Blog

சொற்களை இணைத்துப்‌ புதிய சொல்‌ உருவாக்குதல்‌

Class 22 சொல்லகராதி

சொற்களை இணைத்துப்‌ புதிய சொல்‌ உருவாக்குதல்‌

பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின – பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.

கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார் – கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.

இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள் – இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)

பூமணி    மணிமேகலை    தேன்மழை     மழைத்தேன்     மணிவிளக்கு     வான்மழை     விண்மணி     பொன்மணி     பொன்விலங்கு     செய்வான்     பொன்விளக்கு     பூமழை     பூவிலங்கு

ஒரு தனிச்சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமையும்.
எ.கா.          அ) மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார்.               ஆ) மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.

தொடர்சொற்றொடர், ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலைகளைக் கொண்டிருக்கும்.
எ.கா. அ) இனியநிலா பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.   ஆ) அன்வர் அரங்கத்திற்கு வந்து, நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.

கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத் தொடர்களும் கலந்து வரும்.
அ) மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான்.
பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான் – முதன்மைத் தொடர்
மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் – துணைத் தொடர்

 

1. அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார் (தனிச் சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக)

விடை : அழைப்புமணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.

2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார். (தொடர் சொற்றொடராக மாற்றுக.)

விடை : இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.

3. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்துகொண்டு, கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர். (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.)

விடை : ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக் கொள்வர். காலில் சலங்கை அணிவர். கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.

4.கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.(கலவைச் சொற்றொடராக மாற்றுக.)

விடை : கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

5. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)

விடை : ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.

 

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories