மாநிலச் சட்டமன்றம்
July 31, 2025 2025-07-31 6:03மாநிலச் சட்டமன்றம்
மாநிலச் சட்டமன்றம்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. 189 உறுப்பினர்கள் பொது தொகுதிகளிலிருந்தும் 45 உறுப்பினர்கள் தனித்தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சட்டமன்றத்தில் முதல் கூட்டத் தொடர் முதல் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து (1952). 3.5.1952 அன்று தொடங்கியது.
அரசமைப்பு உறுப்பு 333இன் கீழ் ஆங்கிலோ-இந்திய பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
06.04.2021 அன்று தமிழக சட்டமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடந்ததையொட்டி 16-வது தமிழக சட்டமன்றம் 07.05.2021 அன்று அமைக்கப்பட்டது.
அரசமைப்புத் திருத்தச்சட்ட முன்வரைவு
அரசமைப்பில் உள்ள ஒரு விதியில் திருத்தம் கோரும் சட்ட முன்வரைவுகள் அரசமைப்புத் திருத்தச்சட்டம் முன்வரைவு என்று அழைக்கப்படுகிறது. உறுப்பு 368 (2) ன் கீழ் வரும் அனைத்து விதிகளும் இதில் அடங்கும். இந்த சட்ட முன்வரைவினை நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் கொண்டு வரலாம்.
உறுப்பு 370
அரசமைப்பு உறுப்பு 370 என்பது ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு தன்னாட்சி தகுதி வழங்குவது ஆகும். இந்திய அரசு 5 ஆகஸ்டு 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியை ரத்துசெய்தது
சங்கரலிங்கனார்
சங்கரலிங்கனார் காந்திய வாதியும் இந்திய விடுதலைக்காக போராடிய தமிழ் வீரரும் ஆவார். 1895இல் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி வள்ளியம்மாளுக்கு மகனாக பிறந்தார். 1917இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். இராஜாஜியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சங்கரலிங்கனார் 1930இல் காந்தியுடன் தண்டி உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கு பெற்றார். மதராஸ் மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களைப் பிரித்து, சென்னையை தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமலு 1952இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பெயர் மாற்றும் பிரச்சனை எழுந்தது. இதைத் தொடர்ந்து 1956இல் மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கினார். பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 ஜூலை 27 அன்று விருதுநகரில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் 75 நாட்களைக் கடந்தது சங்கரலிங்கனார் உடல் நலிவுற்றதால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும் படி சி.என். அண்ணாதுரை, ம.பொ.சிவஞானம், ஜீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தும் அவர் ஏற்கவில்லை. 1956 அக்டோபர் 13 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தின் 76ஆம் நாள் சங்கரலிங்கனார் உயிர் நீத்தார்.
முக்கிய கூட்டு கூட்டங்கள்
வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1959- 6 மற்றும் 9 மே 1961
பயங்கரவாத தடுப்புச் சட்டம்-2002 மார்ச்
மதராஸ் மாகாணத்தை தமிழகம் என பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 27.07.1956 முதல் 13.10.1956 வரை 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
மதராஸ் மாநில பெயர்மாற்றச் சட்டம் 14 ஜனவரி 1969 ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
காந்திய வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தவர்.
தேர்வுக்குழு
தேர்வுக்குழுவில் குறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்களை குறிப்பிட்ட காரணத்திற்காக நியமிக்கப்பட்டிருப்பர். இந்த தேர்வுக்குழு முறை வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற மக்களாட்சி முறையிலிருந்து பிறந்தது ஆகும்.
மாநிலங்களவை விதிகள் மற்றும் நடைமுறையின் உறுப்பு 125இன் கீழ் எந்தவொரு குறிப்பிட்ட சட்ட முன்வரைவையும் தேர்வுக்குழுவுக்கு அனுப்பும்படி எந்த ஒரு உறுப்பினரும் தீர்மானம் கொண்டு வர முடியும். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்த சட்ட முன்வரைவு தேர்வு குழுவின் பரிசீலினைக்கு அனுப்பப்படும்.