அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் – திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்;
December 10, 2025 2025-12-10 14:19அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் – திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்;
அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் – திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்;
வள்ளுவரின் பொருளாதாரக் கருத்துக்கள் திருக்குறளின் இரண்டாம் பகுதியான பொருட்பாலில் மிகுதியாகக் காணப்படுகின்றன. பொருட்பால் செல்வத்தோடு தொடர்புடையது. அவர் மழையை வாழ்வின் பெரும் ஆதாரமாகக் கருதினார். மழை தான் உணவு தருகிறது. மழைதான் பொருளாதார வாழ்வில் அடிப்படையை உருவாக்குவதாக நம்பினார். வாழ்வின் அடிப்படை பொருளாதார தேவையான வேளாண்மை மழையைச் சார்ந்திருக்கிறது
உற்பத்திக் காரணிகள்
உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, முதல், அமைப்பு, காலம், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல கருத்துகளை திருவள்ளுவர் எளிமையாகச்
சொல்லியிருக்கிறார்.
“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற” என்கிறார் திருவள்ளுவர் (குறள் 61)
வேளாண்மை
திருவள்ளுவர் வேளாண்மையை, அடிப்படைப் பொருளாதார நடவடிக்கை என்கிறார். உலகத்தின் அச்சாணியாக வேளாண்மை இருக்கிறது. பொருளாதார ரீதியாக பிற துறைகளின் செழுமை வேளாண்மை துறையின் செழுமையைச் சார்ந்தது. உழவுத்தொழில் புரிபவன் மட்டுமே தலையாய மனிதன்.
“உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்” (குறள் எண் – 1032, அதிகாரம் உழவு)
உழவுத்தொழிலே மற்ற தொழில்களைவிட உயர்ந்ததாக வள்ளுவர் கருதுகிறார்.
பொது நிதி
திருவள்ளுவர் பொதுநிதி பற்றி பொது வருவாய், பொதுச் செலவு, நிதி நிர்வாகம் ஆகிய தலைப்புகளில் விரிவாக எழுதியிருக்கிறார். 1. வருவாய் உருவாக்குதல் 2. வருவாயை சேகரித்தல் 3. வருவாய் நிர்வாகம் 4. பொதுச் செலவு பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார்.
பொதுச் செலவு
திருவள்ளுவர் சமநிதிநிலை அறிக்கையைப் பரிந்துரை செய்கிறார்.
“ஒரு நாடு அதன் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருந்தால், அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை”என்கிறார்.
நிதிநிலைக் கொள்கை வகுக்கும்போது செய்ய வேண்டியதாக அவர் சொல்வது “எப்போதும் உபரி நிதிநிலை இருக்கட்டும், சிலநேரங்களில் சம நிதி நிலை இருக்கலாம், ஆனால் ஒரு போதும் பற்றாக்குறை நிதிநிலை மட்டும் கூடாது”. பொதுச் செலவை கீழ்க்காணும் மூன்று இனங்களுக்கு செலவிடுமாறு வலியுறுத்துகிறர் திருவள்ளுவர், 1.பாதுகாப்பு 2.பொதுப்பணிகள் 3.சமூகப்பணிகள்.
வெளிநாட்டு உதவி
திருவள்ளுவர் வெளிநாட்டு உதவி பெறுதலை ஆதரிக்கவில்லை. குறள் 739இல் வெளி உதவி கோரும் நாடுகள் நாடுகளே அல்ல என்கிறார்.
வேறுவகையில் சொல்வதனால் அவர் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தையே வலியுறுத்தினார்.
வறுமையும், பிச்சையெடுத்தலும் (இரத்தல்)
பசிக்கொடுமையிலிருந்து பெறும் விடுதலையே ஒவ்வொரு மனிதனும் பெறக்கூடிய அடிப்படை சுதந்திரம் என்றும் ஒவ்வொரு குடிமகனும் இதனை அனுபவிக்க வேண்டும் என்றும் திருவள்ளுவர் கருதினார். வறுமையே அனைத்து தீமைகளுக்கும் வேராய் இருந்து எக்காலத்தும் தீராத துன்பங்களைத் தருவதாகவும் கருதினார். ஆனால் இந்தியாவில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கையில் பிச்சையெடுப்பவர்கள், வசிப்பிடமின்றி சாலையோரம் வாசிப்பவர்கள் மற்றும் குப்பை எடுப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.
செல்வம்
செல்வம் வாழ்வதற்கான வழியே அன்றி அதுவே இலக்கல்ல என்று திருவள்ளுவர் கருதினார். செல்வம் சிறந்த மதிக்கத்தகுந்த வழிகளிலேயே ஈட்டப்பட வேண்டும் என்கிறார். செல்வத்தைப் பதுக்கி வைப்பது பயனற்றுப் போகும் என்றகிறார். அவரைப் பொருத்த வரையில் தொழில்தான் உண்மையான செல்வம், மேலும் உழைப்பு தான் மிகப் பெரும் வளம்.
நலம்பேணும் அரசு
ஒரு நலம்பேணும் அரசில் வறுமை, எழுத்தறிவின்மை, நோய்கள் முதலான இருக்காது என்கிறார்.
நலம் பேணும் அரசின் முக்கியக் கூறுகளாவன:
- நோய் நொடியற்ற ஆரோக்கியமான மக்கள்
- பெருஞ்செல்வம்
- நல்ல விளைச்சல்
- வளமும் மற்றும் மகிழ்ச்சியும்
- மக்களுக்கு முழுப் பாதுகாப்பு
