாறு தன்வினை செயல்படுகின்றது.
-
நீங்கினான் என்பது பிறரோடு சேர்ந்து இல்லாமல் அவன் செயலை அவனே செய்யக்கூடியது ஆகும்.
சொற்றொடர் வகைகள்
செய்வினை – செயப்பாட்டுவினை
(௭.கா.) கயல்விழி திருக்குறளைப் படித்தாள் – செய்வினைத்தொடர்
(எழுவாய்) (செயப்படுபொருள்) (பயனிலை)
இத்தொடரைச் செயப்பாட்டுவினையாக்க,
அ. எழுவாயைச் செயப்படுபொருளாக்குதல் வேண்டும்.
ஆ. அதனுடன் மூன்றாம் வேற்றுமை உருபு சேர்த்தல் வேண்டும். ( கயல்விழி + ஆல் = கயல்விழியால்) செயப்படுபொருளில் உள்ள “ஐ” என்ற வேற்றுமை உருபை நீக்கி, எழுவாயாக மாற்றுதல் வேண்டும். (திருக்குறளை = திருக்குறள் + ஐ – ஐ நீக்கினால், திருக்குறள்)
இ. பயனிலையுடன் படு, பட்டது என்னும் துணைவினை சேர்த்தல் வேண்டும் (படித்தாள் – படிக்கப்பட்டது)
திருக்குறள் கயல்விழியால் படிக்கப்பட்டது – செயப்பாட்டு வினைத்தொடர்.
செயப்பாட்டு வினை – செய்வினை
(எ.கா) குறிஞ்சிக்கலி கபிலரால் இயற்றப்பட்டது – செயப்பாட்டுவினை
கபிலர் குறிஞ்சிக்கலியை இயற்றினார் – செய்வினை
இவ்வாறு செயப்பாட்டுவினைத் தொடரையும் செய்வினைத் தொடராக மாற்றலாம்.
செய்தி வெளிப்படும் திறன்
தொடர்களில் செய்தி வெளிப்படும் தன்மையினைப் பொருத்துச் செய்தித்தொடர், வினாத்தொடர், விழைவுத்தொடர், உணர்ச்சித்தொடர் எனப் பலவகைப்படுத்தலாம். விழைவுத்தொடர் வாழ்த்துதல்,வேண்டுதல், கட்டளையிடுதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும்.
(எ.கா) “முயற்சி திருவினையாக்கும்” என்பது ஆன்றோர் மொழி – செய்தித்தொடர்
பாடம் படித்தாயா ? – வினாத்தொடர்
நீடூழி வாழ்க! – விழைவுத்தொடர்
என்னே, அருவியின் அழகு ! – உணர்ச்சித்தொடர்
கண்ணன் பாடம் படித்தான். – உடன்பாட்டுத்தொடர் (செய்தி)
கண்ணன் பாடம் படித்திலன். – எதிர்மறைத்தொடர் (செய்தி)
அப்துல் நேற்று வந்தான் | தன்வினைத் தொடர் |
அப்துல் நேற்று வருவித்தான் | பிறவினைத் தொடர் |
கவிதா உரை படித்தாள் | செய்வினைத் தொடர் |
உரை கவிதாவால் படிக்கப்பட்டது | செயப்பாட்டுவினைத் தொடர் |
குமரன் மழையில் நனைந்தான் | உடன்பாட்டுவினைத் தொடர் |
குமரன் மழையில் நனையவில்லை | எதிர்மறைவினைத் தொடர் |
என் அண்ணன் நாளை வருவான் | செய்தித் தொடர் |
எவ்வளவு உயரமான மரம்! | உணர்ச்சித் தொடர் |
உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? | வினாத் தொடர் |
பூக்களைப் பறிக்காதீர் | கட்டளைத் தொடர் |
அவன் மாணவன்
இது நாற்காலி
|
பெயர்ப் பயனிலைத் தொடர் |