பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
January 31, 2025 2025-05-14 7:25பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
புள் என்பதன் வேறு பெயர் – பறவை; பறவைகள் இடம்பெயர்தல் – வலசைபோதல்; சரணாலயம் – புகலிடம்
க், ங் – நாவின் முதல், அண்ணத்தின் அடி ச், ஞ் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி த், ந் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
சிந்துசமவெளி அகழாய்வில் – பானைஓடுகள்
ஆதிச்சநல்லூரில் – முதுமக்கள் தாழிகள்
செம்பியன் கண்டியூரில் – கலையழகு மிகுந்த மண்கலங்கள்
கீழடியில் – சுடுமண் பொருள்கள்
பா நான்கு வகைப்படும்:
1. வெண்பா | செப்பலோசை |
2. ஆசிரியப்பா | அகவலோசை |
3. கலிப்பா | துள்ளல் ஓசை |
4. வஞ்சிப்பா | தூங்கலோசை |
1. இன்பம் தருவது | பண்புடையவர் நட்பு |
2. நட்பு என்பது | சிரித்து மகிழ மட்டுமன்று |
3. பெருமையை அழிப்பது | குன்றிமணியளவு தவறு |
4. பணிவு கொள்ளும் காலம் | செல்வம் மிகுந்த காலம் |
5. பயனின்றி அழிவது | நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் |
மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது:
1. நிறை | மேன்மை |
2. பொறை | பொறுமை |
3. மதம் | கொள்க |
4. மையல் | விருப்பம் |
திராவிட மொழிகளின் பழமையான இலக்கிய இலக்கணங்கள்:
1. தமிழ் | தொல்காப்பியம் |
2. கன்னடம் | கவிராஜ மார்க்கம் |
3. தெலுங்கு | ஆந்திர பாஷா பூஷனம் |
4. மலையாளம் | லீலா திலகம் |
அறிவுநிலை | அறியும் ஆற்றல் | உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு |
ஓரறிவு | உற்றறிதல் (தொடுதல் உணர்வு) | புல், மரம் |
ஈரறிவு | உற்றறிதல் + சுவைத்தல் | சிப்பி, நத்தை |
மூவறிவு | உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் | கரையான், எறும்பு |
நான்கறிவு | உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் | நண்டு, தும்பி |
ஐந்தறிவு | உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் | பறவை, விலங்கு |
ஆறறிவு | உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் + பகுத்தறிதல் (மனம்) | மனிதன் |
- குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
- மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்
- சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி
- சிந்து – ஒருவகை இசைப்பாடல்
- முக்குணம் – மூன்று குணங்கள் (சமத்துவம் – அமைதி, மேன்மை; இராசசம் – போர், தீவிரமான செயல்; தாமசம் – சோம்பல், தாழ்மை)
- பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதலிய பத்துக்குண அணிகள்.
- வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை
- வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
- ஊனரசம் – குறையுடைய சுவை
- நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
- வனப்பு – அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு
- தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி
- தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா. இராசமாணிக்கனார்
- தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவை கள் – க. ரத்னம்
- தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா. ராஜன்
- தமிழர் சால்பு – சு. வித்யானந்தன
- ஏறுகோள் – எருதுகட்டி
- ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
- பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
- நீலகிரி – கரிக்கையூர்
- மதுரை – கல்லூத்து மேட்டுப்பட்டி
- தேனி – சித்திரக்கல் புடவு
பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று – சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல
தத்தம் கருமமே கட்டளைக்கல் – ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் – அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்
தீரா இடும்பை தருவது – ஆராயாமை, ஐயப்படுதல்
நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்
பேணாமை – பாதுகாக்காமை
செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு
அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்
கண்டானாம் தான்கண்டவாறு – தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்
அறம்நாணத் தக்கது உடைத்து – அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும்
மாற்றாரை மாற்றும் படை – பகைவரையும் நட்பாக்கும் கருவி (செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல்)
ஐந்துசால்பு ஊன்றிய தூண் – 1. பிறரிடம் அன்பும் 2. பழிக்கு நாணுதலும் 3. அனைவரிடமும் இணக்கமும் 4. இரக்கமும் 5. உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்
தரிசு நிலம் : பயிர் செய்யாத நிலம்
சிவல் நிலம் : செந்நிலம் அல்லது சிவந்த நிலம்
கரிசல் நிலம் : கரிய நிறமுடைய மண் கொண்ட நிலம் கரிசல் நிலம் (அ) கரிந்த பாலை நிலம்
முரம்பு நிலம் : பருக்கைக் கற்கள் கொண்ட மேட்டு நிலம்
புறம்போக்கு நிலம் : ஊர்ப்புறத்தே குடிகள் வாழ்தலில்லாத நிலம்
சுவல் நிலம் : மேட்டு நிலம்
அவல் நிலம் : ‘அவல்’ என்பதன் பொருள் ‘பள்ளம்’. ஆகவே பள்ளமான நிலப்பகுதி அவல் என அழைக்கப்படுகிறது. விளை நிலமாகவும் அமைகிறது.
உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் – உயிரினும் ஓம்பப் படும்
ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது. – நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று
ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் – ஒழுக்கத்தின் எய்துவர்.
சிலம்பு, கிண்கிணி – காலில் அணிவது
அரை நாண் – இடையில் அணிவது
சுட்டி – நெற்றியில் அணிவது
குணடலம், குழை – காதில் அணிவது
சூழி – தலையில் அணிவது
இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – சிற்றில், சிறுபறை, சிறுதேர்
பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – கழங்கு, அம்மானை, ஊசல்
காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் – சருகும் சண்டும்
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை – மணி வகை
பெரிய மீசை சிரித்தார் – பண்புத்தொகை
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி – கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி – என்னும் அடியில் பாக்கம் என்பது – கடல் அருகே உள்ள ஊர் எனக் கூறுவர். · அல்லது நெய்தல் நிலத்து ஊர் எனவும் கூறுவர். · இவ்வடியில் சிற்றூர் என குறிக்கிறது.
பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் – வானத்தையும் பேரொலியையும் குறிக்கிறது
- பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
- வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்
- பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
- உமணர் – உப்பு விற்பவர்